search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிம்பில் ஒன்"

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் டெஸ்ட் ரைடு பற்றி புது தகவல் தெரிவித்து உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான சிம்பில் எனர்ஜி தனது முதல் பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- சிம்பில் ஒன் டெஸ்ட் ரைடுகள் ஜூலை 20 ஆம் தேதி நாட்டின் 13 நகரங்களில் துவங்கும் என தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக டெஸ்ட் ரைடுகள் பெங்களூருவிலும் அதன் பின் சென்னை, ஐதராபாத், மும்பை, பூனே, பனாஜி மற்றும் இதர நகரங்களில் துவங்குகிறது.

    டெஸ்ட் ரைடுகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெற இருக்கின்றன. முன்னதாக சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி தாமதமாக துவங்கும் என சிம்பில் எனர்ஜி அறிவித்து இருந்தது. அந்த வகையில், டெஸ்ட் ரைடுகளை தொடர்ந்து சிம்பில் ஒன் மாடல்களின் வினியோகம் துவங்கும். 

     சிம்பில் ஒன்

    இந்தியாவில் சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும். இதன் லாங் ரேன்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 999 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ் நாட்டின் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இத்துடன் சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் இரண்டாவது ஆலை தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 12.5 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

    ×