search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா சிபி350ஆர்எஸ்
    X
    ஹோண்டா சிபி350ஆர்எஸ்

    ஹோண்டா சிபி350ஆர்எஸ் வினியோகம் துவக்கம்

    ஹோண்டா நிறுவனத்தின் சிபி350ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா நிறுவனம் தனது புதிய சிபி350ஆர்எஸ் மாடலின் வினியோகத்தை துவங்கி உள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் பிப்ரவரி 16 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.96 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலின் பியூவல் டேன்க்கில் பிரம்மாண்ட ஹோண்டா பேட்ஜ், 7-y வடிவ அலாய் வீல்கள், அதிநவீன ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கண் வடிவி எல்இடி விண்க்கர்கள், மெல்லிய எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஹோண்டா சிபி350ஆர்எஸ்

    இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழஹ்குகிறது. இதில் உள்ள மேம்பட்ட PGM-FI சிஸ்டம் ஆன்-போர்டு சென்சார்களை கொண்டு என்ஜினுக்கு சீராக எரிபொருள் செலுத்துகிறது. 

    இத்துடன் ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் அனலாக் மீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டார்க் கண்ட்ரோல், ஏபிஎஸ், சைடு-ஸ்டாண்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்டேஜ் போன்ற விவரங்களை வழங்குகிறது.

    புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் ரியல்-டைம் மைலேஜ், அவரேஜ் மைலேஜ் மற்றும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி என மூன்று மோட்களில் பியூவல் ஆற்றல் விவரங்களை காண்பிக்கிறது.
    Next Story
    ×