என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஆடி நிறுவனத்தின் புதிய எஸ் சீரிஸ் ஸ்போர்ட்பேக் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்போர்ட்பேக் மாடல் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. வெளியீட்டை உணர்த்தும் வகையில் ஆடி நிறுவனம் புது காரின் முன்புற படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறது.
டீசரின்படி புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் சிங்கில்-பிரேம் கிரில், எஸ்5 பேட்ஜிங், எல்இடி டிஆர்எல், ஹெட்லேம்ப், காண்டிராஸ்ட் நிற ORVMகள், பாக் லைட்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் பெரிய அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், குவாட்-டிப் எக்சாஸ்ட் மற்றும் ஸ்லோபிங் ரூப்-லைன் வழங்கப்படுகிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலில் 3.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 349 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது ஆட்டோ, கம்பர்ட், டைனமிக் மற்றும் இன்டிவிஜூவல் போன்ற டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தனது எஸ்யுவி மாடல் இது தான் என அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்யுவி மாடலான விட்டாரா பிரெஸ்ஸா இந்திய சந்தையில் ஆறு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த மைல்கல் விற்பனையை மாருதி சுசுகி நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் எட்டியுள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் பிரெஸ்ஸா மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே ஆண்டில் விட்டாரா பிரெஸ்ஸா ஒரு லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது.
அதிக வரவேற்பை தொடர்ந்து இந்த எஸ்யுவி ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் அக்டோபர் 2017 வாக்கில் இது இரண்டு லட்சம் யூனிட்களை கடந்தது. இந்த இலக்கை மாருதி சுசுகி ஒன்பது மாதங்களில் எட்டியது. முதற்கட்டமாக பிரெஸ்ஸா மாடல் 1.3 லிட்டர் டீசல் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த என்ஜின் 89 பிஹெச்பி பவர், 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டது. இதன்பின் பிஎஸ்6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. இது 103 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
2019 பிப்ரவரி மாதத்தில் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் நான்கு லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்தது. பின் 2019 டிசம்பரில் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானது. கடந்த மாதம் பிரெஸ்ஸா மாடல் 11,585 யூனிட்கள் விற்பனையானது.
டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிளை சிங்கில் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரைடிங் மோட்களுடன் வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடலின் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.28 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டூயல் சேனல் வேரியண்ட் விலை ரூ. 1.33 லட்சம் ஆகும்.
புதிய மாடலில் ஏபிஎஸ் நுட்பத்தில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவை டூயல் சேனல் ஏபிஎஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடலில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்றுவித ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 197.75சிசி, 4-ஸ்டிரோக், 4-வால்வ், ஆயில்-கூல்டு என்ஜின் மற்றும் ரேஸ் டியூன் செய்யப்பட்ட பியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இதன் அர்பன் மற்றும் ரெயின் மோட்கள் 17.08 பிஹெச்பி பவர், 16.51 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இதன் ஸ்போர்ட் மோட் 20.54 பிஹெச்பி பவர், 17.25 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ரேஸ் டியூன் செய்யப்பட்ட ஸ்லிப்ர் கிளட்ச் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எம் சீரிஸ் மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் எம்340ஐ எக்ஸ்டிரைவ் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஸ்போர்ட்ஸ் செடான் மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு பிஎம்டபிள்யூ ஆன்லைன் தளத்தில் நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

புதிய பிஎம்டபிள்யூ மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவின் பிரபல பந்தய களத்தில் ரேசிங் பயிற்சி மேற்கொள்ளலாம். பிஎம்டபிள்யூ சான்று பெற்ற பயிற்சியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு ரேசிங் யுக்திகளை கற்று கொடுப்பார்கள். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் புதிய எம்340ஐ மாடலை முழுமையாக பயன்படுத்த முடியும்.
பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்டிரைவ் மாடலில் இன்-லைன் 6 சிலிண்டர் ட்வின் டர்போ 3.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவன விற்பனையாளர்கள் மாருதி மற்றும் நெக்சா கார் மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்குகின்றனர்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அரினா மற்றும் நெக்சா விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிக சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இகோ, ஸ்விப்ட் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், டிசையர் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எர்டிகா மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நெக்சா விற்பனையாளர்களுக்கு மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடலின் சிக்மா வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும், ரூ. 37 ஆயிரம் மதிப்பிலான அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. டெல்டா, செல்டா மற்றும் ஆல்பா வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இக்னிஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி பலேனோ மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் சிக்மா வேரியண்டிற்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடியும், எக்ஸ்எல்6 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இரு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கன்ட்ரிமேன் மாடல் கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 39.50 லட்சம் மற்றும் ரூ. 43.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய கன்ட்ரிமேன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் கார் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

வெளிப்புறம் புது கன்ட்ரிமேன் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் கிலாஸ் பிளாக் மெஷ்-ரக கிரில், சிறிய வட்ட வடிவம் கொண்ட பாக் லேம்ப், சில்வர் பேஷ் பிளேட் உள்ளது. பக்கவாட்டில் சில்வர் ரூப் ரெயில்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கன்ட்ரிமேன் இரு மாடல்களிலும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட், ஸ்பெஷல் எடிஷனில் 7 ஸ்பீடு டிசிடி ஸ்போர்ட் யூனிட் வழங்கப்படுகிறது.
மினி கன்ட்ரிமேன் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் லாக் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மினி கன்ட்ரிமேன் ஸ்போர்ட் மற்றும் கிரீன் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மாடலின் XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ XTA வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 5.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய XTA வேரியண்ட் ஏஎம்டி யூனிட் கொண்டுள்ளது. இது XT மேனுவல் வேரியண்டை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும். தற்போது டியாகோ மாடல் - XTA, XZA, XZA+ மற்றும் XZA+ டூயல் டோன் என நான்கு ஆட்டோமேடிக் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

புதிய XTA மாடல் டியாகோ XT வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் வெளிப்புறம் கார் நிறத்திலான ORVMகள், இன்டிகேட்டர்கள், பம்ப்பர்கள் மற்றும் பூமராங் வடிவ டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் கேபின் ஹார்மன் இன்போடெயிமென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்கள், பவர் விண்டோ, சென்ட்ரல் லாக்கிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
டியாகோ XTA மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டியாகோ மாடல் மாருதி சுசுகி வேகன்ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி செலரியோ மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
பஜாஜ் நிறுவனம் பிளாட்டினா இஎஸ் வேரியண்டை தொடர்ந்து இந்தியாவில் ஏபிஎஸ் வசதி கொண்ட பிளாட்டினா 110 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஏபிஎஸ் வேரியண்ட் விலை ரூ. 65,926 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 64,685 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பிரிவு வாகனங்களில் ஏபிஎஸ் வசதி பெறும் முதல் மாடலாக பஜாஜ் பிளாட்டினா 110 இருக்கிறது. புதிய பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடலின் முன்புறம் 240 எம்எம் டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் வசதியும், பின்புறம் 110 எம்எம் டிரம் பிரேக் மற்றும் சிபிஎஸ் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பிளாட்டின் 110 ஏபிஎஸ் மாடலில் 115சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 8.4 பிஹெச்பி பவர், 9.81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ஹாலோஜன் ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், நக்கிள் கார்டு, நைட்ராக்ஸ் ஸ்ப்ரிங்-ஆன்-ஸ்ப்ரிங் ரியர் சஸ்பென்ஷன், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டுள்ளது.
புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் மாடல் சார்கோல் பிளாக், வொல்கானிக் ரெட் மற்றும் பீச் புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நிசான் நிறுவனம் புதிய மேக்னைட் எஸ்யுவி மாடலின் விலையை இந்தியாவில் மீண்டும் மாற்றி அமைத்துள்ளது.
நிசான் நிறுவனம் மேக்னைட் எஸ்யுவி மாடலை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மேக்னைட் எஸ்யுவி அறிமுகமானது முதல் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை நிசான் மேக்னைட் மாடலை வாங்க 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர். தற்சமயம் நிசான் மேக்னைட் மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 50 ஆயிரம் உயர்த்தி இருக்கிறது.
புதிய மேக்னைட் மாடலின் விலை ரூ. 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டர்போ வேரியண்ட்களில் கிடைக்கிறது. விலை உயர்வின் படி டாப் எண்ட் மேக்னைட் எக்ஸ்வி பிரீமியம் சிவிடி வேரியண்ட் ரூ. 9.75 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் எக்ஸ்எல் டர்போ விலை ரூ. 30 ஆயிரம் அதிகப்படுத்தப்பட்டு ரூ. 7.29 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த கார் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
லம்போர்கினி நிறுவனத்தின் சொகுசு கார் மாடல் இந்தியாவில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடல் வினியோகத்தில் 100 யூனிட்களை கடந்து புது மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் உருஸ் மாடலின் முதல் யூனிட் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வினியோகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் லம்போர்கினி வளர்ச்சிக்கு உருஸ் மாடல் பெருமளவு பங்களிப்பை வழங்கி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் லம்போர்கினி உருஸ் மாடல் உற்பத்தியில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது.

லம்போர்கினி உருஸ் மாடல் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 850 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 305 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும்.
“உருஸ் மாடல் ஆடம்பர சொகுசு கார் பிரிவில் சிறப்பான இடம் பிடித்துள்ளது. முற்றிலும் புது பிரிவை உருவாக்கியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த பிரிவையும் வளர்ச்சி பாதைக்கு உருஸ் மாடல் கொண்டு சென்று இருக்கிறது. இந்தியாவில் லம்போர்கினி நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனையில் 50 சதவீதம் உருஸ் மாடலாக இருக்கிறது.” என லம்போர்கினி இந்தியா தலைவர் ஷரத் அகர்வால் தெரிவித்தார்.
லெக்சஸ் நிறுவனத்தின் புதிய எல்சி 500ஹெச் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டொயோட்டாவின் ஆடம்பர பிரிவாக செயல்படும் லெக்சஸ் இந்திய சந்தையில் எல்சி 500ஹெச் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட்ஸ் கூப் மாடல் விலை ரூ. 2,15,60,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் பந்தய விமானி யோஷிடி முரோயா மற்றும் லெக்சஸ் பொறியாளர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது.
புதிய லெக்சஸ் எல்சி 500ஹெச் மாடலின் கார்னிஷ், கிரில், ரியர் விங் மற்றும் 21 இன்ச் அலாய் வீல்கள் பிளாக் நிறம் கொண்டுள்ளது. புது லிமிடெட் எடிஷன் மாடல் வைட் நோவா கிளாஸ் பிளேக், சோனிக் சில்வர் மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை லெக்சல் எல்சி 500ஹெச் மாடலில் 3.5 லிட்டர், 6 சிலிண்டர் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 354 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது புது கார் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் புதிய கைகர் எஸ்யுவி மாடல் வினியோகத்தை துவங்கி இருக்கிறது. முதல் நாளில் மட்டும் 1100 கைகர் யூனிட்களை ரெனால்ட் வினியோகம் செய்து உள்ளது. புதிய கைகர் மாடலை ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய ரெனால்ட் கைகர் துவக்க விலை ரூ. 5.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.
ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.






