என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
பிஎம்டபிள்யூ ஆர்18 இந்திய முன்பதிவு விவரம்
Byமாலை மலர்9 April 2020 2:59 PM IST (Updated: 9 April 2020 2:59 PM IST)
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்திய முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவன விற்பனையாளர்கள் புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் என கூறப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஆர்18 விலை ஐரோப்பியா மற்றும் அமெரிக்க சந்தைகளிலும் அறிவிக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
புதிய பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிள் - ஸ்டான்டர்டு மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பிஎம்டபிள்யூ ஆர்5 மோட்டார்சைக்கிளை தழுவி இந்த மோட்டார்சைக்கிள் உருவாகி இருக்கிறது. ஆர்18 மாடலில் டியர்-டிராப் வடிவ ஃபியூயல் டேன்க், முன்புறம் 49 எம்எம் கன்வென்ஷனல் ஃபோர்க், பின்புறம் கேன்டிலீவர் மோனோ ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோட்டார்சைக்கிளில் குரோம், எக்சாஸ்ட் பைப்கள், ஃபிஷ் டெயல் டிப்கள், ஓல்டு-ஸ்கூல் வால்வ் கவர்கள், வட்ட எல்இடி ஹெட்லேம்ப், வையர் ஸ்போக் வீல்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் அம்சங்களால் இந்த மோட்டார்சைக்கிள் ஹெவி-வெயிட் குரூயிசராக இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிஎம்டபிள்யூ ஆர்18 மோட்டார்சைக்கிளில் 1802சிசி ஏர்/ஆயில் கூல்டு பாக்சர் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 91 பிஹெச்பி பவர், 157 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Next Story
×