என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2021 ஸ்விப்ட் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் 2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் பேஸ்லிப்ட் விலை ரூ. 5.73 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய ஸ்விப்ட் மாடல் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை பெற்று இருக்கிறது.

    தற்சமயம் புதிய ஸ்விப்ட் மாடல் விற்பனையகம் வந்துள்ளதை உறுதிப்படுத்தும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புது ஸ்விப்ட் மாடல் தற்சமயம் மேம்பட்ட முன்புற கிரில் கொண்டுள்ளது. இதன் மாற்றங்கள் காருக்கு புது தோற்றம் வழங்குகிறது. 

     2021 மாருதி சுசுகி ஸ்விப்ட்

    உள்புறம் குரூயிஸ் கண்ட்ரோல், தானாக மடிந்து கொள்ளும் ORVMகள், ட்வின்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4.2 இன்ச் MID நிற டிஎப்டி ஸ்கிரீன், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    2021 ஸ்விப்ட் பேஸ்லிப்ட் மாடலில் புதிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கே12 சீரிஸ் டூயல் ஜெட் டூயல் விவிடி யூனிட் ஆகும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் லிட்டருக்கு 23.20 கிலோமீட்டரும், ஏஎம்டி கியர்பாக்சில் லிட்டருக்கு 23.76 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டுள்ளது. செயல்திறனும் முன்பை விட அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் 89 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஒகினாவா நிறுவனத்தின் புதிய ஒகி100 எலெக்ட்ரிக் பைக் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் தனது முதல் எலெக்டிர்க் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புது மோட்டார்சைக்கிள் ஒகி100 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரியவந்துள்ளது. மேலும் இது விரைவில் அறிமுகமாகிறது.

    முன்னதாக இந்த நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான ப்ரோடோடைப் வெர்ஷனை 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் இந்த மாடலை அறிமுகம் செய்ய ஒகினாவா திட்டமிட்டது. எனினும், இது நடைபெறவில்லை. தற்சமயம் இந்த மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.

     ஒகினாவா ஒகி100

    புதிய ஒகினாவா ஒகி100 எலெக்ட்ரிக் பைக் விலை ரூ. 1 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடல் முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் என ஒகினாவா தெரிவித்து உள்ளது. இதற்கான பாகங்கள் 100 சதவீதம் உள்நாட்டில் இருந்து பயன்படுத்தப்படுகிறது.

    ஒகினாவா ஒகி100 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கும் என  தெரிகிறது. இந்த மாடலில் முழுக்க எல்இடி லைட்டிங் கொண்டிருக்கும். இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம்.
    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் துவக்க விலை ரூ. 5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ரெனால்ட் கைகர் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் வினியோகம் மார்ச் 3 ஆம் தேதி துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 

     ரெனால்ட் கைகர்

    இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

    ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பல்சர் 250 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பல்சர் 250 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் சோதனை செய்ய துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி பஜாஜ் நிறுவனம் புதிதாக 250 சிசி பல்சர் மாடலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய பல்சர் 250 முற்றிலும் புதிய வடிவமைப்பு, புது என்ஜின் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக புது மாடல் அளவில் பெரிதாக காட்சியளிக்கிறது. இது பல்சர் என்எஸ்200 மாடலை விட பெரிதாக இருக்கும் என தெரிகிறது.

    பல்சர் 250 மாடலில் எல்இடி லைட்டிங் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் முற்றிலும் புது என்ஜின் வழங்கப்படலாம். இதில் ஆயில்-கூல்டு மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி இது குறைந்த விலை மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ புது வேரியண்ட் விற்பனையகம் வர துவங்கி இருக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புது வேரியண்ட் விலை ரூ. 11.67 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த வேரியண்ட் ஸ்கார்பியோ எஸ்யுவியின் புதிய பேஸ் மாடல் ஆக அறிமுகமாகி இருக்கிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. விற்பனையகம் வந்துள்ள மாடல் நபோலி பிளாக் நிறம், 17 இன்ச் ஸ்டீல் வீல்களை கொண்டுள்ளது.

     மஹிந்திரா ஸ்கார்பியோ

    இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கிவிட்டது. இதன் வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேஸ் மாடலில் எஸ்5 வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ள அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    எனினும், சைடு-ஸ்டெப், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், வினைல் சீட், பம்ப்பரில் பாடி கிளாடிங் உள்ளிட்டவை புது வேரியண்ட்டில் இடம்பெறவில்லை. புதிய மாடலில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீரிங், மேனுவல் HVAC, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் மாடல் உற்பத்தியில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் மாடல் உற்பத்தியில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. 50 ஆயிரமாவது யூனிட் வதோதரா ஆலையில் உள்ள பெண்கள் குழுவினர் உற்பத்தி செய்தனர். தற்சமயம் எம்ஜி மோட்டார் நிறுவனம் மொத்த ஊழியர்களில் 33 சதவீதம் பெண்களை நியமித்து உள்ளது.  எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. 

    எம்ஜி நிறுவனம் மேம்பட்ட ஹெக்டார் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் துவக்க விலை ரூ. 12.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

    புது மாடலில் ட்வீக் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், 18 அங்குல அலாய் வீல்கள், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கை, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்ப்பட்டு இருக்கிறது.

     எம்ஜி ஹெக்டார்

    இத்துடன் ஹெக்டார் மாடலின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் சிவிடி டிரான்ஸ்மிஷனை அறிமுகம் செய்தது. இந்த என்ஜின் 141 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இதே என்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிசிடி யூனிட் வழங்கப்படுகிறது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இரண்டு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் ரூ. 16.75 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டன.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆர் நைன் டி மாடல் விலை ரூ. 18,50,000 என்றும் ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் மாடல் விலை ரூ. 16,75,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

    இரு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இரு மாடல்களும் சிபியு முறையில் இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட இருக்கின்றன. ஆர் நைன் டி கிளாசிக் ரோட்ஸ்டர், ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர் பெயருக்கு ஏற்றார்போல் ஸ்கிராம்ப்லர் ரக மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ஸ்கிராம்ப்லர்

    இது கிளாசிக் வடிவமைப்பு, எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் மற்றும் புதிய வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. மெக்கானிக்கல் அம்சங்கள் இரு மாடல்களிலும் ஒரே மாதிரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி 2021 பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி மற்றும் ஆர் நைன்டி ஸ்கிராம்ப்லர் மாடல்களில் 1170சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு, 2 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 107.2 பிஹெச்பி பவர், 116 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.

    இரு மாடல்களும் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளன. பாதுகாப்பிறஅகு ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் ப்ரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல், புதிய சஸ்பென்ஷன் ஸ்டிரட் மற்றும் டிராவல் டிபென்டென்ட் டேம்பிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 சபாரி மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 சபாரி மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புத்தம் புதிய டாடா சபாரி மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வெளியீட்டை தொடர்ந்து புதிய சபாரி மாடல் வினியோகம் துவங்கி இருக்கிறது. இதனை பிரபல பாடகர் பர்மிஷ் வெர்மா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார். புதிய சபாரியின் முதல் யூனிட் இவருக்கு வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

     டாடா சபாரி

    புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது.

    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இது பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

    புது ஸ்பை படங்களின் படி சுசுகி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் ஐசி என்ஜின் வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி புது மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், இன்டிகேட்டர்கள், பெரிய விண்ட்ஸ்கிரீன், ரியர்வியூ மிரர், டெயில் லேம்ப்கள் மற்றும் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    டிசைன் மற்றும் ஸ்டைலிங் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்த போதும், பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டூயல் டோன் வைட் / புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி புதிய ஸ்கூட்டர் பல்வேறு இதர நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில், சுசுகி பர்க்மேன் இ ஸ்கூட்டரில் எக்சாஸ்ட் வழங்கப்படவில்லை. இத்துடன் புது மாடல் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
    டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்டார் சிட்டி மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மாடல் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டீசரின்படி புதிய மாடல் பிஎஸ்6 வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடல் 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 வேரியண்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், புதிய மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

     2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்

    2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பிளாக்டு-அவுட் மிரர், க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர், கிராப் ரெயில், உயரமான விண்ட்ஸ்கிரீன், பியூவல் டேன்க் மீது டிவிஎஸ் பிராண்டிங் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்போதைய பிஎஸ்6 மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    புதிய 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், இகோ-திரஸ்ட் பியூவல்  இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    நிசான் இந்தியா நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவு 40 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய மைல்கல் இம்மாத துவக்கத்தில் எட்டியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்திய சந்தையில் புதிய மேக்னைட் எஸ்யுவி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. உற்பத்தியை வேகப்படுத்த ஆயிரம் ஊழியர்கள் கொண்ட ஆலையில் மூன்றாவது ஷிப்ட் துவங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. 

     நிசான் மேக்னைட்

    இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
    இந்தியாவில் இரண்டு புதிய அப்ரிலியா மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.

    அப்ரிலியா நிறுவனம் மிடில்-வெய்ட் மோட்டார்சைக்கிள் பிரிவில் இரண்டு புதிய மாடல்களை உருவாக்கி உள்ளது. அவை அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இவற்றின் கவர்ச்சிகர அம்சங்கள் பற்றிய ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. அப்ரிலியா நிறுவனம் ஆர்எஸ்660 மற்றும் டியோனா 660 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளது. 

    பியாஜியோ மோட்டார்சைக்கிள்

    இந்த இரண்டு மாடல்கள் வெளியிடுவதற்கு முன், தற்சமயம் இவற்றுக்கான முன்பதிவு துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு மாடல்களும் இந்தியாவில் இரண்டாவது காலாண்டு வாக்கில் இறக்குமதி செய்யப்படுகிறது. சிபியு முறையில் கொண்டுவரப்பட இருப்பதால், இவற்றின் விலை அதிகமாகவே இருக்கும். 

    அப்ரிலியா ஆர்எஸ்660 மற்றும் டியோனோ 660 ஆகிய இரு மாடல்களிலும் 660சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இரு மாடல்களும் வெவ்வேறு செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
    ×