என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 இஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 53,920 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலில் ஸ்ப்ரிங்-இன்-ஸ்ப்ரிங் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் புதிய ரியர் வியூ மிரர்கள், மேம்பட்ட டிசைன் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டுள்ளது. சிறு மாற்றங்கள் தவிர பஜாஜ் பிளாட்டினா 100 ரக்கட் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சம் கொண்ட விலை குறைந்த மாடல் ஆகும்.

     பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்

    புதிய பஜாஜ் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் காக்டெயில் வைன் ரெட் மற்றும் எபோனி பிளாக் மற்றும் சில்வர் டீகல் நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பிளாட்டினா 100 மாடலில் 102சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த என்ஜின் 7.79 பிஹெச்பி பவர், 8.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
    ஜாகுவார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஜாகுவார் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை மார்ச் 23 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்கியது.

     ஜாகுவார் ஐ பேஸ்

    ஜாகுவார் ஐ பேஸ் மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த கார் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, போர்டோபினோ புளூ, பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
    ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் புது மினி எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மினி எஸ்யுவி மாடல் பையான் என அழைக்கப்படுகிறது. இது ஹூண்டாய் கோனா, டக்சன், சேன்டா எப்இ மற்றும் நெக்சோ மாடல்களின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.

    புதிய மினி எஸ்யுவி மாடல் ஒற்றை கிரில், மெல்லிய எல்இடி டிஆர்எல்கள், முக்கோண வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப்களை கொண்டுள்ளது. இந்த மாடல் 16 அல்லது 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் அம்பு வடிவ எல்இடி டெயில் லேம்ப்கள், சிவப்பு நிற ஸ்டிரைப், பிளாக்டு-அவுட் டெயில் கேட் உள்ளது. 
     

     ஹூண்டாய் பையான்

    உற்புறம் புது மினி எஸ்யுவி மாடலில் 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8-இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வயர்லெஸ் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கேபின் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் பையான் மாடலில் 1.0 லிட்டர் டி-ஜிடிஐ என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது 100 பிஹெச்பி அல்லது 120 பிஹெச்பி திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி அல்லது 6 ஸ்பீடு ஐஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.

    இதுதவிர 1.2 லிட்டர் என்ஜினும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின்  பிஹெச்பி திறன் கொண்டது ஆகும். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்குகிறது.
    கவாசகி நிறுவனம் 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


    கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. புதிய நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 3.18 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பிஎஸ்4 மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும். 

    இந்தியாவில் கவாசகி நின்ஜா 300 பிஎஸ்4 மாடலின் விற்பனை 2019 டிசம்பர் மாத வாக்கில் நிறுத்தப்பட்டது. புதிய 2021 மாடலில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் என்ஜின் மட்டும் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. 

     கவாசகி நின்ஜா 300

    அதன்படி 2021 நின்ஜா 300 பிஎஸ்6 மாடலில் 296சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 38.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி நின்ஜா 300 பிஎஸ்6 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோ-ஷாக், டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.


    டிவிஎஸ் மோட்டாரம் கம்பெனி 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடல் விலை ரூ. 68,645 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக்  கொண்டிருக்கிறது.

    இத்துடன் இகோ-திரஸ்ட் பியூவல் இன்ஜெக்ஷன் (ET-Fi), யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. 2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் புதிதாக பிளாக் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பிளாக் புளூ, கிரே பிளாக், ரெட் பிளாக் மற்றும் வைட் பிளாக் நிறங்களிலும் கிடைக்கிறது.

     2021 ஸ்டார் சிட்டி பிளஸ்

    புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் 109 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.08 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் உள்ள ET Fi தொழில்நுட்பம் 15 சதவீதம் கூடுதல் மைலேஜ் வழங்கும். 

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2021 ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் 5 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகளும், டாப் எண்ட் மாடலின் முன்புறம் ரோட்டோ பெட்டல் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
    டொயோட்டா நிறுவனம் இந்திய விற்பனையில் 36 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகனங்கள் விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டது. அதன்படி டொயோட்டா நிறுவன வாகனங்கள் விற்பனை 2020 பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது 35.96 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது. 

    கடந்த மாதம் டொயோட்டா நிறுவனம் 14,075 யூனிட்களை விற்பனை செய்தது. 2020 பிப்ரவரி மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 10,352 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. மாடல் வாரியாக விற்பனை விவரங்களை டொயோட்டா வெளியிடவில்லை. 

     டொயோட்டா கார்

    எனினும், டொயோட்டா அறிமுகம் செய்த புது மாடல்களே விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் டொயோட்டா நிறுவனம் மேம்பட்ட இன்னோவா க்ரிஸ்டா மாடலை அறிமுகம் செய்தது. பின் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மற்றும் லெஜன்டர் போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    இவைதவிர டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் கிளான்சா போன்ற மாடல்களும் உள்நாட்டு விற்பனையை அதிகப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜனவரி 2021 மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 11,126 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அதன்படி மாதாந்திர அடிப்படையில் டொயோட்டா நிறுவனம் 26.51 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
    போர்டு நிறுவனத்தின் இகோஸ்போர்ட் புது வேரியண்ட் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    போர்டு மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது வேரியண்ட் வெளியீட்டை உணர்த்தும் வகையில் போர்டு நிறுவனம் இகோஸ்போர்ட் எஸ்இ மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது.

    டீசரின்படி புது வேரியண்ட் டெயில் கேட் பகுதியில் ஸ்பேர் டையர், பின்புறம் புது வடிவமைப்பு, குரோம் கார்னிஷ் மற்றும் பாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. புது இகோஸ்போர்ட் மாற்றங்கள் பற்றி போர்டு தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

     போர்டு இகோஸ்போர்ட்

    இவைதவிர புது வேரியண்ட்டில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போதைய வேரியண்டில் உள்ளதை போன்று சில்வர் ரூப் ரெயில்கள், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் பாக் லேம்ப்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    கடந்த மாதம் போர்டு தனது இகோஸ்போர்ட் விலைகள் குறைக்கப்பட்டன. சமீபத்தில் இகோஸ்போர்ட் எஸ்இ வேரியண்ட் விற்பனையகம் வந்தடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ளலாம்.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு பராமரிப்பு சேவை வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதன் வினியோகம் ஜூன் 30 ஆம் தேதி துவங்குகிறது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
    சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா சூப்பர்பைக் விரைவில் இந்தியா வரும் என தகவல் வெளியாகி உள்ளது.


    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் 2021 ஹயபுசா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறது. இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கும் நிலையில், இதற்கான தேதியை சுசுகி இன்னும் அறிவிக்கவில்லை.

    தற்போது இந்த மாடல் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் இந்திய வெர்ஷன் சர்வதேச மாடலை போன்றே இருக்கும் என தெரிகிறது. 2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. 

     2021 சுசுகி ஹயபுசா

    ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புது மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் தொடர்ந்து சோதனை செய்யப்படுகின்றன.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி மாடல்களை இந்திய சந்தையில் சோதனை செய்கிறது. முன்னதாக இரு மாடல்களின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது இரண்டு புதிய கார்களும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை செய்யப்படுகிறது.

    இரண்டு புது மாடல்களும் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புது சிஎன்ஜி வேரியண்ட் டியாகோ மற்றும் டிகோர் பேஸ்லிப்ட் மாடல்களை தழுவி உருவாகி இருக்கின்றன. இந்த வேரியண்ட் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது.

    ஸ்பை படங்களின்படி டியாகோ சிஎன்ஜி வேரியண்ட் மிட்-ரேன்ஜ் மாடல் என தெரியவந்துள்ளது. இதில் மல்டி-ஸ்போக் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. டிகோர் மாடல் பேஸ் வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. இது ஸ்டீல் ரிம்களை கொண்டுள்ளது.

     டாடா டிகோர்

    மேம்பட்ட பிஎஸ்6 ரக டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் கிரில், ப்ரோஜக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பாக் லேம்ப்கள், ஷார்க் பின் ஆன்டெனா, எல்இடி ஹை மவுண்ட் ஸ்டாப் லேம்ப், எல்இடி டெயில் லைட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என தெரிகிறது.
    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ததில் மாருதி சுசுகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ‘எஸ் பிரஸ்ஸோ, ஸ்விப்ட், விடாரா பிரெஸ்ஸா' உள்ளிட்ட மாருதி சுசுகி வாகனங்கள் ஒரு தொகுதியாக குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு உள்ளது.

    1986-87 நிதி ஆண்டில் இருந்தே மாருதி சுசுகி வாகன ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. 1987 ஆண்டு செப்டம்பர் மாதம் 500 கார்கள் ஹங்கேரி நாட்டுக்கு கப்பலில் அனுப்பப்பட்டன. 2012-13 நிதி ஆண்டில் 10 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி என்ற இலக்கை மாருதி சுசுகி அடைந்தது. 

     மாருதி சுசுகி கார்

    இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஐரோப்பாவில் உள்ள வளர்ந்த சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களில் சிறப்பு கவனம் செலுத்தியதால் 8 ஆண்டுகளில் 20 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி ஆயுக்காவா கூறுகையில், “எங்கள் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் உற்பத்தி செய்யவேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்கு மாருதி சுசுகி நிறுவனம் 20 லட்சம் வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருப்பது சாட்சியாகும்” என்றார்.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் வி8 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    லேண்ட் ரோவர் நிறுவனம் சக்திவாய்ந்த டிபென்டர் வி8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய லேண்ட் ரோவர் டிபென்டர் வி8 மாடல் 518 பிஹெச்பி பவர் திறன் கொண்டுள்ளது. இந்த மாடல் இதுவரை உருவானதிலேயே அதிக திறன் கொண்ட டிபென்டர் வேரியண்ட் ஆகும். 

     லேண்ட் ரோவர் டிபென்டர் வி8

    புதிய டிபென்டர் மாடலின் உள்புறம் 11.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் பூஸ்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. லேண்ட் ரோவர் டிபென்டர் மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட ஏஜெ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த என்ஜின் 518 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
    ×