என் மலர்
ஆட்டோமொபைல்

வாகனங்கள்
வாகனங்களை இப்படி விற்பனை செய்வதா? வருத்தம் தெரிவித்த மத்திய அரசு
இந்தியாவில் வாகனங்கள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் மாடல்களில் பாதுகாப்பு தரத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் சில வாகன உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருவதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற செயல்களை கைவிட வாகன உற்பத்தியாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பாரபட்சம் காட்டுவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் வாகன பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. வாகனங்களில் லொகேஷன் டிராக்கிங் செய்யும் சாதனங்களை பொருத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அர்மான் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது..,
சில வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமே வாகன பாதுகாப்பு முறைகளை சரியாக பின்பற்றுகின்றனர். அதுவும் விலை உயர்ந்த டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே இவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் பாதுகாப்பு தரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். இந்த நிலையில் சில நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் போது பாதுகாப்பு தரத்தை குறைக்கும்செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






