search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூண்டாய் கார்
    X
    ஹூண்டாய் கார்

    இந்தியாவில் 25 ஆண்டுகள் - ஹூண்டாய் வாகன விற்பனை இத்தனை யூனிட்களா?

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்தியாவில் 1996 முதல் ஹூண்டாய் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் செப்டம்பர் 1998 ஆம் ஆண்டு தனது பணிகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் பணிகளை துவங்கியது.

    இந்த ஆலையில் இருந்து முதல் வாகனமாக சான்ட்ரோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் ஐ20 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 2020 நிலவரப்படி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் 17.4 சதவீத பங்குககளை கொண்டிருக்கிறது.

     ஹூண்டாய் கார்

    இத்துடன் 25 ஆண்டுகளில் இந்தியாவில் 90 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஹூண்டாய் நிறுவனம் 7.5 லட்சம் யூனிட்களை வினியோகம் செய்கிறது. தற்சமயம் நாடு முழுக்க 1154 விற்பனை மற்றும் 1298 சர்வீஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

    கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதியில் 30 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. தற்சமயம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து 88 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் 14  சதவீத கார்கள் பசுமை ரெயில்வே வழியில் அனுப்பப்பட்டு வருகிறது.
    Next Story
    ×