search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி கார்
    X
    மாருதி சுசுகி கார்

    வாகனங்கள் ஏற்றுமதியில் புது சாதனை படைத்த மாருதி சுசுகி

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்ததில் மாருதி சுசுகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து 20 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ‘எஸ் பிரஸ்ஸோ, ஸ்விப்ட், விடாரா பிரெஸ்ஸா' உள்ளிட்ட மாருதி சுசுகி வாகனங்கள் ஒரு தொகுதியாக குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு உள்ளது.

    1986-87 நிதி ஆண்டில் இருந்தே மாருதி சுசுகி வாகன ஏற்றுமதியை மேற்கொண்டு வருகிறது. 1987 ஆண்டு செப்டம்பர் மாதம் 500 கார்கள் ஹங்கேரி நாட்டுக்கு கப்பலில் அனுப்பப்பட்டன. 2012-13 நிதி ஆண்டில் 10 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி என்ற இலக்கை மாருதி சுசுகி அடைந்தது. 

     மாருதி சுசுகி கார்

    இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஐரோப்பாவில் உள்ள வளர்ந்த சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய பிராந்தியங்களில் சிறப்பு கவனம் செலுத்தியதால் 8 ஆண்டுகளில் 20 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி ஆயுக்காவா கூறுகையில், “எங்கள் நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் உற்பத்தி செய்யவேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்கு மாருதி சுசுகி நிறுவனம் 20 லட்சம் வாகனங்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருப்பது சாட்சியாகும்” என்றார்.
    Next Story
    ×