search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்
    X
    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    விற்பனையில் புது மைல்கல் கடந்த ரேன்ஜ் ரோவர் கார்

    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதனை லேண்ட் ரோவர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து உள்ளது.

    சர்வதேச சந்தையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் துவக்க விலை ரூ. 89.13 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.43 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலில் பெரிய ஏர் டேம், கூர்மையான எட்ஜ் மற்றும் பிளாக்டு-அவுட் அம்சங்கள் என பல்வேறு ஸ்போர்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.

     ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    இந்த பிரீமியம் எஸ்யுவி மாடல் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், 394 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் MHEV என்ஜின் மற்றும் 296 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அனைத்து  என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரேன்ஜ் ரோர் ஸ்போர்ட் எஸ்விஆர் வேரியண்ட் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    Next Story
    ×