search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700
    X
    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 உற்பத்தி துவக்கம்

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடல் முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 முதல் யூனிட் அந்நிறுவன உற்பத்தி ஆலையில் இருந்து வெளியாகி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அந்நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 500 மாடலின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். 

    இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கார் அறிமுகமாகிவிட்ட போதிலும் இதற்கான முன்பதிவுகள் இதுவரை துவங்கவில்லை.

    புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 ஏற்கனவே விற்பனை செய்யப்படும் எக்ஸ்.யு.வி. 500 மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் அல்காசர், டாடா சபாரி, எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் ஜீப் காம்பஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.700

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 700 மாடல் விலை ரூ. 11.99 லட்சத்தில் துவங்குகிறது. புதிய எக்ஸ்.யு.வி. 700 மாடலில் 2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின், 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த என்ஜின்கள் முறையே 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 185 பி.எஸ். பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. இவற்றுடன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.  

    Next Story
    ×