என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி டீசர் பிளஸ் வெளியீடு
Byமாலை மலர்26 Feb 2021 10:42 AM GMT (Updated: 26 Feb 2021 10:42 AM GMT)
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2021 ஸ்டார் சிட்டி மாடல் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய மாடல் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசரின்படி புதிய மாடல் பிஎஸ்6 வேரியண்டை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடல் 2020 ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 வேரியண்ட் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், புதிய மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், பிளாக்டு-அவுட் மிரர், க்ளியர் லென்ஸ் இன்டிகேட்டர், கிராப் ரெயில், உயரமான விண்ட்ஸ்கிரீன், பியூவல் டேன்க் மீது டிவிஎஸ் பிராண்டிங் வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்போதைய பிஎஸ்6 மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், இகோ-திரஸ்ட் பியூவல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
Next Story
×