search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மினி கன்ட்ரிமேன்
    X
    மினி கன்ட்ரிமேன்

    ரூ. 39.50 லட்சம் விலையில் மினி கன்ட்ரிமேன் இந்தியாவில் அறிமுகம்

    மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இரு வேரியண்ட்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

    மினி இந்தியா நிறுவனம் புதிய கன்ட்ரிமேன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கன்ட்ரிமேன் மாடல் கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் எஸ் ஜெசிடபிள்யூ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 39.50 லட்சம் மற்றும் ரூ. 43.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய கன்ட்ரிமேன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் மாடல் கார் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

     மினி கன்ட்ரிமேன்

    வெளிப்புறம் புது கன்ட்ரிமேன் மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இத்துடன் கிலாஸ் பிளாக் மெஷ்-ரக கிரில், சிறிய வட்ட வடிவம் கொண்ட பாக் லேம்ப், சில்வர் பேஷ் பிளேட் உள்ளது. பக்கவாட்டில் சில்வர் ரூப் ரெயில்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    புதிய கன்ட்ரிமேன் இரு மாடல்களிலும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 189 பிஹெச்பி பவர், 280 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிசிடி யூனிட், ஸ்பெஷல் எடிஷனில் 7 ஸ்பீடு டிசிடி ஸ்போர்ட் யூனிட் வழங்கப்படுகிறது.

    மினி கன்ட்ரிமேன் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 225 கிலோமீட்டர் வரை செல்லும் வகையில் லாக் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மினி கன்ட்ரிமேன் ஸ்போர்ட் மற்றும் கிரீன் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது.
    Next Story
    ×