என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    இந்தியாவில் கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான எம்பிவி கார் மாடல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் 2019-20 நிதியாண்டில் அதிகம் விற்பனையான எம்பவி கார் என்ற பெருமையை மாராதி சுசுகியின் எர்டிகா பெற்று இருக்கிறது. மாருதி எர்டிகா எம்பிவி கார் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2019-20 நிதியாண்டில் சுமார் 90 ஆயிரம் யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி இருக்கிறது. 

    மாருதி சுசுகி எர்டிகா நிறுவனம் இந்த பட்டத்தை மஹிந்திரா பொலிரோவிடம் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அதிகம் விற்பனையான எம்பிவி கார் மாடல்களில் மஹிந்திரா பொலிரோ இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 2018-19 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது மஹிந்திரா பொலிரோ விற்பனை 2019-20 நிதியாண்டில் 30 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.

    மாருதி எர்டிகா

    முந்தைய நிதியாண்டில் மஹிந்திரா பொலிரோ 59045 யூனிட்கள்  விற்பனையாகி இருக்கிறது. 2018-19 நிதியாண்டில் மட்டும் 84144 பொலிரோ யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    இந்த பட்டியலில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. இதன் விற்பனை 2018-19 ஆண்டுடன் ஒப்பிடும் போது 31 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. 2018-19 நிதியாண்டில் 77,924 யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், 2019-20 நிதியாண்டில் 53686 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. 

    கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை எர்டிகா மாடல் கார் மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்டிருந்தது. இதன் காரணமாக மாருதி சுசுகி எர்டிகா விற்பனை கணிசமான அளவு அதிகரித்தது. மாருதி எர்டிகா எம்பிவி பல்வேறு வேரியண்ட் மற்றும் ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது வாகனங்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய சேவையை துவங்கி இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனம் புதிதாக க்ளிக் டு பை (Click to Buy) எனும் ஆன்லைன் சேவையை துவங்கி இருக்கிறது. இந்த சேவையிலேயே வாடிக்கையாளர்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு பதில் அளிக்க இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் நிறுவன வாகனங்களை ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ள முடியும். முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி பகுதியில் சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலில் இருந்து வருகிறது.

    ஹூண்டாய் க்ளிக் டு பை

    புதிய ஆன்லைன் சேவை மூலம் எதிர்கால வாகனங்கள் விற்பனையை டிஜிட்டல் முறையில் மாற்ற ஹூண்டாய் திட்டமிட்டு வருகிறது. ஆல்லைன் விற்பனை தளம் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனை மையங்களில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இந்த தளத்தில் ஆன்லைன் மூலமாகவே கார் வாங்கிட முடியும். ஹூண்டாய் கார்களை வாங்குவோருக்கு புதிய தளம் மிக எளிமையாக இருப்பதோடு, பாதுகாப்பான ஒன்றாகவும் இருக்கிறது. ஆன்லைன் தளத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் புதிய கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களும் அடங்கும்.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.



    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஹெக்டார் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் அதிக வரவேற்பு பெற்ற ஹெக்டார் எஸ்யுவி விற்பனையிலும் அசத்தியது. எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் எஸ்யுவி பெட்ரோல் மாடலை பிஎஸ்6 தரத்துக்கு ஏற்கனவே அப்டேட் செய்துவிட்டது.

    இந்நிலையில் எம்ஜி ஹெக்டார் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எம்ஜி ஹெக்டார் பிஎஶ் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13.88 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.73 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுளஅளது.

    எம்ஜி ஹெக்டார்

    பிஎஸ்6 வேரியண்ட்டிலும் 2.0 லிட்டர் ஃபியாட் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168.4 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

    காரின் வெளிப்புறம் டூயல் ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், எல்இடி டிஆர்எல்கள், 17 இன்ச் டூயல்டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், டைனமிக் எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    உள்புறத்தில் 10.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, கிளைமேட் கண்ட்ரோல்கள், எம்ஜி நிறுவனத்தின் ஐ ஸ்மார்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இ-சிம் எம்பெட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது காருக்கு எப்போதும் இணைய வசதியை வழங்குகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 அப்டேட்டுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை பெற்று இருக்கிறது.



    பஜாஜ் நிறுவனம் தனது ஆர்எஸ்200 மாடலை பிஎஸ்6  தரத்துக்கு அப்டேட் செய்து இருக்கிறது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய பிஎஸ்6 பல்சர் ஆர்எஸ்200 மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 3000 வரை அதிகரிக்கப்பட்டு ரூ. 1.45 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 மாடலில் ட்வின் ஏபிஎஸ் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை ஆட்டோமொபைல் செய்தி நிறுவனம் ஒன்று கண்டறிந்து தெரிவித்திருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ட்வின் ஏபிஎஸ் மாடல் விலை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

    பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

    பஜாஜ் நிறுவன வலைதளத்தில் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200  பிஎஸ்6 மாடலில் 199.5சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.1 பிஹெச்பி பவர், 18.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
     
    புதிய மாடலில் டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் செட்டப், பார்ட்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி டெயில் லேம்ப்கள், டர்ன் இன்டிகேட்டர் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இருபுறங்களிலும் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்200 மாடலில் 17 இன்ச் அலாய் வீல்களும் எம்ஆர்எஃப் நைலோக்ரிப் டையர்களும் வழங்கப்பட்டுள்ளன.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபார்ச்சூனர் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
     


    டொயோட்டா நிறுவனத்தின் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் முதற்கட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. ஸ்பை படங்களில் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் தெரியவந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    ஸ்பை படங்களின் படி புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கிரில், சென்ட்ரல் ஏர் இன்டேக், பிளாக்டு அவுட் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    காரின் பின்புறம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், பூட்லிட், புதிய பம்ப்பர் வடிவமைப்பு, ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறத்திலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.

    சர்வதேச சந்தையில் ஃபார்ச்சூனர் மாடலில் 2 ரெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் காரின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பிஎஸ்6 ரக எக்ஸ்யுவி500 மாடல் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் சிறிதளவு மாற்றங்களுடன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 
    எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனினும், எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மற்றும் கிளோஸ்டர் மாடல்களை திட்டப்படி வெளியிட இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்த ஆண்டு மத்தியிலும் எம்ஜி கிளோஸ்டர் மாடல் பண்டிகை காலத்திலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.

    எம்ஜி குளோஸ்டர் காரில் எம்.ஜி. பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ நிறுவன விற்பனையாளர்கள் புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஆர்18 விலை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க சந்தைகளிலும் அறிவிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ ஆர்18

    பிஎம்டபிள்யூ ஆர்5 மோட்டார்சைக்கிளை தழுவி இந்த மோட்டார்சைக்கிள்  உருவாகி இருக்கிறது. ஆர்18 மாடலில் டியர்-டிராப் வடிவ ஃபியூயல் டேன்க், முன்புறம் 49 எம்எம் கன்வென்ஷனல் ஃபோர்க், பின்புறம் கேன்டிலீவர் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. 

    மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் குரோம், எக்சாஸ்ட் பைப்கள், ஃபிஷ் டெயல் டிப்கள், ஓல்டு-ஸ்கூல் வால்வ் கவர்கள், வட்ட எல்இடி ஹெட்லேம்ப், வையர் ஸ்போக் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் அம்சங்களால் இந்த மோட்டார்சைக்கிள் ஹெவி-வெயிட் குரூயிசராக இருக்கிறது. 

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளில் 1802சிசி ஏர்/ஆயில் கூல்டு பாக்சர் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் காரின் டெல்லி விமான நிலையம் வந்தடைந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மறைக்கப்படாத நிலையில், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது. 

    ஸ்விஃப்ட் ஸ்போர்ட் ஸ்பை படம்

    இந்தியா கொண்டுவரப்பட்டு இருப்பதால் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூற முடியாது. மாருதி சுசுகி புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலை ஆய்வு மற்றும் சோதனை பணிகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் கொண்டு வந்து இருக்கலம். ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்விஃப்ட் போன்றே HEARTECT பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

    ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலிலும் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 138 பிஹெச்பி பவர், 230 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மாடல் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.



    மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2020 விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் புதிய பிஎஸ்6 மாடலை விட வித்தியாசமானது ஆகும். தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ஸ்மார்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா

    இத்துடன் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருந்தது. எனினும், இதன் பெட்ரோல் ஹைப்ரிட் பவர் யூனிட் உடன் மேனுவல் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம். 

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் ஹைப்ரிட் மேனுவல் கியர்பாக்ஸ்: LXi, VXi, ZXi மற்றும் ZXi+ போன்ற ட்ரிம்களில் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் 104 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.

    தற்சமயம் மாருதி நிறுவனம் புதிதாக ஜிம்னி மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் மாருதி ஜிம்னி ஐந்து கதவுகள் கொண்ட மாடலாக வெளியாகும் என்றும் இது நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் மாடல் காரை 2009 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பின் இந்த எஸ்யுவி அதிக விற்பனையாக துவங்கியது. கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு எஸ்யுவி மாடல்கள் இந்திய சந்தையில் களமிங்கி வருகின்றன. 

    இதனால் ஃபார்ச்சூனர் மாடல் சற்றே பழையதாகி இருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டொயோட்டா நிறுவனம் விரைவில் லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக டொயோட்டா நிறுவன மூத்த துணை தலைவர் நவீன் சோனி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    புதிய லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடலில் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஃபோல்டிங் ORVM கள் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

    புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக லிமிட்டெட் எடிஷன் ஃபார்ச்சூனர் மாடல் பிஎஸ்6 வேரியண்ட்டை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய ஃபார்ச்சூனர் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    தற்சமயம் இந்த மாடலின் விலை ரூ. 28.18 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33.95 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 
    கேடிஎம் நிறுவனம் தனது இலவச சேவைகள் மற்றும் வாரண்டி சலுகைகளை நாடு முழுக்க நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

     

    கேடிஎம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சேவைகளை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் வாரண்டி மற்றும் இலவச சேவைகளுக்கான வேலிடிட்டி ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், வாரண்டி மற்றும் இலவச சேவைகளுக்கான வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக பல்வேறு நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கேடிஎம் 250

    வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சர்வீஸ் செய்ய அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று கேடிஎம் எதிர்பார்க்கிறது. இதன் காரணமாகவே வாரண்டி மற்றும் சர்வீஸ் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து இருக்கிறது.

    வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சேவைகள் மீதான வேலிடிட்டி நீட்டிப்பு மார்ச், ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் நிறைவு பெறும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும். மேலும் இந்த காலக்கட்டத்தில் சர்வீஸ் மையங்களுக்கு தேவையான பாகங்களை ஸ்டாக் வைத்துக் கொள்ள போதுமானதாக இருக்கும்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உற்பத்தி ஆலையின் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் மூலம் ஆலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடியும்.
    ×