என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
மெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எட்டாம் தலைமுறை ஜி.எல்.ஏ. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2020 ஜி.எல்.ஏ. காரில் சிறிதளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜி.எல்.ஏ. காரில் அதிநவீன டிரைவிங் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது ஓட்டுனருக்கு அதிக வசதிகளை வழங்குவதோடு, இந்த பிரிவு கார்களில் அதிநவீன பாதுகாப்பு வசதியை வழங்குகிறது.
2020 ஜி.எல்.ஏ. காரில் நிரந்தரமாக 4MATIC ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்தை பொருத்திக் கொள்ள முடியும். இதில் கார்பன் ஃபைபர் கோட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 1000 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆல் வீல் டிரைவ் அம்சம் கொண்டு ஓட்டுனரால் டைனமிக் செலக்ட் அம்சத்தை பயன்படுத்தி 4MATIC திறனை இயக்க முடியும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் 4-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் வருகிறது. இது முந்தைய வெர்ஷன்களை விட அதிக திறன் கொண்டிருக்கிறது. இதே கார் பிளக்-இன் ஹைப்ரிட் டிரைவ் சிஸ்டம் உருவாக்கப்பட்டு வருவதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
புதிய தலைமுறை ஜி.எல்.ஏ. காரில் 1.33 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 161 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.7 நொடிகளில் எட்டிவிடும்.
சர்வதேச அளவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில் மொத்தம் 89,671 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 15 சதவீத சரிவாகும். கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,04,964 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.
இதில் டாடா பயணிகள் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிந்து (66,429-ல் இருந்து) 58,641-ஆக குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் குறைந்து (38,535-ல் இருந்து) 31,030-ஆக சரிவடைந்துள்ளது.

டாடா நிறுவனம் மொத்தம் 46,542 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 11,464-ஆக உள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது.
யமஹா நிறுவனத்தின் புதிய டபிள்யூ.ஆர். 155 ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மோட்டார்சைக்கிளில் இளைஞர்கள் பெரிதும் விரும்பும் பெயர் யமஹா. இந்நிறுவனத் தயாரிப்புகள் சீறிப் பாய்வதாலேயே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் சாகசப் பயணத்துக்கேற்ற புதிய மாடலை உருவாக்கி உள்ளது. 155 சி.சி. திறன்கொண்ட இந்த மாடல் டபிள்யூ.ஆர்.155ஆர் என்ற பெயரில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சாகச பயணத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கன்சோல் உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டாகோ மீட்டர், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் அளவீடு உள்ளிட்டவற்றை உணர்த்தும் மீட்டர்கள் உள்ளன. ஹாலோஜன் முகப்பு விளக்கைக் கொண்டுள்ளது. முகப்பு விளக்கை சுற்றிலும் இரட்டை வண்ணம் (டியூயல் டோன்) பூசப்பட்டுள்ளது.

கரடு, முரடான சாலைகளில் செல்வதற்கு ஏற்ப இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் மிகவும் மெல்லியதாக அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 8 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விளங்குகிறது. சாகச பயணத்துக்கு ஏற்றதாக இது இருந்தாலும், சாதாரண சாலைகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.
தற்போதைக்கு கருப்பு மற்றும் நீல நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எடை 134 கிலோவாகும். இதன் நீளம் 2,145 மி.மீ., அகலம் 840 மி.மீ., உயரம் 1,200 மி.மீ. ஆகும். இது ஒற்றை சிலிண்டர் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. முன்பகுதியில் நீண்ட போர்க்கும், நடுவில் மோனோ ஷாக் அப்சார்பரையும் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
முன்சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும் பின்சக்கரம் 18 அங்குலம் உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
இந்தியாவில் நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
கடந்த பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த அக்டோபர், மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட அனைத்து வகையான மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 13 சதவீதத்திற்கு மேல் குறைந்து 21,76,136-ஆக இருந்தது.
நவம்பர் மாதத்தில் பயணிகள் வாகனங்கள், இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து மோட்டார் வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 17,92,415-ஆக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 20,38,007-ஆக இருந்தது. அந்த வகையில், விற்பனை ஏறக்குறைய 12 சதவீதம் குறைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் 2,63,773 பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகி இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,66,000-ஆக இருந்தது. ஆக, விற்பனை 0.34 சதவீதம் மட்டும் குறைந்து இருக்கிறது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்து 61,907-ஆக குறைந்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14 சதவீதம் குறைந்து (16,45,783-ல் இருந்து) 14,10,939-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் சரிந்து (10,49,651-ல் இருந்து) 8,93,538-ஆக குறைந்துள்ளது. இவ்வாறு சியாம் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஹோன்டா நிறுவனத்தின் சிட்டி பி.எஸ். 6 பெட்ரோல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனத்தின் பி.எஸ்.6 சிட்டி பெட்ரோல் மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஹோண்டா நிறுவனம் தனது பெட்ரோல் மாடல்களை மட்டுமே பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்துள்ளது. எதிர்காலத்தில் டீசல் என்ஜின்களும் பி.எஸ்.6 தரத்திற்கு அப்டேட் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய காரில் ஹோண்டா நிறுவனம் டிஜிபேட் 2.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடன் டன்-பை-டன் நேவிகேஷன், நேரலை போக்குவரத்து நெரிசல் தகவல்கள், வாய்ஸ் கமாண்ட், ப்ளூடூத் இணைப்பில் அலைபேசி வசதி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
ஹோண்டா சிட்டி பி.எஸ். 6 காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் தாய்லாந்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் விற்பனை, நவம்பர் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில், உலக அளவில், 46,542 ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை விற்பனை செய்துள்ளது.
இது சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 3.4 சதவீதம் குறைவாகும். இதில் ஜாகுவார் கார்கள் விற்பனை 23 சதவீதம் குறைந்து 11,464-ஆக உள்ளது. லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை 35,078-ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 5.5 சதவீதம் உயர்வாகும்.

சீனாவில் ஜே.எல்.ஆர். கார்கள் விற்பனை 29 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. வட அமெரிக்காவில் விற்பனை 4.9 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும் இங்கிலாந்தில் 10.8 சதவீதமும், ஐரோப்பாவில் 16.8 சதவீதமும் குறைந்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் ரூ.216 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாக கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,048 கோடியாக இருந்தது. அந்த வகையில், இழப்பு கணிசமாக குறைந்துள்ளது.
ஜாவா நிறுவன மோட்டார்சைக்கிள்களை பெற இத்தனை மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவன வாகனங்களை பெற ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மஹிந்திரா குழும நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களை பெற 10 முதல் 15 நாட்கள் காத்திருந்தாலே போதும் என கூறப்பட்டது.
இதுகுறித்து வெளியான மற்ற தகவல்களில் ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்களுக்கான காத்திருப்பு காலம் குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. எனினும், இந்த தகவல்களில் உண்மையில்லை என உறுதியாகி இருக்கிறது.

அந்த வகையில் ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி டூ மாடல்களை வாங்க முன்பதிவு செய்ததில் இருந்து ஐந்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜாவா பெராக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஜனவரி 2020-இல் துவங்குகிறது. இதன் விநியோகம் ஏப்ரல் 2020 முதல் துவங்கும்.
ஜாவா மற்றும் ஃபார்டி டு மாடல்களில் 293சிசி மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் அளவுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது. ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் நேரடியாக பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் மாடல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் டிசம்பர் 19 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இதன் அறிமுக நிகழ்வு டிசம்பர் 17 இல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டாடா நெக்சான் இ.வி. கார் அறிமுகம் இம்மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதன் விற்பனை நான்காவது காலாண்டில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் பவர்டிரெயின் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் நெக்சான் இ.வி. கார் ஃபேஸ்லிஃப்ட் நெக்சான் எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என இதுவரை வெளியான டீசர்களில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த கார் சோதனையின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய பொனெட் மற்றும் முன்புற பம்ப்பர் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள், மெல்லிய கிரில், டி.ஆர்.எல்.கள் கொண்ட ஹெட்லைட் யூனிட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய நெக்சான் கார் அக்டோபர் 2020 முதல் அமலாக இருக்கும் புதிய பாதசாரி பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் என கூறப்படுகிறது.
புதிய காரில் அலாய் வீல் வடிவமைப்புகள், பின்புற ஸ்டைலிங் போன்றவை தற்சமயம் விற்பனையாகும் காரை விட வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்சான் இ.வி. கார் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விற்பனையகங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 300 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய அளவு திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன வாகனங்கள் விலை ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்படுகிறது.
தென் கொரிய ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது வாகனங்கள் விலையை ஜனவரி 2020 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலை உயர்த்தப்படுவதாக அறிவித்து இருந்தன.
தற்சமயம் வரை வாகனங்கள் விலை எத்தனை சதவீதம் உயரும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும் என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப அவற்றின் விலையில் ரூ. 2000 வரை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
இதேபோன்று டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தனது வாகனங்கள் விலையில் ரூ. 10,000 முதல் ரூ. 15,000 வரை உயர்த்தப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2019 நவம்பர் மாத அடிப்படையில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஏழு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் மாருதி சுவிப்ட் முதலிடத்தில் நீடிக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் நவம்பர் மாதத்தில் 19,314 சுவிப்ட் கார்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மொத்தம் 22,191 யூனிட்களை மாருதி விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் டாப் 10 கார்கள் பட்டியலில் இது முதல் இடத்தில் நீடிக்கிறது.
மாருதி பலேனோ விற்பனை 3 சதவீதம் குறைந்து (18,649-ல் இருந்து) 18,047 கார்களாக குறைந்து இருக்கிறது. இது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மாருதி செடன் டிசையர் கார் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்தக் கார் விற்பனை 17,659-ஆக குறைந்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 21,037 கார்களாக இருந்தது.

மாருதி ஆல்டோ விற்பனை 15,086-ஆக குறைந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 18,643-ஆக இருந்தது. இது நான்காவது இடத்தில் நீடிக்கிறது. மாருதி வேகன் ஆர் 6-வது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தக் கார் விற்பனை (11,311-ல் இருந்து) 14,650-ஆக உயர்ந்துள்ளது.
கியா செல்டாஸ் கார் விற்பனை 14,005-ஆக இருக்கிறது. இந்த கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மாருதியின் விடாரா பிரெஸ்ஸா விற்பனை 12,033-ஆக இருக்கிறது. இந்த கார் ஏழாவது இடத்திற்கு சென்று இருக்கிறது. மாருதியின் எஸ் பிரெஸ்ஸோ விற்பனை 11,220-ஆக உள்ளது. இந்த கார் 8-வது இடத்திற்கு வந்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் எலைட் ஐ20 கார் விற்பனை 1 சதவீதம் சரிவடைந்து 10,446-ஆக உள்ளது. இது டாப் 10 பட்டியலில் ஒன்பதாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இது 7-வது இடத்தில் இருந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்டு ஐ10 கார்கள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து (9,252-ல் இருந்து) 10,186-ஆக உயர்ந்து இருக்கிறது. இந்தக் கார் 10 இடத்தில் இருக்கிறது.
ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது. முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் தனது வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ஜனவரி 1, 2020 முதல் விலை உயர்வு அமலாகும் என்றும் மாடலுக்கு ஏற்ப வாகனங்களின் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ. 2000 வரை உயர்த்தப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்கள் விலையை உயர்த்த போவதாக அறிவித்து இருந்தது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.4 ரக வாகனங்களின் உற்பத்தியை சமீபத்தில் நிறுத்தியது. இதைத் தொடர்ந்து வாகனங்களை பி.எஸ்.6 தரத்தில் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்ட முதல் பி.எஸ்.6 வாகனமாக ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் வரிசையில் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 1, 2020 முதல் பி.எஸ்.6 வாகனங்களை விற்பனைக்கு வழங்கும் நிலையில், அவற்றின் விலை உயரும் என கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஜெனிசிஸ் ஜி.வி.80 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் ஆடம்பர பிரிவான ஜெனிசிஸ் விரைவில் இரண்டு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதில் முதல் மாடல் ஜெனிசிஸ் ஜி.வி.80 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் ஜெனிசிஸ் ஜி.வி.80 மாடல் முதலில் 2017 நியூ யார்க் சர்வதேச ஆட்டோ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆடம்பர பிரிவு சார்பில் வெளியான முதல் எஸ்.யு.வி. மாடலாக ஆகும். தற்சமயம் ஜெனிசிஸ் ஜி.வி.80 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்பை படங்களில் கார் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய ஜெனிசிஸ் ஜி.வி.80 மாடல் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரின் முன்புறம் பெரிய கிரில், பிரத்யேக ஹெட்லேம்ப் டிசைன், பக்கவாட்டில் ஷோல்டர் லைன் காணப்படுகிறது. பின்புறம் டெயில் லேம்ப்கள் மற்றும் டெயில்கேட்டில் ஜெனிசிஸ் என எழுதப்பட்டுள்ளது.
உள்புறத்தில் டேஷ்போர்டு மினிமலிஸ்ட் டிசைன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பெரிய சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது கிளைமேட் கண்ட்ரோல் பேனலில் கேபாசிட்டிவ் மற்றும் வழக்கமான பட்டன்கள் காணப்படுகின்றன.
சர்வதேச சந்தையில் ஜெனிசிஸ் மாடலில் 304 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்கும் 2.5 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும், 38 ஹெச்.பி. பவர் வழங்கும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் யூனிட் மற்றும் 278 ஹெச்.பி. பவர் வழங்கும் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படம் நன்றி






