என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் சிபி350ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் தனது புதிய சிபி350ஆர்எஸ் மாடலின் வினியோகத்தை துவங்கி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலின் பியூவல் டேன்க்கில் பிரம்மாண்ட ஹோண்டா பேட்ஜ், 7-y வடிவ அலாய் வீல்கள், அதிநவீன ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கண் வடிவி எல்இடி விண்க்கர்கள், மெல்லிய எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா சிபி350ஆர்எஸ்

    இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழஹ்குகிறது. இதில் உள்ள மேம்பட்ட PGM-FI சிஸ்டம் ஆன்-போர்டு சென்சார்களை கொண்டு என்ஜினுக்கு சீராக எரிபொருள் செலுத்துகிறது. 

    இத்துடன் ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் அனலாக் மீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டார்க் கண்ட்ரோல், ஏபிஎஸ், சைடு-ஸ்டாண்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்டேஜ் போன்ற விவரங்களை வழங்குகிறது.

    புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் ரியல்-டைம் மைலேஜ், அவரேஜ் மைலேஜ் மற்றும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி என மூன்று மோட்களில் பியூவல் ஆற்றல் விவரங்களை காண்பிக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் ரேபிட் மாடல் புது வேரியண்ட் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி ஸ்கோடாவின் பல மாடல்களின் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் ஸ்கோடா நிறுவனத்தின் பிரபல செடான் மாடல் ரேபிட் புது வேரியண்ட் இருக்கிறது.

    புதிய ஸ்கோடா ரேபிட் சிஎன்ஜி வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த தகவலை ஸ்கோடா இந்தியா விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலிஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் அடுத்த 12 மாதங்களில் நான்கு புது மாடல்களை அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு உள்ளது.

    இவற்றில் முதல் மாடல் குஷக் ஆகும். ஸ்கோடா குஷக் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஆகும். இதைத் தொடர்ந்து புதிய தலைமுறை ஆக்டேவியா மாடலும் அறிமுகமாக இருக்கிறது. புதிய மாடல்களின் வெளியீட்டு விவரங்களை ஜாக் ஹாலிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். 
    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் ஆண்டுக்கு ஒன்று விகிதத்தில் அசத்தலான திட்டத்தை அமலாக்க இருக்கிறது.


    வால்வோ இந்தியா நிறுவனம் 2021 முதல் ஆண்டுக்கு ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.

     வால்வோ எலெக்ட்ரிக் கார்

    இந்தியாவில் 2025 ஆண்டின் மொத்த விற்பனையில் 80 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என வால்வோ தெரிவித்து இருக்கிறது. இந்த இலக்கை எட்டும் நோக்கில் பல்வேறு வடிவமைப்புகளில் எலெக்ட்ரிக் கார்களை வால்வோ அறிமுகம் செய்ய இருக்கிறது.

    தற்போது எக்ஸ்சி90 பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வால்வோ எலெக்ட்ரிக் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் களமிறங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் இவி6 என அழைக்கப்படுகிறது. இது இந்த மாதமே அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய கியா இவி6 மாடல் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் டீசர்களின்படி இதன் முன்புறம் பிளாக்டு-அவுட் கிரில், எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்கள், பொனெட் மத்தியில் கியா லோகோ பொருத்தப்பட்டு உள்ளது. உள்புறம் கூப் மாடல்களில் உள்ளதை போன்று ஸ்லோபிங் ரூப்லைன் உள்ளது. 

     கியா இவி6 டீசர்

    இந்த காரின் பின்புறத்தில் பிரத்யேக வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. இது ரூப்-மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், டக்டெயில் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. ஸ்ப்லிட் லைட் கிளஸ்டர்கள் பார்க்க சீப்பு போன்ற டிசைன் கொண்டுள்ளது. இது பொனெட் கீழ்பகுதி வரை நீள்கிறது.

    கியா இவி6 மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இது அதிகபட்சம் 300 பிஹெச்பி பவர், 600 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 400 வோல்ட் மற்றும் 800 வோல்ட் சார்ஜிங் வழங்ப்படகிறது.
    டொயோட்டா நிறுவனம் மார்ச் மாதம் முழுக்க தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


    டொயோட்டா நிறுவனம் மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் யாரிஸ், அர்பன் குரூயிசர் மற்றும் கிளான்சா மாடல்களுக்கு கிடைக்கின்றன.

     டொயோட்டா கார்

    டொயோட்டா யாரிஸ் மற்றும் அர்பன் குரூயிசர் மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. யாரிஸ் மாடலுக்கு கூடுதலாக ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    டொயோட்டா கிளான்சா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இன்னோவா க்ரிஸ்டா, புதிய பார்ச்சூனர் மற்றும் வெல்பயர் போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
    கபிரா மொபிலிட்டி நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் முன்பதிவில் அசத்தி வருகின்றன.


    கோவாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான கபிரா மொபிலிட்டி இந்திய சந்தையில் கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும் இரு மாடல்களுக்கான முன்பதிவும் அதே தினத்தில் துவங்கியது.

    கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களை சேர்த்து இரு மாடல்களை வாங்க இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக கபிரா மொபிலிட்டி தெரிவித்து இருக்கிறது. மேலும் இரு மாடல்களின் வினியோகம் மே 1, 2021 அன்று துவங்கும் என தெரிவித்து இருக்கிறது.

    கேஎம்4000

    கவாசகி நின்ஜா 300 தோற்றம் கொண்டுள்ள கேஎம்3000 விலை ரூ. 1,26,990 என்றும் கேஎம்4000 விலை ரூ. 1,36,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கவாசகி கேஎம்4000 தோற்றத்தில் கவாசகி இசட்1000 போன்று காட்சியளிக்கிறது. 

    இரு மாடல்களிலும் முறையே 6 கிலோவாட் மற்றும் 8 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 150 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளன. 

    புதிய கேஎம்3000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்திலும், கேஎம்4000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்திலும் செல்கின்றன.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்கிறது.


    உலகம் முழுவதும் தற்போது பேட்டரி சக்தியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இப்போது இந்த வாகனங்கள் விற்பனை உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் வாடகை கார்களை இயக்கி வரும் ஓலா நிறுவனம் பேட்டரியால் இயங்கும் மோட்டார்சைக்கிள்களை தயாரிக்க உள்ளது.

    இதற்கான தொழிற்சாலையை தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைத்து வருகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆலையாக இருக்கும். இந்த ஆலையை அமைப்பதற்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 378 கால்பந்து மைதானத்தின் அளவுக்கு தொழிற்சாலை பரந்து விரிந்து உள்ளது.

    ஓலா எலெக்ட்ரிக் தொழிற்சாலை

    தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி கூடம் மட்டுமே 150 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்காக ரூ.2,400 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஆலையில் 2 வினாடிக்கு ஒரு மோட்டார்சைக்கிள் உற்பத்தி ஆகும். இதன் படி ஆண்டுக்கு இரண்டு கோடி மோட்டார்சைக்கிள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை கிடைக்கும். ஆலையில் பெரும்பாலும் ரோபோட் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தயாரிப்பு பணியில் 3 ஆயிரம் ரோபோட்கள் பயன்படுத்தப்படும். இன்னும் சில மாதங்களில் முதல் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் புது மாடலுக்கான டீசரும் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சூப்பர்பைக் மாடலுக்கான டீசரை சுசுகி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.


    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹயபுசா சூப்பர்பைக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடலுக்கான டீசரை தற்போது சுசுகி வெளியிட்டு உள்ளது. டீசரில் புது ஹயபுசா மாடல் இந்திய வெளியீட்டு தேதி பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், புதிய சூப்பர்பைக் மாடல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய தலைமுறை சுசுகி ஹயபுசா மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது.

     2021 சுசுகி ஹயபுசா

    இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
    போக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டி ராக் மாடலை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது.


    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 2021 டி ராக் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்து இருக்கிறது. புதிய மாடல் துவக்க விலை ரூ. 21.35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது போக்ஸ்வேகன் கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் டி ராக் மாடல் ரூ. 19.99 லட்சம் எனும் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒற்றை வேரியண்ட்டில் ஐந்து வித நிறங்களில் கிடைத்தது. சிகேடி முறையில் இந்தியா கொண்டுவரப்பட்ட டி ராக் மாடல் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

     போக்ஸ்வேகன் டி ராக்

    2021 டி ராக் மாடலும் இதேபோன்று கொண்டுவரப்படும் என தெரிகிறது. புதிய டி ராக் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூப், 6 ஏர்பேக், டையர் பிரஷர் மாணிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டு உள்ளது. புதிய டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 148 பிஹெச்பி பவர், 250 என்எம்  டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய 2021 டி ராக் மாடல் ஜீப் காம்பஸ், எம்ஜி ஹெக்டார், டாடா ஹேரியர் மற்றும் ஹூண்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் உருவாகி வருகிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 21 ஜனவரி 2021 வாக்கில் வாகனங்கள் உற்பத்தியில் பத்து கோடி யூனிட்களை கடந்து அசத்தியது. இதனை கொண்டாடும் வகையில் சில மோட்டார்சைக்கிள்களின் லிமிடெட் எடிஷனை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஹீரோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

    அந்த வரிசையில் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது எக்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் புது லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன்

    வெளியீட்டுக்கு முன் ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய மாடல் தோற்றத்தில் தற்போது விற்பனையாகும் ஸ்டான்டர்டு வேரியண்டை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடல் ரெட் மற்றும் வைட் நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷனின் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய எக்ஸ்டிரீம் 160ஆர் மாடல் முன்புற டிஸ்க் மாடல் விலை ரூ. 1.04 லட்சம் என்றும் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.07 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ரெனால்ட் நிறுவனத்தின் கார் மாடல்களுக்கு மாதாந்திர சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகை, லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது.

    அப்படியாக பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டஸ்டர் RXS மற்றும் RXZ வேரியண்ட்களுக்கு ரூ. 60 ஆயிரம் வரையும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.

     ரெனால்ட் டிரைபர்

    ரெனால்ட் டிரைபர் மாடலின் ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 15 ஆயிரம் சலுகை வழங்கப்படுகிறது. டிரைபர் RXE வேரியண்டிற்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் க்விட் MY2020 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடியும், MY2021 மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் மற்றும் ரூரல் சலுகை முறையே ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிப்ரவரி மாதத்துக்கான உள்நாட்டு விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் பிப்ரவரி 2021 மாதம் 58,473 யூனிட்களை விற்பனைசெய்து இருக்கிறது. இது 2020 பிப்வரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 54 சதவீதம் அதிகம் ஆகும். ஒட்டுமொத்த விற்பனையில் வணிக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளது.

     டாடா கார்

    பயணிகள் வாகனங்களை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 27,225 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 119 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் கடந்த ஒன்பது ஆண்டுகளின் பிப்ரவரி மாத விற்பனையை விட 2021 பிப்ரவரி மாதம் அதிக யூனிட்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து இருக்கிறது.

    வணிக வாகனங்கள் பிரிவில் ஏற்றுமதியை சேர்த்து மொத்தம் 33,966 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இது 2020 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகம் ஆகும். 
    ×