என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ஆர்.எஸ்.200 மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். விலை விவரங்களை பார்ப்போம்.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் ஆர்.எஸ்.200 டூயல் சேனல் ஏ.பி.எஸ். வேரியண்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பல்சர் ஆர்.எஸ்.200 டூயல் சேனல் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலின் விலையை விட ரூ. 1000 அதிகம் ஆகும்.

    பல்சர் ஆர்.எஸ்.200

    பல்சர் ஆர்.எஸ்.200 டூயல் சேனல் ஏ.பி.எஸ். மாடலில் 199சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் பி.எஸ். 6 என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 24.5 பி.ஹெச்.பி. பவர், 18.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இசில் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படவில்லை.

    புதிய ஆர்.எஸ்.200 மாடலில் பிரேக்கிங் தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே ஆர்.எஸ்.200 வைத்திருப்போருக்கு டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதியை சேர்த்துக் கொள்ளும் வசதியை பஜாஜ் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபென்டர் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    லேண்ட் ரோவர் நிறுவனம் தனது டிஃபென்டர் எஸ்.யு.வி. மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையில் அறிமுகமானது முதல் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் 2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் முதலில் டிஃபென்டர் 110 மாடலை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

    சிறிய டிஃபென்டர் 90 இந்தியாவில் 2020 டிசம்பர் மாத வாக்கில் துவங்கலாம். இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் டிஃபென்டர்: ஸ்டான்டர்டு, எஸ், எஸ்.இ., மற்றும் ஹெச்.எஸ்.இ. என நான்கு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து வேரியண்ட்களிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம்.

    லேண்ட் ரோவர் டிஃபென்டர்

    உயர் ரக எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. வேரியண்ட்களில் க்ளியர்சைட், 360-டிகிரி கேமரா, விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பிரீமியம் லெதர் இருக்கைகள், பிளைன்ட்-ஸ்பாட் வார்னிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டிஃபென்டர் சீரிஸ் அனைத்து மாடல்களிலும் அர்பன் பேக், கண்ட்ரி பேக், அட்வென்ச்சர் பேக் மற்றும் எக்ஸ்புளோரர் பேக் என பல்வேறு அக்சஸரீ பேக்கேஜ்களுடன் கிடைக்கிறது. இது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கு ஏற்ற அம்சங்களை வழங்குகிறது.

    இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஒற்றை என்ஜின் ஆப்ஷனில் வெளியாகலாம். இது 296 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் இக்னியம் பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வசதியுடன் கிடைக்கிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான அட்ரோஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி 2020 வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    அதன்படி டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு டிசம்பர் 4-ம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் அறிவிப்பு புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய அல்ட்ரோஸ் காரினை வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் முன்பதிவு செய்யலாம்.

    டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரம்
    டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரம்
    டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரம்

    டாடா அல்ட்ரோஸ் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டாடா அல்ட்ரோஸ் காரின் விளம்பர நோட்டீஸ் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என லீக் ஆன அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டாடா அல்ட்ரோஸ் கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. டாடா ஹேரியர் மாடலை தொடர்ந்து இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடலாக டாடா அல்ட்ரோஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக டாடா அல்ட்ரோஸ் கான்செப்ட் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த ஆண்டு ஜெனீவா மோட்டார் விழாவில் ஹேரியர் மற்றும் இதர வாகனங்களுடன் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது.

    புகைப்படம் நன்றி: Team BHP
    சென்னையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களை முதல் அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.



    வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிறமுதலீட்டாளர்களிடமிருந்து தமிழ் நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளைப் ஈர்த்திடவும், நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகியநாடுகளுக்கு முதல்- அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குழுவினர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர். 

    இந்த பயணத்தில் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். இப்பயணத்தின் நிறைவாக, துபாயில், இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச் சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், துபாயின் கே.எம்.சி. குழுமம் மற்றும் எம். ஆட்டோ எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    சென்னையில் மின்சார ஆட்டோ திட்டம் துவக்கம்

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக, நிறுவனத்தால் பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டு, முதற்கட்டமாக சென்னையில் 100 மின்சார ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று மின்சார ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த மின்சார ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஆபத்து பொத்தான் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். பெரும்பான்மையான மின்சார ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் பெண்கள், மற்றும் திருநங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் செடான் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஆரா கார் இந்தியாவில் டிசம்பர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் விற்பனை ஜனவரி 2020 வாக்கில் துவங்குகிறது. புதிய ஹூண்டாய் ஆரா கார் ஏற்கனவே விற்பனையாகும் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகிறது.

    புதிய ஆரா கார் ஹூண்டாய் எலான்ட்ரா மற்றும் வெர்னா மாடல்களை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் மூன்று-பெட்டி வடிவமைப்பு, ராப் அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர காரின் இதர வடிவமைப்பு அம்சங்கள் மறைக்கப்பட்டுள்ளது.

    இதன் உள்புறங்களில் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற வடிவமைப்பும், 8.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் புளூ-லின்க் கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ஹூண்டாய் ஆரா  என்ஜின் விவரங்கள்

    புதிய ஆரா காரின் பின்புற பம்ப்பரில் பதிவு எண் பலகை, எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள், வழங்கப்படுகின்றன. மேலும் இதில் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் டீசர் மற்றும் 1.0 லிட்டர் டைரக்ட் இன்ஜக்‌ஷன் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஹூண்டாய் ஆரா கார் மாருதி சுசுகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பையர், ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டிகோர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9.75 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் துவக்கக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இது அறிமுகமாக இன்னும் சில காலம் ஆகும் என கூறப்படுகிறது.

    எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்க எதிர்காலத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சுமார் ரூ. 700 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாகல ராயல் என்ஃபீல்டு நிறுவன தலைமை செயல் அதிகாரி வினோத் தசாரி தெரிவித்தார். புதிய மோட்டார்சைக்கிள் பற்று இதுவரை வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

    ராயல் என்ஃபீல்டு புல்லட் கோப்புப்படம்

    இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவன வாகனங்கள் விற்பனை வரும் மாதங்களில் இருமடங்கு வரை அதிகரிக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இது எதிர்கால வளர்ச்சியின் அங்கமாக பார்க்கப்படுகிறது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவன வாகனங்கள் விற்பனை இந்த ஆண்டு துவக்கம் முதலே சரிவை சந்தித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ராயல் இல்லாதளவு அந்நிறுவனம் 50,000-க்கும் குறைந்த யூனிட்களை விற்பனை செய்திருந்தது. எனினும், இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கான தட்டுப்பாடு காரணமாக பெருமளவு சரிவு தவிர்க்கப்பட்டது.

    தற்சமயம் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கான்டினென்ட்டல் ஜி.டி. 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகின்றன.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டி ராக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் டி ராக் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடல் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய டி ராக் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் கார் ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ் மற்றும் ஸ்கோடா கரோக் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டி ராக்

    புதிய ஸ்பை படங்களில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்.யு.வி. முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. எனினும், காரின் முன்புறம் மெல்லிய கிரில், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் பிரம்மாண்ட பம்ப்பர்கள், பெரிய மெஷ் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    முன்புற பம்ப்பரில் பெரிய ஏர்-இன்டேக், சில்வர் ஸ்கிட் பிளேட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் இன்டிகேட்டர் போன்று இயங்குகின்றன. காரின் பக்கவாட்டில் கூர்மையான கிரீஸ்களும், பெரிய வீல் ஆர்ச்களும் காணப்படுகிறது. டி ராக் கார் டூயல் டோன் நிறம் கொண்டிருக்கிறது. காரின் பின்புறம் ஸ்போர்ட் தீம், மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    ஃபோக்ஸ்வேகன் டி ராக் மாடலில் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர், 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    புகைப்படம் நன்றி: Team-BHP
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செஸ்டோஸ் எஸ்.யு.வி. காரின் விலையை விரைவில் மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. காரை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்தது. கியா செல்டோஸ் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், கியா செல்டோஸ் காரின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு வேரியணட்டிற்கு ஏற்ப மாறுபடும் என தெரிகிறது.

    ஜனவரி 1, 2020 முதல் செல்டோஸ் காரை பெறும் வாடிக்கையாளர்கள் காருக்கு கூடுதல் கட்டணம் வேண்டியிருக்கும் என்றும் டிசம்பர் 31, 2019 வரை காரை பெறுவோர் எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்யிருக்காது என கூறப்படுகிறது.

    கியா செல்டோஸ்

    கியா செல்டோஸ் கார்: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன. இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் கிடைக்கிறது.

    கியா செல்டோஸ் கார் ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.
    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஜூப்பிட்டர் பி.எஸ். 6 வேரியண்ட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் பி.எஸ். 6 ஜூப்பிட்டர் வேரியண்ட் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எஸ். 6 டி.வி.எஸ். ஜூப்பிட்டர் விலை ரூ. 67,911 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எஸ். 6 அப்டேட் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மற்ற வேரியண்ட்களுக்கும் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்படலாம். டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 ஸ்கூட்டரில் டி.வி.எஸ். நிறுவனத்தின் இ.டி.-எஃப்.ஐ. (இகோதிரஸ்ட் ஃபியூயல் இன்ஜெக்ஷன்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர்

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் கிளாசிக் பி.எஸ். 6 இ.டி.-எஃப்.ஐ. தொழில்நுட்பம் பெறும் முதல் வேரியண்ட் ஆகும். இந்த தொழில்நுட்பம் மற்ற வேரியண்ட்களிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் முந்தைய ஜூப்பிட்டர் மாடல்களை விட புதிய பி.எஸ். 6 வேரியண்ட் 15 சதவிகிதம் கூடுதல் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    இவை தவிர டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 மாடல் இன்டி-புளூ எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் யு.எஸ்.பி. சார்ஜர், மொபைல் வைக்கும் ஸ்டாண்டு போன்றவை வழங்கப்பட்டுள்ளது. 

    டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 ஸ்கூட்டரில் 109.7சிசி சிங்கில் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.8 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். மற்றும் 8 என்.எம். டார்க் @5500 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சி.வி.டி. டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
    நாடு முழுக்க இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் பயன்படுத்தும் நடைமுறை டிசம்பர் முதல் கட்டாயமாகிறது.



    நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு வகை செய்யும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தொழில்நுட்பம் வரும் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்படுகிறது.

    மத்திய அரசு கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசு துறைகளில் 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படுகிறது.

    அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு ’பாஸ்டேக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பாஸ்டேக் என்பது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். இதற்குள் நுண்ணிய சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடு ஆர்.எப்.ஐ.டி. என்று சொல்லப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

    வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர், சுங்கச்சாவடிகளை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கருவியுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்தும். அந்த வாகனத்தின் ரகம் என்ன? அதற்காக வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் எவ்வளவு? என்பதை உடனடியாக துல்லியமாக கணிக்கும்.

    பாஸ்டேக் ஸ்டிக்கர்

    மேலும், வாகன ஓட்டியின் வங்கி கணக்கை இந்த கருவி இணைப்பதோடு, அங்கிருந்து சுங்கக் கட்டணமாக அந்த வாகனம் செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் தானாக எடுத்துக்கொள்ளும். எனவே பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென்று தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியில் வாகனங்கள் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் வந்துவிட்டால், 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

    வருகிற 1-ந் தேதியில் இருந்து அரசு இதை கட்டாயமாக்க உள்ளது. தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சுங்கக் கட்டணம் செலுத்த வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களில் எரிபொருள் செலவு குறைகிறது.

    இந்த திட்டத்தில் வாகனங்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அத்துடன் பார்கோடு வசதி கொண்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒன்றும் வழங்கப்படும். அந்த பாஸ்டேக் ஸ்டிக்கரை பல்வேறு வங்கிகள் வழங்குகின்றன. அந்த வங்கிகளின் பெயர்களை என்.பி.சி.ஐ. இணையதளத்தில் காணலாம். வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் ஸ்டிக்கர்கள் தரப்படுகின்றன. 

    வைலட், ஆரஞ்ச், பச்சை, மஞ்சள், பிங்க், ஊதா, கருப்பு ஆகிய வண்ணங்கள் உள்ளன. உதாரணமாக, காருக்கு தனியார் வங்கி ஒன்றில் ரூ.500 செலுத்த வேண்டும். இதில், குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.200, பாஸ்டேக் வைப்புத்தொகை ரூ.200, இணைப்பு கட்டணம் ரூ.100 ஆகியவை அடங்கும்.

    இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொள்ளலாம். கட்டணம் எடுக்கப்படும் போதெல்லாம் எஸ்.எம்.எஸ். தகவலும் வந்துவிடும். வாகனத்தை விற்கும்போது பாஸ்டேக் உடனான இணைப்பை துண்டிக்கவும் வசதி உள்ளது.
    ஜாகுவார் நிறுவனத்தின் ஐ-பேஸ் பேட்டரி எஸ்.யு.வி. கார் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    டாடா நிறுவனத்தின் அங்கமான ஜாகுவார் நிறுவனம் தயாரித்துள்ள ஐ-பேஸ் பேட்டரி கார்தான் இந்த ஆண்டில் மிகச்சிறந்த பேட்டரி எஸ்.யு.வி. காராகும். பேட்டரியில் இயங்கும் எஸ்.யு.வி. கார்களில் அதிக வேகம் செல்லும் காராகவும் இது விளங்குகிறது. 

    இந்த காரை ஸ்டார்ட் செய்து 4.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. ‘லிஸ்டர்’ என்ற பெயரில் அறிமுகமாகும் இந்தக் காரின் விலை சுமார் ரூ. 1.16 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஜாகுவார் ஐ பேஸ்

    இந்த மாடல் காரில் கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் எடை 100 கிலோவாக குறைந்துள்ளது. இது வாகனத்தின் செயல்திறன் மேம்பட உதவியுள்ளது. டைட்டானிய உலோகத்தில் ஆன அலாய் சக்கரங்கள் மற்றும் செராமிக் பிரேக் ஆகியனவும் வாகனத்தின் எடையைக் குறைப்பதற்கு மிகவும் உதவியுள்ளன.

    ஜாகுவார் நிறுவனம் இந்த எஸ்.யு.வி. பேட்டரி காரை கண்கவர் வண்ணங்களில் தயாரித்து அடுத்த ஆண்டில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது.
    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பி.எஸ். 6 ரக ஆர்.டி.ஆர். மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 2020 அபாச்சி ஆர்.டி.ஆர். மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். மாடல்களில் பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவை அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமலாக இருக்கும் புதிய புகை விதிகளுக்கு பொருந்தும்.

    முதற்கட்டமாக டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மற்றும் 200 4வி மோடார்சைக்கிள் மாடல்கள் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலின் துவக்க விலை ரூ. 99,950 என்றும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடல் ரூ. 1.24 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அபாச்சி ஆர்.டி.ஆர். 160 4வி மாடலில் 159.7சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 16 பி.ஹெச்.பி. @8250 ஆர்.பி.எம். மற்றும் 14.1 என்.எம். டார்க் @7250 ஆர்.பி.எம். செயல்திறன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடலில் 197.75 சிசி, சிங்கிள் சிலி்ண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 பி.எஸ். 6

    இந்த என்ஜின் 20 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம். மற்றும் 16.8 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களும் பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

    மேம்பட்ட என்ஜின்களை தவிர இந்த மோட்டார்சைக்கிள்களில் ஜி.டி.டி. (கிளைடு த்ரூ டிராஃபிக்) எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் நகரம் மற்றும் கிராமங்களில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்க வழி செய்கிறது. MY20 ரேன்ஜ் மாடல்களில் ஃபெதர் டச் ஸ்டார்ட் எனும் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ‘SmartXonnect' தொழில்நுட்பம் கொண்ட டி.வி.எஸ். நிருவனத்தின் முதல் வாகனமாக அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் வசதியை வழங்குகிறது. இத்துடன் இந்த பிரிவு வாகனங்கலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் ஆர்.எல்.பி., ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட ஒற்றை மாடலாக ஆர்.டி.ஆர். 200 4வி இருக்கிறது.
    ×