என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மற்றும் மேம்பட்ட 2021 கிளாசிக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மாடல் ஸ்டான்டர்டு ஸ்டிரீட் ட்வின் வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. 

    புதிய கோல்டு லைன் மாடலின் பக்கவாட்டு மற்றும் பியூவல் டேன்க் மீது மேட் சபையர் பிளாக் பெயின்ட் மற்றும் கோல்டு ஸ்டிரைப் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் கோல்டு ரிம் டேப் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் கிராபைட் பினிஷன் செய்யப்பட்டு இருக்கிறது.

     லிமிடெட் எடிஷன் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்

    ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் மொத்தத்தில் 1000 யூனிட்களே உற்பத்தி செய்யப்படும் என டிரையம்ப் அறிவித்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒவ்வொரு யூனிட் உடன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் சான்று வழங்கப்படுகிறது. இவைதவிர ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் தோற்றத்தில் ஸ்டான்டர்டு ஸ்டிரீட் ட்வின் மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடல் ஜூன் மாதம் முதல் சர்வதேச சந்தையில் கிடைக்கும். இந்தியாவிலும் ஸ்டிரீட் ட்வின் கோல்டு லைன் குறைந்த எண்ணிக்கையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் புதிய அல்காசர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கிரெட்டா எஸ்யுவியின் 7 சீட்டர் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் அறிமுகமானதும் புதிய 7 சீட்டர் வேரியண்ட் கிரெட்டா மற்றும் டக்சன் மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    சர்வதேச வெளியீட்டுக்கு முன் இந்த கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய கார் 6 மற்றும் 7 சீட்டர் வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் 6 சீட்டர் வேரியண்ட் டாப் எண்ட் மாடலில் மட்டுமே வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    ஹூண்டாய் கார்

    ஸ்பை படங்களில் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் தவிர வேறு எந்த விவரமும் வெளியாகவில்லை. முன்புற டேஷ்போர்டு மற்றும் லே-அவுட் ஹூண்டாய் கிரெட்டாவில் இருந்ததை போன்றே வழங்கப்படுகிறது. வடிவமைப்பில் ஹூண்டாய் அல்காசர் மாடலின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது. 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 சி கிளாஸ் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் சர்வதேச சந்தையில் புதிய சி கிளாஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 சி கிளாஸ் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய சி கிளாஸ் மாடல் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஏ கிளாஸ் மற்றும் இ கிளாஸ் மாடல்களில் உள்ள பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி புதிய கிரில், பொனெ்ட், மேம்பட்ட லைட் கிளஸ்டர் மற்றும் குறைந்த ஒவர்ஹேங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

    காரின் வெளிப்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும், வீல்பேஸ் முந்தைய மாடலை விட 25எம்எம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. காரின் ஒட்டுமொத்த நீளம் முந்தைய மாடலை விட 65 எம்எம் அதிகமாக இருக்கிறது. உள்புறம் புதிய மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் செங்குத்தாக தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    2021 மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் பல்வேறு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முதல் முறையாக சி கிளாஸ் மாடலில் 48V பெல்ட் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினை பொருத்தவரை இரண்டு 1.5 லிட்டர் என்ஜின்கள் வெவ்வேறு டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இதன் சி180 யூனிட் 169 பிஹெச்பி பவர், 263 என்எம் டார்க் செயல்திறனும், சி200 யூனிட் 203 பிஹெச்பி, 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    டாப் எண்ட் 1.5 லிட்டர் யூனிட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும். பெட்ரோல் தவிர 2.0 லிட்டர் யூனிட் சி300 வேரியண்டில் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 259 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் சி300 வேரியண்ட் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
    ஜீப் நிறுவனத்தின் ராங்கலர் மாடல் இந்திய உற்பத்தி மற்றும் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது 2021 ஜீப் ராங்லர் மாடலுக்கான உற்பத்தி ரங்கூன் ஆலையில் துவங்கிவிட்டதாக தெரிவித்து இருக்கிறது. புதிய ராங்லர் மாடல் இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீப் நிறுவனத்தின் இரண்டாவது எஸ்யுவி மாடல் ஆகும். புதிய ஜீப் ராங்லர் இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    உற்பத்தி தவிர, 26 ஜீப் விற்பனையாளர்கள் புதிய ராங்லர் மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளனர். புதிய ஜீப் ராங்லர் விலை மற்றும் சிறப்பம்சங்கள் வரும் மாதத்தில் தெரியவரும். முன்னதாக 2019 வாக்கில் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியா கொண்டு வரப்பட்டது. 

    ஜீப் ராங்கலர்

    உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் விலையை குறைக்க ஜீப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. ராங்லர் மாடலில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், டெயில்கேட் மீது கூடுதல் சக்கரம் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் நின்ஜா 300 பிஎஸ்6 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    கவாசகி நிறுவன விற்பனையாளர்கள் பிஎஸ்6 நின்ஜா 300 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கின்றனர். புதிய மோட்டார்சைக்கிள் இருவித நிறங்களில் கிடைக்கும் என கவாசகி தெரிவித்து உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட லைம் கிரீன் தவிர, லைம் கிரீன்/எபோனி மற்றும் பிளாக் நிறங்களில் புதிய பிஎஸ்6 நின்ஜா மாடல் கிடைக்கிறது.

    புதிய மாடல் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட கிராபிக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், குரோம் ஹீட்ஷீல்டு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

     கவாசகி நின்ஜா 300

    கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ-ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் மெக்கானிக்கல் அம்சங்கள் பற்றி கவாசகி இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    எனினும், புதிய மாடலில் பிஎஸ்6 ரக 296சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் செயல்திறன் முந்தைய மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 38.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புதிய மாடலின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் பிஎஸ்4 மாடல் விலை ரூ. 2.98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 ஏ கிளாஸ் லிமோசின் மாடலை மார்ச் 25 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இதன் உற்பத்தி அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 161 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் மற்றும் 147 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 7 ஸ்பீடு மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.

     மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின்

    மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் லிமோசின் மாடல் - டெனிம் புளூ, மோஜேவ் சில்வர், போலார் வைட், மவுன்டெயின் கிரே, இரிடியம் சில்வர் மற்றும் காஸ்மோஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது ஏ200, ஏ200டி மற்றும் ஏ35 ஏஎம்ஜி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.

    புதிய ஏ கிளாஸ் லிமோசின் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட்கள், பானரோமிக் சன்ரூப், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், MBUX கனெக்டிவிட்டி, டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. 2019 சர்வதேச மோட்டார் விழா ஒன்றில் ஹூண்டாய் அறிமுகம் செய்த கான்செப்ட் 45 மாடல் தற்சமயம் ஐயோனிக் 5 எனும் பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

    வடிவமைப்பை பொருத்தவரை புதிய ஐயோனிக் 5 மாடலில் பிக்சல் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் கிளாம்ஷெல் பொனெட் கான்செப்ட் மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 20 இன்ச் ஏரோடைனமிக் டிசைன் செய்யப்பட்ட டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பின்புறம் பிக்சலேட் செய்யப்பட்ட டெயில் லைட்கள், பிளாக் ஸ்டிரைப் உள்ளிட்டவை அசத்தல் தோற்றத்தை வழங்குகிறது. இதன் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் அதிக இடவசதி கொண்டுள்ளது. காரின் இருக்கைகளை பயனர் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஐயோனிக் 5 மாடலை 58kWh மற்றும் 72.6 kWh என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் பெற முடியும்.

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    இவற்றுடன் ரியர் மோட்டார் அல்லது முன்புறம் மற்றும் பின்புறம் என இரு மோட்டார்களை பெறும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் 72.6 kWh பேட்டரி ஆல்-வீல் டிரைவ் வசதி கொண்டுள்ளது. இது 301 பிஹெச்பி பவர், 605 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டூ-வீல் டிரைவ் 214 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    சிறிய 58kWh பேட்டரி, AWD 232 பிஹெச்பி பவர் / 605 என்எம் டார்க் மற்றும் 2WD 168 பிஹெச்பி பவர் / 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வழங்கப்படும் 350 kW அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் வசதி பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 18 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இது மற்ற அடாப்டர்களின் தேவையின்றி 400V அல்லது 800V சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஹேட்ச்பேக் மாடல் LXi, VXi, ZXi, ZXi+ மற்றும் ZXi+ டூயல் டோன் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய ஸ்விப்ட் மாடல் பியல் ஆர்க்டிக் வைட் மற்றும் சாலிட் பயர் ரெட், பியல் மிட்நைட் பிளாக் ரூப் மற்றும் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் வைட் ரூப் போன்ற டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டூயல் டோன் ஆப்ஷன் ZXi+ வேரியண்ட்டில் மட்டும் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ப்ரோஜக்டர் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், அலாய் வீல்கள், புளோட்டிங் ரூப் எபெக்ட் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. உள்புறம் 4.2 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே கொண்ட ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. 

     2021 மாருதி சுசுகி ஸ்விப்ட் பேஸ்லிப்ட்

    புதிய ஸ்விப்ட் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம், ஆட்டோ-போல்டு வசதி கொண்ட ORVMகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பிற்கு டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புறம் சீட் பெல்ட் ரிமைன்டர், ISOFIX பாயிண்ட்கள் வழங்கப்படுகின்றன. 

    2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கே12 சீரிஸ் டூயல் ஜெட் டூயல் விவிடி யூனிட் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 23.20 கிலோமீட்டரும், ஏஎம்டி கியர்பாக்சில் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. செயல்திறனும் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் 89 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆர்18 கிளாசிக் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 24 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆர்18 விலையை விட ரூ. 1.5 லட்சம் அதிகம் ஆகும்.

    புதிய பிஎம்டபிள்யூ மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் சேடில்பேக் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் உள்ள அக்சஸரீக்கள் எளிதில் கழற்றி மாட்டிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக்

    ஆர்18 கிளாசிக் மாடலில் 1802சிசி, பாக்சர் ட்வின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 89.9 பிஹெச்பி பவர், 158 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரி வழங்கப்பட்டு உள்ளன.

    பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக் மாடல் எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், மூன்று ரைடு மோட்கள், என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட் மற்றும் ரிவர்ஸ் கியர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்விப்ட் மாடல் காஸ்மெடிக் மாற்றங்கள், உள்புற அப்டேட், மெக்கானிக்கல் மாற்றங்களை பெறும் என தெரிகிறது. ஏற்கனவே ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடல் பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் இது இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    இந்திய சந்தையில் 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசுகி ஸ்விப்ட் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். அந்த வகையில் புதி பேஸ்லிப்ட் மாடல் அதிக அப்டேட்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசரில் புது வேரியண்ட் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை.  

     2021 மாருதி சுசுகி ஸ்விப்ட்

    காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் பெருமளவு மாற்றம் செய்யப்படாது என தெரிகிறது. புதிய ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடல் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், இது டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது.

    உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படாது என்றும் இதன் தோற்றம், டேஷ்போர்டு, கேபின் உள்ளிட்டவை தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதன்படி புது மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 

    போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, பிரீஸ்டைல் மற்றும் ஆஸ்பயர் போன்ற மாடல்களை மாற்றியமைத்தது. அதன்படி இவற்றின் பேஸ் வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு தற்சமயம் இரண்டு அல்லது மூன்று வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. 

    இதே முறையை தற்சமயம் இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவியிலும் பின்பற்ற போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த மாதம் போர்டு தனது இகோஸ்போர்ட் விலைகள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

     போர்டு இகோஸ்போர்ட்

    புகைப்படங்களின் படி புது வேரியண்ட் மேம்பட்ட டெயில்கேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. நம்பர் பிளேட் ஸ்லாட் பம்ப்பரில் இருந்து டெயில்கேட் நடுவில் மாற்றப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட் பகுதியும் குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு, பின்புறம் பம்ப்பர் சில்வர் பாக்ஸ் பிளேக் மற்றும் பிளாக் கிளாடிங் பெறுகிறது.

    இவைதவிர புது வேரியண்ட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்று சில்வர் ரூப் ரெயில்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் பாக் லேம்ப்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்எனி எஸ்யுவி மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் மாருதி சுசுகியின் ஜிம்னி மாடல் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. எனினும், மாருதி சுசுகி தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.

    இந்த நிலையில், ஜிம்னி மாடலை இந்திய சந்தையில் வெளியிடுவது குறித்து பிரீசலனை செய்து வருவதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஷாங் ஸ்ரீவஸ்தவா முதலீட்டாளர்கள் கூட்டம் ஒன்றில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

     மாருதி சுசுகி ஜிம்னி

    2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமானதும் ஜிம்னி மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. புதிய மாடலை எப்படி விளம்பரப்படுத்துவது, இந்தியாவில் எப்போது வெளியிடலாம் என்பது குறித்து ஆய்வு செய்வதாக அவர் மேலும் தெரிவித்தார் என கூறப்படுகிறது.

    முன்னதாக மாருதி நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஜிம்னி யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. இந்தியாவில் உற்பத்தியான முதற்கட்ட எஸ்யுவிக்கள் கொலம்பியா மற்றும் பெரு போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
    ×