search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    யமஹா டபிள்யூ.ஆர். 155 ஆர்
    X
    யமஹா டபிள்யூ.ஆர். 155 ஆர்

    அதிரடி அம்சங்களுடன் யமஹா டபிள்யூ.ஆர். 155 ஆர் அறிமுகம்

    யமஹா நிறுவனத்தின் புதிய டபிள்யூ.ஆர். 155 ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மோட்டார்சைக்கிளில் இளைஞர்கள் பெரிதும் விரும்பும் பெயர் யமஹா. இந்நிறுவனத் தயாரிப்புகள் சீறிப் பாய்வதாலேயே இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிறுவனம் சாகசப் பயணத்துக்கேற்ற புதிய மாடலை உருவாக்கி உள்ளது. 155 சி.சி. திறன்கொண்ட இந்த மாடல் டபிள்யூ.ஆர்.155ஆர் என்ற பெயரில் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சாகச பயணத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் கன்சோல் உள்ளது. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டாகோ மீட்டர், ட்ரிப் மீட்டர், பெட்ரோல் அளவீடு உள்ளிட்டவற்றை உணர்த்தும் மீட்டர்கள் உள்ளன. ஹாலோஜன் முகப்பு விளக்கைக் கொண்டுள்ளது. முகப்பு விளக்கை சுற்றிலும் இரட்டை வண்ணம் (டியூயல் டோன்) பூசப்பட்டுள்ளது. 

    யமஹா டபிள்யூ.ஆர். 155 ஆர்

    கரடு, முரடான சாலைகளில் செல்வதற்கு ஏற்ப இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேங்க் மிகவும் மெல்லியதாக அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தாலும் 8 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக விளங்குகிறது. சாகச பயணத்துக்கு ஏற்றதாக இது இருந்தாலும், சாதாரண சாலைகளிலும் இதைப் பயன்படுத்தலாம்.

    தற்போதைக்கு கருப்பு மற்றும் நீல நிறங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் எடை 134 கிலோவாகும். இதன் நீளம் 2,145 மி.மீ., அகலம் 840 மி.மீ., உயரம் 1,200 மி.மீ. ஆகும். இது ஒற்றை சிலிண்டர் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டது. முன்பகுதியில் நீண்ட போர்க்கும், நடுவில் மோனோ ஷாக் அப்சார்பரையும் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

    முன்சக்கரம் 21 அங்குலம் கொண்டதாகவும் பின்சக்கரம் 18 அங்குலம் உடையதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்திய சந்தையிலும் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
    Next Story
    ×