என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. சீரிஸ் மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.


    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 63 கூப் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பென்ஸ் கூப் மாடல் துவக்க விலை ரூ. 2.07 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஏ.எம்.ஜி. 63 எஸ் மாடலில் முதல் முறையாக இ.கியூ. பூஸ்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சந்தையில் கிடைக்கும் சக்திவாய்ந்த எஸ்.யு.வி. கூப் மாடல் ஆகும்.

    இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள 12-வது ஏ.எம்.ஜி. மாடல் இது. புதிய ஜி.எல்.இ. 63 எஸ் மாடல் 4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 603 பி.ஹெச்.பி. திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஏ.எம்.ஜி. ஸ்பீடுஷிப்ட் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

     மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 63 எஸ்

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.8 நொடிகளிலும், மணிக்கு அதிகபட்சம் 280 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக கூப் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.இ. 63 கூப் மாடல் ஆடி ஆர்.எஸ். கியூ8, மசிராட்டி லெவாண்ட், லம்போர்கினி உருஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாகி இருக்கும் இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஓலா எலெக்ட்ரிக் மற்றும் சிம்பில் எனர்ஜி நிறுவனங்கள் ஒரே தினத்தில் தங்களின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. முன்பதிவில் இரு மாடல்களும் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. ஓலா சீரிஸ் எஸ் இரண்டு வேரியண்ட்களிலும், சிம்பில் ஒன் மாடல் ஒற்றை வேரியண்டிலும் கிடைக்கின்றன. 

    இந்த நிலையில், இரு நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள், அவற்றின் ரேன்ஜ், விலை உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். 

    அம்சங்கள்:

    ஓலா எஸ் 1 சீரிஸ் மற்றும் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இதுவரை வழங்கப்படாமல் இருந்த சில புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    ஓலா எஸ் 1

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டி.எப்.டி. எல்.சி.டி. ஸ்கிரீன் உள்ளது. இது ரேன்ஜ், நேவிகேஷன் மற்றும் கனெக்டெட் தொழில்நுட்பம் சார்ந்த விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் ஹில் ஹோல்டு அசிஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    சிம்பில் ஒன் மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4ஜி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டுள்ளது. இதில் மியூசிக், கால் கண்ட்ரோல், வெஹிகில் டிராக்கிங், நேவிகேஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    பேட்டரி மற்றும் மோட்டார்:

    ஓலா எஸ்1 மாடலில் 2.98 kWh பேட்டரி பேக் உள்ளது. இது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம், 121 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இந்த மாடல் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரண்டு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    எஸ்1 ப்ரோ மாடலில் - நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. இதில் 3.97 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்கிறது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

     சிம்பில் ஒன்

    சிம்பில் ஒன் மாடலில் 4.5 kW மோட்டார் உள்ளது. இது 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் முன்புறம் 100 செக்‌ஷன், பின்புறம் 110 செக்‌ஷன் டையர்கள் உள்ளன. இதன் 100 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்திலும் 110 செக்‌ஷன் டையர் கொண்ட மாடல் மணிக்கு அதிகபட்சம் 98 கிலோமீட்டர் வேகத்திலும் செல்கிறது.

    சிம்பில் ஒன் ஸ்கூட்டர் - இகோ, ரைடு, டேஷ் மற்றும் சோனிக் என நான்கு ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரை செல்லும். 

    விலை விவரம்:

    ஓலா சீரிஸ் எஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 99,999 என துவங்குகிறது. இதன் எஸ்1 ப்ரோ விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சிம்பில் ஒன் மாடல் விலை ரூ. 1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மாடல் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்காம் தலைமுறை சிட்டி மாடலுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹோண்டா சிட்டி மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஹோண்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. புதிய ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு விற்பனைக்கு வர இருந்தது. இந்த நிலையில், புதிய ஹைப்ரிட் மாடல் அடுத்த நிதியாண்டில் தான் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹோண்டா சிட்டி

    2022 முதல் காலாண்டிற்கு பிறகு தான் ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் விற்பனையகங்களுக்கு வரும் என கூறப்படுகிறது. சிட்டி ஹைப்ரிட் மாடலில் 98 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் 109 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது.

    இவை இணைந்து 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இந்த கார் முழுமையாக இ.வி. மோடில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. ஹைப்ரிட் செட்டப் உடன் சி.வி.டி. யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 27.78 கிலோமீட்டர் வரை செல்லும் என ஹோண்டா தெரிவித்து இருக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் தனது 300சிசி மாடலை இந்தியாவில் மேம்படுத்த இருக்கிறது.


    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் 2021 அபாச்சி ஆர்.ஆர்.310 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாக இருந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இதன் வெளியீடு தாமதமானது. 

    இந்திய சந்தையில் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடல் 2017 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் 2019 மே மாத வாக்கில் இந்த மாடல் மேம்படுத்தட்டு ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் புதிய நிறங்களில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2020 ஜனவரியில் இதன் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றப்பட்டது.

     டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310

    இந்த வரிசையில் 2021 அபாச்சி ஆர்.ஆர்.310 மாடல் இந்தியாவில் அறிமுகமாகிறது. புதிய 2021 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.ஆர்.310 மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன், டி.வி.எஸ். யூரோக்ரிப் ப்ரோடார்க் எக்ஸ்டிரீம் ரப்பர் டையர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ இந்திய சந்தையில் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.


    மஹிந்திரா நிறுவனம் புதிய பொலிரோ நியோ மாடலை ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பொலிரோ நியோ மாடல் என்4, என்8 மற்றும் என் 10 என மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பொலிரோ நியோ என் 10 ஒ வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய பொலிரோ நியோ என் 10 ஒ மாடலில் மல்டி-டெரைன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வேரியண்ட் விலை ரூ. 10.69 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடல்- ராக்கி பெய்க், மெஜஸ்டிக் சில்வர், ஹைவே ரெட், பியல் வைட் மற்றும் நபோலி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா பொலிரோ நியோ

    மேனுவல் லாக் தவிர பொலிரோ நியோ என் 10 ஒ மாடலின் அம்சங்கள் ஏற்கனவே அறிமுகமான என்10 வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ நியோ என் 10 ஒ மாடலில் 1.5 லிட்டர் எம்ஹாக் 100 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த என்ஜின் 100 பி.ஹெச்.பி. திறன், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் உள்ள இ.எஸ்.எஸ். மற்றும் இகோ மோட் சிறப்பான மைலேஜ் வழங்கும் என தெரிகிறது. 
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா இந்தியா நிறுவனம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.


    கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்திய விற்பனையில் 2 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இவற்றில் சுமார் 1.5 லட்சம் யூனிட்கள் கனெக்டெட் மாடல் ஆகும். முன்னதாக இந்திய சந்தையில் மூன்று லட்சம் யூனிட்களை அதிவேகமாக விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையை கியா இந்தியா பெற்றது.

     கியா செல்டோஸ்

    கியா இந்தியா ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மட்டும் 66 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. இதில் 58 சதவீதம் டாப் எண்ட் மாடல்கள் ஆகும். கியா செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டீசல் வேரியண்ட்கள் மட்டும் 45 சதவீதம் ஆகும். 

    இந்தியாவில் கனெக்டெட் கார் விற்பனையில் கியா செல்டோஸ் மட்டும் 78 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. கியா கார் வாங்குவோரில் பெரும்பாலானோர் கியா செல்டோஸ் ஹெச்.டி.எக்ஸ். 1.5 லிட்டர் பெட்ரோல் வேரியண்டையே தேர்வு செய்து இருக்கின்றனர்.

    சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.


    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான சிம்பில் எனர்ஜி தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. அறிமுகமாகும் முன்பே இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வந்தன. 

    இந்த நிலையில், சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருப்பதாக சி்ம்பில் எனர்ஜி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எவ்வித விளம்பர யுக்திகளும் இன்றி இத்தனை யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

     சிம்பில் ஒன்

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பில் ஒன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1947 ஆகும். 

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி, 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக பலமுறை மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சாலைகளில் பரிசோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    சமீபத்தில் முழுமையாக மறைக்கப்பட்ட டெஸ்லா மாடல் 3 மும்பை நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை டெஸ்லா இன்னும் துவங்கவில்லை. எனினும், டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் பெயரில் கர்நாடக மாநிலத்தில் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

     டெஸ்லா மாடல் 3

    இத்துடன் பெங்களூரு நகரில் ஆய்வு மற்றும் உற்பத்தி மையத்தை கட்டமைக்கும் பணிகளில் டெஸ்லா ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி டெஸ்லாவின் முதல் உற்பத்தி ஆலை கேரளா அல்லது மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு இந்த மாடல்களை வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் 2022 ஆண்டு புத்தம் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதலே எஸ்.யு.வி. மாடல்களில் அதிக கவனம் செலுத்தி வரும் வோக்ஸ்வேகன் அடுத்த ஆண்டு விர்டுஸ் பெயரில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    புதிய விர்டுஸ் மாடலின் உற்பத்தி 2022 ஆண்டு துவக்கத்திலும், விற்பனை இரண்டாவது காலாண்டிலும் துவங்க இருக்கிறது. வோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலின் பரிசோதனை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களின்படி புதிய செடான் மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் வென்டோ மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது.

     வோக்ஸ்வேகன் விர்டுஸ்

    புதிய செடான் மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.என். பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலில் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய வோக்ஸ்வேகன் செடான் மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஸ்கோடா ஸ்லேவியா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது சி.ஆர்.-வி விற்பனையை சமீபத்தில் நிறுத்தியது.


    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்.யு.வி. பிரிவில் மீண்டும் களமிறங்க இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்திய சந்தையில் ஹோண்டா சி.ஆர்.-வி மாடல் விற்பனை நிறுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. பிரிவில் ஹோண்டா அதிக கவனம் செலுத்தவில்லை.

    "இந்திய சந்தையின் எஸ்.யு.வி. பிரிவை அறிந்து கொள்ள ஆய்வு செய்கிறோம். இந்தியாவுக்கென பிரத்யேக எஸ்.யு.வி. மாடலை உருவாக்கும் பணிகளில் ஹோண்டா ஈடுபட்டுள்ளது." என ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் கோயல் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

     ஹோண்டா கார் - கோப்புப்படம்

    சில மாதங்களுக்கு முன் ஹோண்டா நிறுவனம் என்7எக்ஸ் கான்செப்ட் மாடலை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்தது. என்7எக்ஸ் மாடல் இந்தியாவில் 5 இருக்கை கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கு போட்டியாக அமையும். 
    பியாஜியோ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் மாடல்கள் விரைவில் இந்தியாவில் வினியோகம் செய்யப்பட இருக்கின்றன.


    பியாஜியோ இந்தியா நிறுவனம் வெஸ்பா 75-வது ஆனிவெர்சரி எடிஷன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய வெஸ்பா 75-வது ஆனிவெர்சரி எடிஷன் 125 மாடல் விலை ரூ. 1.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த ஸ்கூட்டர் 125சிசி மற்றும் 150சிசி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    புதிய வெஸ்பா மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களின் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது. வெஸ்பா 75-வது ஆனிவெர்சரி எடிஷன் 150 மாடல் விலை ரூ. 1.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

    வெஸ்பாவின் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் புதிதாக மெட்டாலிக் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் பக்கவாட்டில் 75 எண் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள் உள்ளன. இவற்றுடன் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

     வெஸ்பா ஸ்கூட்டர்

    வெஸ்பா 75-வது ஆனிவெர்சரி எடிஷன் 150 மாடலில் ஏர்-கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, சிங்கில் சிலிண்டர் 149சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 10.3 பி.ஹெச்.பி. திறன், 10.6 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    வெஸ்பா 75-வது ஆனிவெர்சரி எடிஷன் 125சிசி மாடலில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, சிங்கில் சிலிண்டர் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 9.7 பி.ஹெச்.பி. திறன், 9.6 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ20 என் லைன் மாடல் சில வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் என் லைன் சீரிஸ் இந்திய வெளியீட்டை சமீபத்தில் உறுதிப்படுத்தியது. இந்த மாடல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த வாரம் அறிமுகமாகும் நிலையில், இதன் விற்பனை சில வாரங்களில் துவங்குகிறது.

    ஐ20 என் லைன் மட்டுமின்றி வரும் ஆண்டுகளில் மேலும் சில என் லைன் மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

     ஹூண்டாய் ஐ20 என் லைன்

    தோற்றத்தில் புதிய ஐ20 என் லைன் மாடல் தற்போது சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடலை விட சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் கேஸ்கேடிங் கிரில், என் லைன் லோகோ, என் லைன் சார்ந்த ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. 

    ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

    ×