search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சுசுகி ஹயபுசா
    X
    சுசுகி ஹயபுசா

    மூன்றே நாட்களில் விற்று தீர்ந்த லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக்

    சுசுகி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக் விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தது.


    சுசுகி நிறுவனம் புதிய ஹயபுசா சர்வதேச வெளியீட்டு நிகழ்வின் போது லிமிடெட் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்தது. இது மொத்தத்தில் பத்து யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடலை முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 15 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இவை விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தன. லிமிடெட் எடிஷன் மாடல் பிளாக் மற்றும் கோல்டு வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

     சுசுகி ஹயபுசா

    மேலும் இவற்றில் கார்பன் மிரர் கவர்கள், கார்பன் டேன்க் பேட், ரிம் ஸ்டிரைப் மற்றும் பிரத்யேக அனோடைஸ் செய்யப்பட்ட லீவர்கள் மற்றும் சீட் கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புதிய தலைமுறை ஹயபுசா மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 264 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய சுசுகி ஹயபுசா லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×