search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா கார்னிவல்
    X
    கியா கார்னிவல்

    விற்பனையில் புதிய மைல்கல் கடந்த கியா கார்னிவல்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கியா கார்னிவல் எம்பிவி கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்துள்ளது.



    இந்தியாவில் வெளியான முதல் மூன்று மாதங்களுக்குள் கியா கார்னிவல் எம்பிவி 3000 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கியா கார்னிவல் பிரீமியம் எம்பிவி கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்பிவி கார் மாடலை இரண்டாவது வாகனமாக வெளியிட்டது. கார்னிவல் எம்பிவி கார் அறிமுகத்தின் போதே அதிக வரவேற்பை பெற்றது. பிரீமியம் மாடலாக உருவாகி இருக்கும் கார்னிவல் எம்பிவி மாடலில் அதிக அம்சங்கள் நிறைந்திருக்கிறது. 

    கியா கார்னிவல்

    கியா கார்னிவல் கார்: பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமௌசின் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்போதைய முன்பதிவுகளில் 64 சதவீதம் பேர் டாப் எண்ட் லிமௌசின் வேரியண்ட்டை தேர்வு செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    காரின் உள்புறங்களில் நப்பா லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டூயல் பேனல் எலெக்ட்ரிக் சன்ரூஃப், பின்புற இருக்கையில் அமர்வோருக்கு 10.1 இன்ச் பொழுதுபோக்கு திரை, லேப்டாப் சார்ஜிங் போர்ட், பவர்டு டெயில்கேட், ஒன்-டச் பவர்டு ஸ்லைடிங் கதவுகள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார்னிவல் காரில் 2.2 லிட்டர் வி.ஜி.டி. பி.எஸ்.6 டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. பவர், 440 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×