என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 மாடலின் விலையை சத்தமில்லாமல் மாற்றியிருக்கிறது.



    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 125 சிசி ஸ்கூட்டர் விலையை உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 125 மாடல் விலை ரூ. 68,042 இல் இருந்து ரூ. 75,042 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆக்டா 125 மூன்று வேரியண்ட்களின் விலையும் ரூ. 7 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஆக்டிவா 125 ஸ்கூட்டர் தான் ஹோண்டா நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 வாகனம் ஆகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.  ஹோன்டா ஆக்டிவா 125 பிஎஸ் 6 ஸ்கூட்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. 

    ஹோண்டா ஆக்டிவா 125

    ஸ்கூட்டரின் முன்புறம் சற்று மாற்றப்பட்டு, எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் ஸ்கூட்டருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. ஆக்டிவா 125 பிஎஸ் 6 மாடலில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. 

    உபகரணங்களை பொருத்தவரை ஆக்டிவா 125 மாடலில் வெளிப்புறம் ஃபியூயல் ஃபில்லிங் கேப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சைலன்ட் ஸ்டார்ட், குளோவ் பாக்ஸ், சைடு-ஸ்டான்டு சென்சார், எல்இடி லைட்டிங், அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸடர் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முன்பை விட கூடுதல் விவரங்களை காண்பிக்கிறது. இத்துடன் சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டரும் இடம்பெற்றிருக்கிறது. புதிய ஹோன்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காரை பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் கார்களை அதிகம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் காரை இயக்காமல் இருந்தால் காரின் பேட்டரி பாதிப்படையும். இதனை சரிசெய்ய சில யோசனைகளை தொடர்ந்து பார்ப்போம். 

    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியில் உள்ள ‘டிஸ்டில்டு வாட்டர்’ அளவை சோதிப்பது அவசியம். தண்ணீரின் அளவு அதில் உள்ள அதிகபட்ச குறியீடு வரை நிரப்ப வேண்டும்.

    சிலர் காரை வாரம் ஒருமுறை, மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். இவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை என்ஜினை இயக்க வேண்டும். இதனால் பேட்டரியில் உள்ள மின்சக்தி குறையாமல் இருக்கும். சில நேரங்களில் காரை வீட்டில் விட்டுவிட்டு வெளியூருக்கு சென்று 10 அல்லது 15 நாள் கழித்து திரும்புவர். 

    கார் பேட்டரி

    அவ்விதம் நீண்ட காலம் காரை பயன்படுத்தாத சூழலில் பேட்டரியின் பாசிட்டிவ், நெகட்டிவ் வயர்களை கழற்றி வைத்துவிட்டு போகலாம். இதனால் கார் பேட்டரி இழப்பு தவிர்க்கப்படும். பேட்டரி சார்ஜ் குறையாமல் இருக்கும். ஊருக்கு திரும்பியதும் மீண்டும் வயரை பேட்டரியில் இணைப்பதன் மூலம் கார் உடனடியாக ஸ்டார்ட் ஆகும். பேட்டரி சார்ஜ் குறைவதையும் தவிர்க்க முடியும். 

    கார் பேட்டரியை இரண்டு வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது. இதன் மூலம் கார் பாதி வழியில் மக்கர் செய்து நின்று போவதை தவிர்க்க முடியும். கார் இயங்காதபோது காரினுள் விளக்கை எரியவிடுவது, கார் ஸ்டீரியோவில் பாட்டு கேட்பது போன்றவற்றை தவிர்த்தாலே பேட்டரியின் ஆயுள் கூடும். 

    கார் நிறுவனம் அளிக்கும் மின்சார பாகங்கள் தவிர்த்து கூடுதலாக ஃபேன்சி ஹாரன், அலங்கார விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்தும்போது பேட்டரியின் செயல்திறன் விரைவில் குறைந்துபோகும்.
    ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் பிஎஸ்6 மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்றன. ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் உள்ளிட்ட மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவிட்டது.

    கடந்த ஆண்டு ரெனால்ட் நிறுவனத்தின் பிஎஸ்6 ரக கேப்டூர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியானது. ஸ்பை படங்களில் புதிய கேப்டூர் மாடலில் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருந்தது தெளிவாக தெரிந்தது.

    ரெனால்ட் கேப்டூர்

    புதிய மேம்பட்ட கேப்டூர் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. 

    அதன்படி ரெனால்ட் கேப்டூர் மாடலில் அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

    புதிய கேப்டூர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.
    வால்வோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களுக்கான வாரண்டியை நீட்டிப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோ துறையும் கடுமையாக பாதித்து இருக்கிறது. பெரும்பாலான ஆட்டோ நிறுவன விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனினும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தன்பங்கிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார்களுக்கு வழங்கப்பட்டு இருந்த வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வாரண்டி நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வால்வோ கார்

    வாரண்டி நீட்டிப்பு சலுகை  மார்ச் 22 ஆம் தேதி துவங்கி மே 3 ஆம் தேதி வரை வாரண்டி நிறைவு பெறும் வாகனங்களுக்கு பொருந்தும் என வால்வோ இந்தியா தெரிவித்து இருக்கிறது. 

    "வாடிக்கையாளர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே எங்களின் மிகமுக்கிய குறிக்கோள் ஆகும். கொரோனா வைரஸ் பாதிப்பு பராமல் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு அறிவித்து இருக்கும் ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இந்த காலக்கட்டத்தில் வாரண்டியில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கில் வாரண்டியை மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம்" என வால்வோ கார் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சார்லஸ் ஃபிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.  
    கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக பயன்படுத்த நாடு முழுக்க 60 மொபைல் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வழங்கி இருக்கிறது.



    உலகின் முன்னணி இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், நாடு முழுக்க பயன்படுத்த 60 மொபைல் ஆம்புலன்ஸ் வாகனங்களை நன்கொடையாக வழங்கி இருக்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மொபைல் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 150சிசி மற்றும் அதற்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களே மொபைல் ஆம்புலன்ஸ் ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள்களில் தேவையான அனைத்து விதமான உபகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் மொபைல் ஆம்புலன்ஸ்

    இவற்றில் படுக்கை வசதி, அடிப்படை மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, தீ அணைப்பான் மற்றும் சைரென் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    மொபைல் ஆம்புலன்ஸ் கொண்டு ஊரக பகுதிகளில் வசிக்கும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. மேலும் மொபைல் ஆம்புலன்ஸ் கொண்டு நோயாளிகளை அருகாமையில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு ஹீரோ குழுமம் சார்பில் ரூ. 100 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்க பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.



    பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மோபெட்களும் மோட்டாரைஸ்டு சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய வாகனங்கள்  உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பவர்டு டு வீலர் சிட்டம் பைரெர் மொபிலிட்டி குழுமம் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் துவங்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் 3 முதல் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.

    கேடிஎம் ஸ்கூட்டர்

    பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்களிடையேயான கூட்டணி 2007 ஆம் ஆண்டு துவங்கியது. அன்று முதல் இதுவரை இரு நிறுவனங்கள் கூட்டணியில் பல்வேறு வாகனங்கள் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் கீழ் வெளியான முதல் வாகனம் பஜாஜ் பல்சர் 200 என்எஸ் ஆகும். இதில் கேடிஎம் டியூக் 200 என்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 
     
    பஜாஜ் மற்றும் கேடிஎம் கூட்டணியின் அங்கமாக கேடிஎம் நிறுவனத்தின் அனைத்து ஹஸ்குவர்னா மாட்களின் உற்பத்தி பணிகளும் பூனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. இதுதவிர பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் மாடலை ஐரோப்பிய சந்தைக்கு கேடிஎம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறது. 
    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது.



    பிஎம்டபிள்யூ நிறுவனம் காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் எனும் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்காக துவங்கி இருக்கிறது. 

    புதிய காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் திட்டம் கொண்டு வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் கார்களை கான்ஃபிகர் செய்வது, பணம் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். இவ்வாறு செய்தபின் கார் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.

    பிஎம்டபிள்யூ காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ்

    காண்டாக்ட்லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் சேவையை பிஎம்டபிள்யூ வலைதளத்தில் இயக்க முடியும். வாடிக்கையாளர்கள் கார் மாடல் மற்றும் வேரியண்ட்டை தேர்வு செய்ததும், ஆன்லைன் கான்ஃபிகரேட்டர் திறக்கும். இதை கொண்டு வாடிக்கையாளர்கள் வாகனத்தில் செய்ய விரும்பும் மாற்றங்களை தேர்வு செய்யலாம்.

    கான்ஃபிகர் செய்வதில் உள்புறத்தில் பயன்படுத்தப்படும் மென்மையான துணி வகை, வாகனத்தின் அலாய் வீல்கள் மற்றும் இதர அக்சஸரீக்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்பின் பிஎம்டபிள்யூ ஆன்லைன் ஸ்டோர் திறக்கும். இதல் வாடிக்கையாளர் விற்பனையாளரை தேர்வு செய்ய வேண்டும். 

    பின் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு வாகன விற்பனை பற்றிய தகவல்களை கேட்டறிந்து, முறையான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதியில் வாகனத்தை டெலிவரி செய்வார்கள்.
    ராயல் என்ஃபீல்டு நிறுவன வாகனங்களுக்கு இலவச சர்ஸீவ் மற்றும் வாரண்டி சலுகை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்ட இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. சேவை நீட்டிப்பு பற்றி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் ராயல் என்ஃபீல்டு விற்பனையகங்கள் மற்றும் ரோட்சைடு அசிஸ்டண்ஸ் மற்றும் டோர்ஸ்டெப் சர்வீஸ் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இலவச சர்வீஸ் போன்ற சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ராயல் என்ஃபீல்டு புல்லட்

    இத்தனை சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதால், மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு நிறைவுற்றதும் வாகனத்தை சீராக வைத்துக் கொள்வதற்கான அறிவுரைகளையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மோட்டார்சைக்கிள்கள் சென்டர் ஸ்டான்டு போடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவை உறுதியான நிலப்பரப்பில் நிறுத்தப்பட
     வேண்டும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. மேலும் வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்திவைக்கப்படாமல், குறைந்த பட்சம் 2.5 மீட்டர்கள் அளவு முன்பும் பின்பும் அசைக்கப்பட வேண்டும். 

    இவ்வாறு செய்யும் போது முன்புறம் மற்றும் பின்பக்க பிரேக்குகளை மென்மையாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இத்துடன் மோட்டார்சைக்கிள் அடிக்கடி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இயக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்.
    ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் பிஎஸ்6 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    2020 ஹோண்டா ஜாஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்டு நிலையில் காட்சியளிக்கும் புதிய ஜாஸ் பிஎஸ்6 மாடல் நெடுஞ்சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது.

    ஸ்பை படங்களின் படி புதிய காரில் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன் இந்த வாகனம் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதிய 2020 ஹோண்டா ஜாஸ் மாடலில் சிறிதளவு காஸ்மெடிக் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. வடிவமைப்பு மாற்றங்கள் பற்றி அதிக விவரங்கள் அறியப்படாத நிலையில், இந்த கார் சில மாற்றங்களுடன் வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஸ்பை படம்

    புதிய ஹோண்டா ஜாஸ் மாடல் 1.2 லிட்டர் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 90 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் மற்றும் 100 பிஹெச்பி மற்றும் 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஃபேப்ரிக் இருக்கைகள், லெதர் ஸ்டீரிங் வீல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி, எலெக்டிரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் வழங்கப்படுகிறது. 

    பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், பவர் டோர் லாக், சைல்டு சேஃப்டி லாக், டூயல் ஏர்பேக், சீட்பெல்ட் வார்னிங் அலாரம், டிராக்ஷன் கண்ட்ரோல், என்ஜின் இம்மொபைலைசர், கிராஷ் சென்சார், பின்புறம் பார்க்கிங் கேமரா வழங்கப்படுகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    ஸ்கோடா நிறுவனத்தின் சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபிளாக்ஷிப் செடான் மாடலின் வடிவமைப்பு மாற்றம் செய்யப்பட்டு, மேம்பட்ட பவர்டிரெயின் மற்றும் புதிய விலையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடல் இந்தியாவில் ஏப்ரல் 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    தற்சமயம் இதன் மேம்பட்ட மாடல் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு தற்சமயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட்

    ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற கிரில், புதிய பம்ப்பர்கள், குரோம் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப்கள், மேட்ரிக்ஸ் தொழில்நுட்பம், எல்இடி ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன.

    காரின் உள்புறம் 2020 ஸ்கோடா சூப்பர்ப் மாடலில் மேம்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், விர்ச்சுவல் காக்பிட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், மற்றும் மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லெதர் இருக்கைகள், சன்ரூஃப், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    இந்தியாவில் வெளியான முதல் மூன்று மாதங்களுக்குள் கியா கார்னிவல் எம்பிவி 3000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்பிவி கார் மாடலை இரண்டாவது வாகனமாக வெளியிட்டது. கார்னிவல் எம்பிவி கார் அறிமுகத்தின் போதே அதிக வரவேற்பை பெற்றது. பிரீமியம் மாடலாக உருவாகி இருக்கும் கார்னிவல் எம்பிவி மாடலில் அதிக அம்சங்கள் நிறைந்திருக்கிறது. 

    கியா கார்னிவல்

    கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ரேடியான் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 58,992 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 8600 வரை அதிகம் ஆகும். 

    புதிய மோட்டார்சைக்கிளில் 109.7சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர ரேடியான் பிஎஸ்6 மாடல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6

    பிஎஸ்6 என்ஜின் காரணமாக மோட்டார்சைக்கிள் எடை நான்கு கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களின் எடை முறையே 116 கிலோ மற்றும் 118 கிலோவாக இருக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட 15 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தெரிவித்துள்ளது.

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல்களில் சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம், யுஎஸ்பி சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரேடியான் பிஎஸ்6 மாடல் ஸ்டான்டர்டு மற்றும் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்டான்டர்டு மாடல் ஆறு வெவ்வேறு நிறங்களிலும், கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் எடிஷன் மாடல் பிரத்யேகமாக பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது.
    ×