என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி200எக்ஸ் மோட்டார்சைக்கிள் ஹார்னெட் 2.0 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சாகச மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மாடல் விலை ரூ. 1.44 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹார்னெட் 2.0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. 

    புதிய மாடலின் என்ஜின் மற்றும் பிளாட்பார்ம் ஹார்னெட் 2.0 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மற்றும் ஹீரோ எக்ஸ்-பல்ஸ் 200 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

     ஹோண்டா சிபி200எக்ஸ்

    இந்த மோட்டார்சைக்கிளில் 184சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 பி.ஹெச்.பி. திறன், 16 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய ஹோண்டா சிபி200எக்ஸ் மாடல்- பியல் நைட்ஸ்டார் பிளாக், மேட் செலின் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் மாடல் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.


    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஆஸ்டர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு வாக்கில் இதன் வெளியீடு நடைபெற இருக்கும் நிலையில், தற்போது இதன் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

     எம்ஜி ஆஸ்டர்

    புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி கொண்ட கார் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 'டிரைவ் ஏ.ஐ.' என அழைக்கிறது. இந்த தொழில்நுட்பம் காரை பயன்படுத்துவோருக்கு பல்வேறு அம்சங்கள் மற்றும் சவுகரியங்களை வழங்குகிறது. இதை கொண்டு காரின் பல்வேறு அம்சங்களை எளிதில் இயக்க முடியும்.

    எம்ஜி ஆஸ்டர் மாடலில் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரில் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பார்வேர்டு கொலிசன் வார்னிங், ஆட்டோமடிக் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 250 சீரிசில் இரண்டு வேரியண்ட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பல்சர் மாடல்களின் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. 'அடுத்து வெளியாகும் பல்சர் சீரிஸ் மாடல் மிகப்பெரியதாக இருக்கும்,' என பஜாஜ் ஆட்டோ தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

    அந்த வகையில் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய பல்சர் சீரிஸ் 250சிசி என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய பல்சர் சீரிஸ் நேக்கட் வேரியண்ட் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இந்த சீரிசில் ஹல்ஃப்-ஃபேர்டு (half-faired) வேரியண்ட்டும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

     பஜாஜ் பல்சர்

    புதிய பல்சர் ஹால்ஃப்-ஃபேர்டு வேரியண்ட் நீண்ட காலம் விற்பனை செய்யப்பட்டு வரும் பல்சர் 220எப் மாடலுக்கு மாற்றாக வெளியாகும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களின் படி புதிய பல்சர் மாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்க வேண்டும். எனினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

    பஜாஜ் பல்சர் சீரிசின் புது மாடல்கள் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய பல்சர் சீரிஸ் விலை ரூ. 1.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கும் என தெரிகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் புது சாதனையை படைத்து இருக்கிறது.


    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹோண்டாவுடன் அமைத்திருந்த கூட்டணியை பிரிந்து தனி நிறுவனமாக மாறி 10-வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. கொண்டாட்டத்தின் அங்கமாக ஹீரோ நிறுவனம் உலகின் மிகப் பெரும் மோட்டார்சைக்கிள் லோகோவை உருவாக்கியது. இந்த முயற்சிக்கு கின்னஸ் சாதனை கிடைத்தது.

    உலகின் பெரும் லோகோவை உருவாக்க ஹீரோ நிறுவனம் 1845 ஸ்பிலென்டர் மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் சித்தூர் பகுதியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஆலையில் இந்த சாதனை படைக்கப்பட்டது.

     ஹீரோ மோட்டோகார்ப் லோகோ

    கின்னஸ் சாதனையை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் மற்றொரு சாதனையை படைத்து இருக்கிறது. எவ்வித திட்டமும் இன்றி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிக மோட்டார்சைக்கிள் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. உலகளாவிய விற்பனையில் இந்த சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் துவங்கி பிரீமியம் மோட்டார்சைக்கிள் வரை அனைத்து வகையான மாடல்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதாலேயே இந்த சாதனை சாத்தியமானது என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் மாடல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    வெளியீட்டுக்கு முன் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட டாடா விற்பனை மையங்களில் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். 

     டாடா டிகோர் இ.வி. சிப்டிரான்

    சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் மாடல் டிகோர் இ.வி. ஆகும். இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்படுகிறது.

    இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. 

    ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 2021 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 அமேஸ் மாடலின் வெளிப்புறம் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. 2021 ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் விலை ரூ. 6.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. 

    புதிய அமேஸ் பேஸ்லிப்ட் மாடல் அமேஸ் இ, அமேஸ் எஸ் மற்றும் அமேஸ் வி.எக்ஸ். என மூன்று வேரிண்ட்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் வி.எக்ஸ். மாடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021 அமேஸ் பேஸ்லிப்ட் மாடலின் கிரில் முழுமையாக மாற்றப்பட்டு புதிய தோற்றம் பெற்று இருக்கிறது.  

     2021 ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட்

    இத்துடன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், கார் கைப்பிடிகள் குரோம் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. பின்புறம் சி வடிவ எல்.இ.டி. டெயில் லைட்கள், பம்ப்பகில் ரிப்லெக்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

    2021 ஹோண்டா அமேஸ் பேஸ்லிப்ட் மாடலில் 1.2 லிட்டர் ஐ-வி.டி.இ.சி. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஐ-டி.டி.இ.சி. டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 

    டீசல் என்ஜின் 99 பி.ஹெச்.பி. திறன், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், சி.வி.டி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    ஓலா எஸ்1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் ரைடுகள் இந்தியாவில் அக்டோபர் மாத வாக்கில் துவங்குகிறது.


    இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் களமிறங்கி இருக்கிறது. முதற்கட்டமாக எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு மாடல்களை ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    ஓலா எஸ்1 சீரிசில் கச்சிதமான ட்வின்-பாட் ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்., எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட், சார்ஜிங் பாயின்ட், ஸ்ப்லிட் ரக கைப்பிடிகள் உள்ளன. இருக்கையின் கீழ் இரண்டு ஹெல்மெட்களை வைத்துக் கொள்ளும் வகையில் ஓலா எஸ்1 சீரிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளன.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    விலை 

    ஓலா எஸ்1 சீரிஸ் பேஸ் மாடல் ஐந்துவித நிறங்களிலும் எஸ்1 ப்ரோ மாடல் பத்து வித நிறங்களிலும் கிடைக்கிறது. ஓலா எஸ்1 விலை ரூ. 99,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். ஓலா எஸ்1 ப்ரோ விலை ரூ. 1,29,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். 

     ஓலா எஸ்1

    பேட்டரி மற்றும் திறன்

    ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ மாடல்கள் 8.5 கிலோவாட் திறன், 58 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இவற்றில் முறையே 2.98 கிலோவாட் மற்றும் 3.97 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஓலா எஸ்1 மாடல் முழு சார்ஜ் செய்தால் 121 கிலோமீட்டர் ரேன்ஜ், மணிக்கு அதிகபட்சம் 90 கிலோமீட்டர் கேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ஓலா எஸ்1 ப்ரோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதோடு, முழு சார்ஜ் செய்தால் 181 கிலோமீட்டர் வரை செல்கிறது.

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    அம்சங்கள்

    ஓலா எஸ்1 - நார்மல் மற்றும் ஸ்போர்ட் என இருவித ரைடிங் மோட்களும், எஸ்1 ப்ரோ - நார்மல், ஸ்போர்ட் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்களும் கொண்டிருக்கின்றன. இரு வேரியண்ட்களிலும் பிராக்சிமிட்டி லாக்/அன்லாக், ரிமோட் பூட் லாக், கால் அலெர்ட், மெசேஜ் அலெர்ட், இன்போடெயின்மென்ட், சைடு ஸ்டான்ட் அலெர்ட் மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் ரிவர்ஸ் மோட் வசதி வழங்கப்படுகிறது. இதை செயல்படுத்தினால் ஸ்கூட்டர் பின்புறமாக செல்லும். மேலும் கெட் ஹோம் மோட், பைண்ட் மை ஸ்கூட்டர், எலெக்டிரானிக் ஸ்டீரிங் லாக், ஹெச்.எம்.ஐ. பிரைட்னஸ் அட்ஜஸ்டர், வெல்கம் ஸ்கிரீன், ஓ.டி.ஏ. அப்டேட்கள், மேனுவல் எஸ்.ஓ.எஸ். உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஓலா எஸ்1 ப்ரோ மாடலில் ஹில்-ஹோல்டு சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. 

     ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    டெஸ்ட் ரைடு செய்வது எப்படி?

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான வினியோகம் மற்றும் டெஸ்ட் ரைடுகள் அக்டோபர் மாத வாக்கில் துவங்குகின்றன. புதிய எஸ்1 சீரிசை டெஸ்ட் ரைடு செய்ய விரும்புவோர் ஓலா எலெக்ட்ரிக் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். 

    முன்பதிவு செய்ததும், ஸ்கூட்டர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்பட்டு விடும். இதுதவிர வரும் மாதங்களில் ஓலா எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை திறக்கவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. மாடல் விரைவில் அந்த பெயரில் வெளியாக இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. ஹான்பில் என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா நிறுவனத்தின் மிகச் சிறிய எஸ்.யு.வி. மாடலாக ஹான்பில் உருவாகி இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஹான்பில் மைக்ரோ எஸ்.யு.வி. இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    “இந்த ஆண்டில் ஏற்கனவே நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. தற்போது சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்கு 10.3 சதவீதமாக இருக்கிறது. மேலும், ஹான்பில் உள்பட இரண்டு பெரிய வெளியீடுகளுக்கு திட்டமிட்டுள்ளோம்.” என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார். 

     டாடா கார்

    மஹிந்திரா கே.யு.வி. 100 மற்றும் மாருதி சுசுகி இக்னிஸ் மாடல்கள் அடங்கிய மிட்-லெவல் பி பிரிவில் ஹான்பில் மாடல் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹான்பில் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் ஹெச்.பி.எக்ஸ். கான்செப்ட் எனும் பெயரில் காட்சிப்படுத்தப்பட்டது.

    டாடா ஹான்பில் அந்நிறுவனத்தின் ஆல்பா பிளாட்பார்மில் உருவாகும் இரண்டாவது கார் ஆகும். முன்னதாக அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடல் ஆல்பா பிளாட்பார்மின் முதல் மாடலாக இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


    கியா இந்தியா நிறுவனத்தின் கியா செல்டோஸ் எக்ஸ் லைன் ஸ்பெஷல் எடிஷன் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யு.வி.-யை கியா நிறுவனம் பிராஜக்ட் எக்ஸ் என அழைக்கிறது. டீசரில் புது எஸ்.யு.வி. விவரங்கள் அதிகம் இடம்பெறவில்லை. எனினும், இந்த மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கியா செல்டோஸ் ஸ்பெஷல் எடிஷன் டீசர்

    புதிய செல்டோஸ் எக்ஸ் லைன் மாடல் இந்த சீரிசின் புதிய டாப் எண்ட் வேரியண்ட் ஆக அறிமுகமாகிறது. புதிய எக்ஸ் லைன் மாடலில் 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இதன் பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. திறன், 242 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. டீசல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.


    2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    அதன்படி புதிய கிளாசிக் 350 தோற்றம், அம்சங்கள் என பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது. இதன் ஹெட்லைட் புதிய ஜெ பிளாட்பார்மை சார்ந்து உருவாகி இருக்கும் என தெரிகிறது. ராயல் என்பீல்டு சமீபத்தில் அறிமுகம் செய்த மீடியோர் 350 மாடல் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது ஆகும். 

    இந்த மாடலில் 349சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

     ராயல் என்பீல்டு மீடியோர் 350

    இத்துடன் மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சம் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் 2021 கிளாசிக் 350 மாடலில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமையும். 

    இந்தியாவில் கிளாசிக் 350 விலை ரூ. 1,79,782 (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி அதிகபட்சம் ரூ. 2,06,962 (எக்ஸ்-ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது. 2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 தற்போதைய மாடலை விட அதிக விலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சென்னையை சேர்ந்த வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் உலகின் மிகப்பெரிய கண்காட்சியில் ஹைப்ரிட் பறக்கும் காரை அறிமுகம் செய்கிறது.


    பறக்கும் கார்களை உற்பத்தி செய்யும் பணிகளில் உலகின் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. போக்குவரத்து துறையில் பறக்கும் கார் தொழில்நுட்பம் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது. பறக்கும் கார் துறையில் சென்னையை சேர்ந்த வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் புது மைல்கல் எட்ட திட்டமிட்டுள்ளது. 

    தானியங்கி முறையில் செயல்படும் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடலை வினாடா ஏரோமொபிலிட்டி நிறுவனம் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் லண்டனில் நடைபெற இருக்கும் உலகின் மிகப்பெரும் ஹெலிடெக் பொருட்காட்சியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆசியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் மாடல் ஆகும். 

     வினாடா பறக்கும் கார்

    இரண்டு இருக்கைகளை கொண்டிருக்கும் பறக்கும் கார் இயற்கை எரிவாயு மற்றும் மின்திறன் கொண்டு இயங்குகிறது. ஹைப்ரிட் பறக்கும் கார் 1100 கிலோ எடை கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார் 1300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    இந்த ஹைப்ரிட் பறக்கும் கார் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார், 3 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் வரை செல்லும்.
    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் இந்தியாவில் இரண்டு வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.


    ஸ்கோடா நிறுவனம் குஷக் 1.5 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்களை இந்தியாவில் வினியோகம் செய்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு குஷக் அறிமுக நிகழ்வின் போதே துவங்கியது. எனினும், தற்போது தான் இந்த மாடலின் வினியோகம் துவங்கி இருக்கிறது.

     ஸ்கோடா குஷக்

    இந்தியாவில் ஸ்கோடா குஷக் மாடலின் விற்பனை ஜூன் 28 ஆம் தேதி துவங்கியது. இதுவரை இந்த மாடல் 4 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட குஷக் எஸ்.யு.வி. மூன்று வேரியண்ட்கள், இருவித என்ஜின் ஆப்ஷன்கள், 3 டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் லிட்டருக்கு 17.95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
    ×