என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் இ.வி. எலெக்ட்ரிக் மாடல் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 டிகோர் இ.வி. மாடலை ரூ. 11.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் காம்பேக்ட் செடான் மாடல் மூன்று வேரியண்ட்கள், இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
டிகோர் இ.வி. வேரியண்ட் மற்றும் விலை:
டாடா டிகோர் இ.வி. எக்ஸ்.இ. - ரூ. 11.99 லட்சம்
டாடா டிகோர் இ.வி. எக்ஸ்.எம். - ரூ. 12.49 லட்சம்
டாடா டிகோர் இ.வி. எக்ஸ்.இசட். - ரூ. 12.99 லட்சம்
டாடா டிகோர் இ.வி. எக்ஸ்.இசட். பிளஸ் டூயல் டோன் - ரூ. 13.14 லட்சம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டிகோர் இ.வி. மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். இதன் வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
டாடா டிகோர் இ.வி. மாடலில் 26 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இது 74 பி.ஹெச்.பி. திறன், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த காரை பாஸ்ட் சார்ஜர் கொண்டு 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.84 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.15 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடல் முற்றிலும் புதிய சேசிஸ், என்ஜின், ரெட்ரோ டிசைன் மற்றும் சிறப்பான ரைடிங் அனுபவம் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக 2021 கிளாசிக் 350 இருந்தது. இந்த மாடலில் உள்ள கிளாசிக் 350 லோகோவும் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வேரியண்ட் மற்றும் விலை விவரம்
ரெடிட்ச் - ரூ. 1,84,374
ஹல்சியோன் - ரூ. 1,93,123
சிக்னல்ஸ் - ரூ. 2,04,367
டார்க் - ரூ. 2,11,465
க்ரோம் - ரூ. 2,15,118
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய கிளாசிக் 350 மாடல் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்படுகிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது வாகனங்கள் விலையை மீண்டும் உயர்த்த இருக்கிறது. விலை உயர்வு, செப்டம்பர் மாதத்தில் அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மூன்றாவது முறையாக கார் மாடல்கள் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஆல்டோ முதல் விட்டாரா பிரெஸ்ஸா வரை மாருதி நிறுவனம் தற்போது விற்பனை செய்யும் அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் வாகனங்கள் உற்பத்திக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்கள் விலை உயர்த்தப்படுகிறது. இந்த முறை கார்களின் விலை எவ்வளவு அதிகரிக்க இருக்கிறது என இதுவரை எந்த தகவலும் இல்லை.

முன்னதாக ஜனவரி மாத வாக்கில் கார் மாடல்கள் விலை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. பின் ஏப்ரல் மாதத்தில் கார்களின் விலை 1.6 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது. மாருதி சுசுகி மட்டுமின்றி பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் வாகனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபாச்சி ஆர்.ஆர்.310 பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெணி நிறுவனத்தின் 2021 அபாச்சி ஆர்.ஆர்.310 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய அபாச்சி ஆர்.ஆர்.310 துவக்க விலை ரூ. 2.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய மோட்டார்சைக்கிளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தனிப்பட்ட முறையில் அம்சங்களை பெறும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் செப்டம்பர் மாதத்திற்கு 100 யூனிட்களும், அக்டோபர் மாதத்திற்கு 150 யூனிட்களும் விற்பனை செய்யப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மாடலிலும் 312சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் 2022 ஜி310 ஆர் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வரிசையில் இந்த மாடல் தற்போது இந்தியாவில் அறிமுகமாகிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. ஜி310 ஆர் மாடலில் புல் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டெப்-அப் சேடிள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஆர் மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 2021 ஜி310 ஆர் மாடல் விலை ரூ. 2.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
புதிய பி.எம்.டபிள்யூ. ஜி310 ஆர் மாடலில் புல் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டெப்-அப் சேடிள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.

2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஆர் மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 2021 ஜி310 ஆர் மாடல் விலை ரூ. 2.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
டாடா நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் டார்க் எடிஷன் மாடல் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இ.வி. மாடலின் விலையை இந்தியாவில் மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. இந்தியாவில் நெக்சான் எலெக்ட்ரிக் கார் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. நெக்சான் இ.வி. பேஸ் வேரியண்ட் மற்றும் டார்க் ரேன்ஜ் வேரியண்ட்களின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
நெக்சான் இ.வி. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 9 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி நெக்சான் இ.வி. மிட்-ரேன்ஜ் வேரியண்ட் விலை ரூ. 15.65 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.65 லட்சம் என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் டாடா நெக்சான் இ.வி. மாடல் மாதாந்திர சந்தா அடிப்படையிலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மாதாந்திர சந்தா விலை ரூ. 29,500 முதல் துவங்குகிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய டிபெண்டர் மாடல் 90 மற்றும் 110 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த, அதிவேகமான டிபெண்டர் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிபெண்டர் மாடல் விலை ரூ. 1.82 கோடி ஆகும்.
வி8 என்ஜின் கொண்ட டிபெண்டர் மாடல் தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் கார்பதியன் எடிஷன் வேரியண்ட்களில் கிடைக்கிறது. முன்னதாக இதே மாடல் பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய டிபெண்டர் மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் 5 லிட்டர், வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 525 ஹெச்.பி. திறன், 625 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உள்ளது.
இந்த எஸ்.யு.வி. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.2 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும்.
மஹிந்திராவின் தார் மாடலுக்கு போட்டியாக உருவாகி இருக்கும் 2021 போர்ஸ் குர்கா மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆப்-ரோடு எஸ்.யு.வி. குர்கா மாடல் விரைவில் அறிமுகமாகிறது. புதிய குர்கா 4x4 மாடலுக்கான டீசர் அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
2021 போர்ஸ் குர்கா மாடல் பண்டிகை காலக்கட்டத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. குர்கா எஸ்.யு.வி. மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் அறிமுகமாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது டீசர் வெளியாகி இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Bold. Mighty. Real.
— Force Motors Ltd. (@ForceMotorsFML) August 27, 2021
Make way for true-blooded adventure!
Comment with a 🔥 if you can't wait!
.
.
.#TheallnewGurkha#ForceGurkha#Comingsoon#StayTuned#GetReady#Gurkha4x4x4pic.twitter.com/Swk1LYaEYs
முன்னதாக 2021 போர்ஸ் குர்கா மாடல் கிரேட்டர் நொய்டாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய சந்தையில் புதிய குர்கா 4x4 மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
கே.டி.எம். நிறுவனத்தின் 2021 ஆர்.சி. சீரிஸ் மோட்டார்சைக்கிள் மாடல்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகின்றன.
புதிய தலைமுறை ஆர்.சி. 390, 200 மற்றும் 125 மாடல்களை உருவாக்கும் பணிகளில் கே.டி.எம். நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தற்போது புது மாடல்களுக்கான டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது. விரைவில் புதிய ஆர்.சி. மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
டீசரில் புதிய ஆர்.சி. மாடலின் சில விவரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. புதிய மாடல்களில் ஒற்றை ஹெட்லேம்ப் யூனிட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன. முந்தைய மாடல்களில் டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

2021 ஆர்.சி. மாடல்களின் வெளிப்புற தோற்றம் முற்றிலும் புதிதாக காட்சியளிக்கும் என தெரிகிறது. டியூக் சீரிஸ் போன்றே புதிய ஆர்.சி. மாடல்களிலும் போல்ட்-ஆன் சப்-பிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல்களில் ஸ்ப்லிட்-சீட் செட்டப், க்ளிப் ஆன் ஹேண்டில்பார்கள் உள்ளன.
இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் 1,890சிசி என்ஜின் கொண்டிருக்கிறது.
இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2022 சீப் (Chief) மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சீப் சீரிஸ் - சீப் டார்க் ஹார்ஸ், சீப் பாபர் டார்க் ஹார்ஸ் மற்றும் சூப்பர் சீப் லிமிடெட் என மூன்று மாடல்களில் கிடைக்கிறது. புதிய 2022 சீப் ரேன்ஜ் விலை ரூ. 20.75 லட்சத்தில் துவங்குகிறது.
மூன்று மாடல்களிலும் ஸ்டீல் டியூப் கொண்ட பிரேம், இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் தண்டர்ஸ்டிரோக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1890 சிசி, ட்வின் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சம் 162 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த மோட்டார் பின்புற சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் அம்சம் கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய மாடல்களில் 15.1 லிட்டர் பியூவல் டேன்க், பாப்டு ரியர் பெண்டர், 46 எம்.எம். முன்புற போர்க், டூயல் எக்சாஸ்ட், எல்.இ.டி. லைட்டிங், கீலெஸ் இக்னிஷன், பைரெளி நைட் டிராகன் டையர்கள், ஏ.பி.எஸ்., குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்போர்ட், ஸ்டாண்டர்டு மற்றும் டூர் போன்ற ரைடிங் மோட்கள் உள்ளன.
இந்தியாவில் கார்களின் விற்பனை விலை விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாக வரி குறைப்பு இருந்து வருகிறது. விரைவில் இந்த கோரிக்கைக்கு ஒன்றிய அரசு செவி சாய்க்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி குறைப்பு காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என வருவாய் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் டிரக் உள்ளிட்டவைகளுக்கு இந்தியாவில் 28 சதவீதம் வரி வசூல் செய்யப்படுகிறது. இத்துடன் பல்வேறு மாநில வரி சேர்த்து வாகனங்கள் விலை மேலும் அதிகமாகும். இதன் காரணமாக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க ஆட்டோமொபைல் துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரும் ஆட்டோமொபைல் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. எனினும், நூற்றில் எத்தனை பேர் வாகனம் வைத்திருக்கின்றனர் என்ற எண்ணிக்கையில் மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது.
டுகாட்டி நிறுவனத்தின் புதிய சூப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
டுகாட்டி நிறுவனம் சூப்பர்ஸ்போர்ட் 950 பி.எஸ்.6 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய மோட்டார்சைக்கிள் வெளியீட்டை டுகாட்டி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே யூரோ 5 / பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் டுகாட்டி சூப்பர்ஸ்போர்ட் 950 சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்த மாடலில் 937சிசி, எல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 108.6 பி.ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் யூனிட் வழங்கப்படுகிறது.






