search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் கேப்டூர்
    X
    ரெனால்ட் கேப்டூர்

    விரைவில் இந்தியா வரும் ரெனால்ட் கேப்டூர் பிஎஸ்6

    ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டூர் பிஎஸ்6 மாடல் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    இந்தியாவில் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்றன. ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே தனது டஸ்டர், க்விட் மற்றும் டிரைபர் உள்ளிட்ட மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்துவிட்டது.

    கடந்த ஆண்டு ரெனால்ட் நிறுவனத்தின் பிஎஸ்6 ரக கேப்டூர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியானது. ஸ்பை படங்களில் புதிய கேப்டூர் மாடலில் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருந்தது தெளிவாக தெரிந்தது.

    ரெனால்ட் கேப்டூர்

    புதிய மேம்பட்ட கேப்டூர் மாடல் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ரெனால்ட் கேப்டூர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. 

    அதன்படி ரெனால்ட் கேப்டூர் மாடலில் அலாய் வீல்கள், கிரில் மற்றும் பம்ப்பர் பகுதிகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய கார் மேம்பட்ட பி0+ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதாக ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.

    புதிய கேப்டூர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ரெனால்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜினை பி.எஸ்.6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிகிறது.
    Next Story
    ×