search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்
    X
    பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்

    21 ஆயிரம் யூனிட்களை திரும்ப பெற்ற பிஎம்டபிள்யூ

    பிஎம்டபிள்யூ நிறுவனம் 21 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் அமெரிக்க சந்தையில் பல்வேறு மாடல்களை திரும்ப பெற்று இருக்கிறது. பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதால் மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. மொத்தத்தில் 20,936 யூனிட்கள் திரும்ப பெறப்பட்டன.

    திரும்ப பெறப்படும் மோட்டார்சைக்கிள்களில் 10 சதவீதம் மாடல்களின் பியூவல் பம்ப்பில் கோளாறு இருக்கலாம் என பிஎம்டபிள்யூ எதிர்பார்க்கிறது. இந்த கோளாறு: எஸ் 1000 ஆர்ஆர் (2011-2014), எஸ் 1000 ஆர் (2014), ஹெச்பி4 (2013-2014), ஆர் 1200 ஜிஎஸ் அட்வென்ச்சர் (2011-2014), கே 1300 எஸ் (2011-2014), கே 1600 ஜிடி/ஜிடிஎல்/ஜிடிஎல் எக்ஸ்குளூசிவ் (2011-2014), ஆர் 1200 ஆர்/ஆர் 1200 ஆர்டி (2011-2014) மற்றும் ஆர் நைன்டி (2014) உள்ளிட்ட மாடல்களில் கண்டறியப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்

    திரும்ப பெறுவதற்கான அறிக்கையில், பியூவல் பம்ப் அல்லது ஆக்சிலரி பியூவல் பம்ப் வாகனம் ஓட்டும் போது உடைந்து எரிபொருளை கீழே லீக் ஆக செய்யலாம் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. எரிபொருள் லீக் ஆகும் போது, வாகனத்தை இக்னைட் செய்தால், தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கோளாறு இருக்கும் பியூவல் பம்ப்பை சரி செய்து வழங்கும். இதற்கு பிஎம்டபிள்யூ எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது. திரும்ப பெறப்படும் பணிகள் ஏப்ரல்2, 2021 முதல் துவங்கலாம். 
    Next Story
    ×