என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியாகி உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் குறைந்த விலையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.
சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஓலா எஸ்1 மற்றும் சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் புது மாடல் உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது.

ஏத்தர் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் தற்போது பயன்படுத்தப்படும் 450 பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் குறைந்த அம்சங்கள், சராசரியான செயல்திறன் மற்றும் சற்றே குறைந்த ரேன்ஜ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மாடல் பல்வேறு மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய கிளாசிக் 350 மாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.2 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
2021 ராயல் என்பீல்டு கிளாசிக் ரெடிட்ச் ரூ. 1,84,374, ஹல்சியோன் - ரூ. 1,93,123, சிக்னல்ஸ் - ரூ. 2,04,367, டார்க் - ரூ. 2,11,465, க்ரோம் - ரூ. 2,15,118 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
2021 கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 1.84 லட்சத்தில் துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 மாடல் மீடியோர் 350 மாடலில் பயன்படுத்தப்பட்ட ஜெ பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

2021 ராயல் என்பீல்டு கிளாசிக் ரெடிட்ச் ரூ. 1,84,374, ஹல்சியோன் - ரூ. 1,93,123, சிக்னல்ஸ் - ரூ. 2,04,367, டார்க் - ரூ. 2,11,465, க்ரோம் - ரூ. 2,15,118 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கிளாசிக் 350 பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை மையங்கள் எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரே நாளில் 70 புதிய விற்பனை மையங்களை திறந்துள்ளது. புது விற்பனை மையங்கள் நாடு முழுக்க 53 நகரங்களில் திறக்கப்பட்டுள்ளன. பண்டிகை காலக்கட்டத்திற்கு முன், டாடா மோட்டார்ஸ் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதலே சபாரி எஸ்.யு.வி. பின் டியாகோ என்.எக்ஸ்.ஜி. மற்றும் டிகோர் இ.வி. போன்ற மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புது விற்பனை மையங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

புது விற்பனை மையங்கள் மூலம் கர்நாடகா, தமிழ் நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி போன்ற நகரங்களில் கூடுதல் கவனம் செலுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
தானியங்கி டாக்சிக்களை உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் இரு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்காலத்தில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் தானியங்கி டாக்சி வாகனமாக வீதிகளில் வலம்வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய், ஆப்டிவ் மற்றும் மோஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தானியங்கி ரோபோ டாக்சியை உருவாக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் தானியங்கி டாக்சிக்கள் 2023 வாக்கில் சாலைகளில் எதிர்பார்க்க முடியும்.

தானியங்கி டாக்சிக்கள், முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு உருவாகி இருக்கும் ஐயோனிக் 5 மாடலை தழுவி எஸ்.ஏ.ஐ. லெவல் 4 ஆட்டோனோமஸ் வெஹிகில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது. பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தானியங்கி வாகனத்தில் பல்வேறு சென்சார்கள், ரிமோட் வெஹிகில் அசிஸ்டன்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பெட்ரோல் கார் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடு கண்டறியப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது சியாஸ், எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எக்ஸ்.எல்.6 போன்ற பெட்ரோல் மாடல்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை சேர்ந்த 1,81,754 யூனிட்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த யூனிட்கள் அனைத்தும் 2018 மே 4 ஆம் தேதி முதல் 2020, அக்டோபர் 27 ம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். பாதிக்கப்பட்ட கார்களின் மோட்டார் ஜெனரேட்டர் யூனிட் மாற்றப்பட இருக்கிறது. திரும்ப பெறப்படும் கார்களை ஆய்வு செய்து, பிரச்சினை இலவசமாக சரி செய்யப்படுகிறது.

பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்துவோருக்கு மாருதி சுசுகி அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்கள் மூலம் தகவல் கொடுக்கப்படும். எனினும், கார்களை சரி செய்யும் பணிகள் நவம்பர் மாதத்திலேயே துவங்க இருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருப்போர், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் கார் ஓட்ட வேண்டாம் என மாருதி சுசுகி கேட்டுக் கொண்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஜி310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிள் ட்ரிபில் பிளாக் எனும் புதிய நிறத்தில் உருவாகி இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜி310 ஜி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. சமீபத்தில் இந்த மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்டு 2022 மாடல் என அறிமுகமானது.
2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஜி.எஸ். மாடல் பிளாக்டு-அவுட் பெயிண்ட், கிரே நிற ஜி.எஸ். லோகோ கொண்டிருக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய 2022 மாடலிலும் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 33.5 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 2022 பி.எம்.டபிள்யூ. ஜி310 ஜி.எஸ். மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்கள், புல் எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய மாடலின் விலை ரூ. 3.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி பணிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் ஏழு நாட்களுக்கு வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. ஆட்டோமொபைல் சந்தையில் செமிகண்டக்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட இருக்கின்றன.
செமிகண்டக்டர் சிப்களுக்கான தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி ஆலைகள் மூடப்படுகின்றன. சந்தையில் செமிகண்டக்டர் தட்டுப்பாடு மேலும் மோசமடையும் என தெரிகிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வந்தது.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் வாகனங்கள் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், செமிகண்டக்டர் உற்பத்தி தற்போதைய தேவைக்கு ஏற்ப நடைபெறவில்லை. செமிகண்டக்டர் சிப் குறைபாடு காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளன.
ஆடி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 750 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம் கிராண்ட்ஸ்பியர் கான்செப்ட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. புதிய ஆடி கான்செப்ட் எலெக்ட்ரிக் கார் லெவல் 4 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது லெவல் 4 ஆட்டோனோமஸ் டிரைவிங் தொழில்நுட்பம் கொண்ட ஆடியின் இரண்டாவது கான்செப்ட் மாடல் ஆகும்.
புதிய கிராண்ட்ஸ்பியர் ஆடம்பர செடான் மாடல் ஆகும். இதன் முன்புறம் எல்.இ.டி. லைட்டிங், பி-ஸ்போக் இண்டீரியர், தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் உள்ளது. வீல் மற்றும் கண்ட்ரோல் அம்சங்கள் டேஷ் பேனலின் பின் மறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 120 கிலோவாட் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 750 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இ டிரான் ஜி.டி. மற்றும் போர்ஷ் டேகேன் போன்றே கிராண்ட்ஸ்பியர் மாடலிலும் 800 வோல்ட் ஆர்கிடெக்ச்சர் உள்ளது.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இசட்.எஸ். இ.வி. மாடல் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 700 எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'இசட்.எஸ். இ.வி. மாடலுக்கு ஆகஸ்டில் 700-க்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் சிலர் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் தயாராகவில்லை என கூறுகின்றனர். அர்த்தமுள்ள எலெக்ட்ரிக் புரட்சிக்கு மேலும் சில காலம் ஆகும் என எனக்கு தெரியும்.' என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு துவக்க கட்டத்திலேயே இருக்கிறது. எனினும், 2020-21 நிதியாண்டில் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 53 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனத்தின் இரண்டு புதிய 600 சிசி மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
அப்ரிலியா இந்தியா நிறுவனம் இரண்டு புதிய பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் ஆர்.எஸ். 660 மற்றும் டியூனோ 660 என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 13.39 லட்சம் மற்றும் ரூ. 13.09 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அப்ரிலியா ஆர்.எஸ். 660 மற்றும் டியூனோ 660 மாடல்களில் 659சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த என்ஜின் ஆர்.எஸ். 660 மாடலில் 98.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

டியூனோ 660 மாடலில் இதே என்ஜின் 93.6 பி.ஹெச்.பி. திறன், 67 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. செயல்திறன் மட்டுமின்றி தோற்றத்தில் இரு மாடல்களும் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. இரு மாடல்களும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன.
அப்ரிலியா ஆர்.எஸ். 660 மாடல் அபெக்ஸ் பிளாக், லாவா ரெட் மற்றும் ஆசிட் கோல்டு நிறங்களிலும் டியூனோ 660 மாடல் கான்செப்ட் பிளாக், இரிடியம் கிரே மற்றும் அசிடிக் கோல்டு நிறங்களிலும் கிடைக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புது அறிவிப்பு காரணமாக கார் வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர்.
மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் தனது கார் உற்பத்தி பணிகளை 60 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. நாட்டின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி, சந்தையில் நிலவும் சிப்செட் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி குறைக்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் சுசுகி மோட்டார் குஜராத் உற்பத்தி ஆலையில், செமிகண்டக்டர் தட்டுப்பாடு காரணமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது. செப்டம்பரில் ஹரியானா மற்றும் சுசுகி மோட்டார் குஜராத் ஆலைகளிலும் உற்பத்தி குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஜூன் மாதம் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற போது, மாருதி நிறுவனம் 1,70,719 யூனிட்களை உற்பத்தி செய்து இருந்தது. செப்டம்பரில் மாருதி நிறுவனம் 68 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. பண்டிகை காலக்கட்டத்தில் இதுபோன்ற சூழல் சந்தையில் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் லைன் மாடல் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐ20 என் லைன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஐ20 என் லைன் மாடல் துவக்க விலை ரூ. 9.84 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.75 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய ஐ20 என் லைன் மாடல் - என்6 ஐ.எம்.டி., என்8 ஐ.எம்.டி. மற்றும் என்8 டி.சி.டி. என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1 லிட்டர் டர்போ ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 120 பி.எஸ். திறன் மற்றும் 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஐ.எம்.டி. யூனிட் வழங்கப்படுகிறது.






