search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பாஸ்டேக்
    X
    பாஸ்டேக்

    பாஸ்டேக் பயனாளிகள் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை

    இந்தியாவில் பாஸ்டேக் பயனாளிகள் இனி இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


    பாஸ்டேக் பயன்படுத்துவோர் இனி குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்வதாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் பாஸ்டேக் கணக்கில் முழு தொகையும் காலியாகும் வரை பயனர்கள் சுங்க சாவடிகளை கடக்க முடியும்.

    பாஸ்டேக் வழங்கும் வங்கிகள் சார்பில் பாஸ்டேக் அக்கவுண்ட்டை செயல்பாட்டில் வைத்திருக்க குறைந்த பட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கி இருந்தது. இதன் காரணமாக சுங்க சாவடிகளில் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கும் பயனர்களுக்கு கால தாமதம் ஏற்பட்டது.

     கோப்புப்படம்

    தற்சமயம் குறைந்தபட்ச தொகை நீக்கப்பட்டு இருப்பதால், பயனரின் பாஸ்டேக் அக்கவுண்ட்டில் தொகை முழுமையாக தீரும் வரை சுங்க சாவடிகளை கடந்து பயணிக்க முடியும். இவ்வாறு சுங்க சாவடிகளை கடக்கும் போது பயனரின் கணக்கில் இருந்து தொகை தீர்ந்து போனால் இது நெகடிவ் ஆக பதிவு செய்யப்படும். பின் தொடர்ந்து பாஸ்டேக் பயன்படுத்த பயனர்கள் அக்கவுண்ட்டில் தொகையை சேர்க்க வேண்டும்.

    பிப்ரவரி 15 ஆம் தேதி துவங்கி நாடு முழுக்க சுங்க சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுங்க சாவடி பரிமாற்றங்களை 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனைகளாக பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

    தற்சமயம் நாடு முழுக்க 2.54 கோடி பாஸ்டேக் பயனர்கள் உள்ளனர். இவற்றில் நாள் ஒன்றுக்கு ரூ. 89 கோடி வசூலிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் செயல்படும் சுங்க சாவடிகளில் வசூலாகும் தொகையில் 80 சதவீதம் ஆகும்.
    Next Story
    ×