என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கியா இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் எக்ஸ்-லைன் மாடல் வெளியீட்டு விவரம் அறிவிக்கப்பட்டது.
கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. காரின் புதிய டாப் எண்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டாப் எண்ட் மாடல் செல்டோஸ் எக்ஸ்-லைன் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இதே கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழா மற்றும் எல்.ஏ. ஆட்டோ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய கியா செல்டோஸ் எக்ஸ்-லைன் அம்சங்கள் மற்றும் இந்திய விலை விவரங்கள் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட இருக்கிறது. தற்போது செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 16.65 லட்சத்தில் துவங்கி ரூ. 17.85 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தோற்றத்தில் கியா செல்டோஸ் எக்ஸ் லைன் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்புறம் கிளாஸ் பிளாக் நிற கிரில் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த கார் டார்க் தீம் கொண்ட நிறங்களால் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது.
இபைக் கோ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இபைக் கோ நிறுவனம் இந்திய சந்தையில் ரக்கட் பெயரில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ரக்கட் எலெக்ட்ரிக் மாடல் துவக்க விலை ரூ. 79,999, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதற்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். இபைக் கோ ரக்கட் மாடலின் வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்க இருக்கிறது. ரக்கட் எலெக்ட்ரிக் மாடலில் 3kW ஹப் மவுண்ட் செய்யப்பட்ட பிரஷ்லெஸ் டிசி மோட்டார் மற்றும் இரட்டை 1.9kWh லித்தியம் அயன் பேட்டரி உள்ளது.

இவற்றை 4 மணி நேரத்திற்குள் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும். இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 160 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டைகுன் எஸ்.யு.வி. மாடலை செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. புதிய டைகுன் மாடல் விலை இந்திய சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
வோக்ஸ்வேகன் இந்தியாவின் எஸ்.யு.வி.டபிள்யூ. பிரிவில் அறிமுகமாகும் முதல் மாடலாக டைகுன் வெளியாகிறது. இந்த மாடல் இந்திய சந்தையின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் எம்.கியூ.பி. ஏ.ஒ. ஐ.இ. பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

புதிய டைகுன் மாடலில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதன் 1 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 113 பி.ஹெச்.பி. பவர், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு திட்டம் பற்றி அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித திட்டமும் இல்லை என உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனை ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிர்வாக இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தெரிவித்தார்.
ட்விட்டரில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜாக் ஹாலிஸ், 'இந்தியாவுக்கு எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவோம். ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் எப்போது வெளியாகும்,' என கூற முடியாது என தெரிவித்தார்.

இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் குறைந்தபட்சம் ஒரு எலெக்ட்ரிக் மாடலையாவது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்கோடாவின் இந்த அறிவிப்பு சந்தையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடலின் இந்திய விலை விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடல் அம்சங்கள் நேற்று (ஆகஸ்ட் 24) அறிவிக்கப்பட்டன. புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் அந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் என் சீரிஸ் மாடல் ஆகும்.
நேற்று அம்சங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய என் லைன் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்த கார் ஹூண்டாய் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர், டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. திறன், 172 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஐ.எம்.டி. டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.9 நொடிகளில் எட்டிவிடும். புதிய கார் வெளிப்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கேஸ்கேடிங் கிரில், என் லைன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முந்தைய தகவல்களில் இந்த மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது. எனினும், புதிய கிளாசிக் 350 இந்திய வெளியீட்டை ராயல் என்பீல்டு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக மீடியோர் 350 மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருந்தது. புதிய கிளாசிக் 350 மாடலிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர், டி.ஓ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்படுகிறது. எனினும், இதன் செயல்திறன் பற்றிய விவரங்கள் மர்மமாக இருக்கிறது.
Ride out and #BeReborn
— Royal Enfield (@royalenfield) August 25, 2021
Visit https://t.co/WDEjjsZedj#RoyalEnfield#RidePure#PureMotorcyclingpic.twitter.com/hiSO4QA7bj
புதிய கிளாசிக் 350 என்ட்ரி லெவல் மாடல் விலை ரூ. 1.85 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக இருக்கின்றன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர்.
ஏற்கனவே டாடா நெக்சான் இ.வி. துவங்கி மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி. என பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர பல்வேறு இதர எலெக்ட்ரிக் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புது எலெக்ட்ரிக் மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா அல்ட்ரோஸ் இ.வி. - 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்ட்ரோஸ் இ.வி. மாடலில் நெக்சான் இ.வி.-யில் வழங்கப்பட்டதைவிட 40 சதவீதம் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா இ.கே.யு.வி.100 - இந்திய சந்தையில் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரி, முழு சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது.

டெஸ்லா மாடல் 3 - அமெரிக்க எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரின் மாடல் 3 இந்தியாவில் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விலை ரூ. 55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் இ.வி. - ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட பிரத்யேக எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் மாடல் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
டாடா டிகோர் இ.வி. - டாடாவின் டிகோர் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதன் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐ20 என் லைன் மாடல் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ20 என் லைன் ஹேட்ச்பேக் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக இருந்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் என் பிராண்டு மாடல் ஆகும்.
புதிய ஐ20 என் லைன் மாடலில் 1.6 லிட்டர் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் தற்போது விற்பனை செய்யப்படும் ஐ20 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கார் வெளிப்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள், பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கேஸ்கேடிங் கிரில், என் லைன் பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் புதிய அலாய் வீல் டிசைன், டூயல் எக்சாஸ்ட்கள், பிரத்யேக 3 ஸ்போக் ஸ்டீரிங் டிசைன், டிஸ்க் பிரேக், வெஹிகில் ஸ்டேபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், இ.பி.எஸ். மற்றும் ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடல் முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 முதல் யூனிட் அந்நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அந்நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 500 மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும்.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கார் அறிமுகமாகிவிட்ட போதிலும் இதற்கான முன்பதிவுகள் இதுவரை துவங்கவில்லை.
புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஏற்கனவே விற்பனை செய்யப்படும் எக்ஸ்.யு.வி. 500 மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் அல்காசர், டாடா சபாரி, எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின், 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின்கள் முறையே 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 185 பி.எஸ். பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனத்தின் எம்டி 15 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா நிறுவனத்தின் 'தி கால் ஆப் தி புளூ' பிராண்டிங் திட்டத்தின் கீழ் எம்டி 15 மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய யமஹா எம்டி 15 மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 1,47,900, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளின் பெட்ரோல் டேன்க், பக்கவாட்டு பேனல்களில் மோட்டோ ஜிபி பிராண்டிங் செய்யப்பட்டு உள்ளது. இவைதவிர மோட்டோ ஜிபி எடிஷன் மாடலிலும் 155சிசி, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உள்ளது.

இந்த என்ஜின் அதிகபட்சமாக 18.5 பி.எஸ். திறன், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புதிய எம்டி 15 மோட்டோ ஜிபி எடிஷனில் சைடு-ஸ்டான்ட் என்ஜின் கட்-ஆப், ஏ&எஸ் கிளட்ச், சிங்கில் சேனல் ஏ.பி.எஸ்., வேரியபில் வால்வு ஆக்டுவேஷன் சிஸ்டம் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய யமஹா எம்டி 15 மோட்டோ ஜிபி எடிஷனில் யுனி-லெவல் சீட் மற்றும் கிராப் பார், மல்டி-பன்ஷன் நெகடிவ் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பை பன்ஷனல் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டெயில் லைட் மற்றும் அன்டர் கவுல் வழங்கப்பட்டு இருக்கிறது. யமஹா எம்டி 15 மோட்டோ ஜிபி எடிஷன் மொத்த எடை 138 கிலோ ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. எலெக்ட்ரிக் கார் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. வெளியீட்டை தொடர்ந்து டிகோர் இ.வி. மாடல் தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. அடுத்த வாரம் டிகோர் இ.வி. மாடலின் விலை அறிவிக்கப்பட இருக்கிறது.
டாடாவின் புதிய டிகோர் இ.வி. மாடலில் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் டிகோர் இ.வி. ஆகும். மேலும் இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேம்பட்ட சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிகோர் இ.வி. மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன.
டிகோர் இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும்.
முன்னதாக டாடா டிகோர் இ.வி. முன்பதிவு துவங்கியது. இந்தியாவில் டிகோர் இ.வி. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பன்ச் எனும் பெயரில் புது மைக்ரோ எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக ஹெச்.பி.எக்ஸ். அல்லது ஹான்பில் எனும் பெயரில் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், புது மைக்ரோ எஸ்.யு.வி. பன்ச் எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
புதிய டாடா பன்ச் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொண்டு ஆல்பா-ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் நெக்சான் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையில் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வருகிறது.

டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா பன்ச் மாடல் மாருதி சுசுகி இக்னிஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.






