என் மலர்
ஆட்டோமொபைல்

எம்.ஜி. இசட்.எஸ். இ.வி.
முன்பதிவில் நல்ல வரவேற்பை பெறும் எம்.ஜி. எலெக்ட்ரிக் கார்
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இசட்.எஸ். இ.வி. மாடல் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 700 எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'இசட்.எஸ். இ.வி. மாடலுக்கு ஆகஸ்டில் 700-க்கும் அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் சிலர் இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இன்னும் தயாராகவில்லை என கூறுகின்றனர். அர்த்தமுள்ள எலெக்ட்ரிக் புரட்சிக்கு மேலும் சில காலம் ஆகும் என எனக்கு தெரியும்.' என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு துவக்க கட்டத்திலேயே இருக்கிறது. எனினும், 2020-21 நிதியாண்டில் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 53 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
Next Story