என் மலர்
ஆட்டோமொபைல்

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200
பிஎஸ்6 அப்டேட்டுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதி பெறும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் ஆர்எஸ்200 மோட்டார்சைக்கிள் பிஎஸ்6 அப்டேட்டுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை பெற்று இருக்கிறது.
பஜாஜ் நிறுவனம் தனது ஆர்எஸ்200 மாடலை பிஎஸ்6 தரத்துக்கு அப்டேட் செய்து இருக்கிறது. மேம்பட்ட என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய பிஎஸ்6 பல்சர் ஆர்எஸ்200 மாடலின் விலை முந்தைய மாடலை விட ரூ. 3000 வரை அதிகரிக்கப்பட்டு ரூ. 1.45 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 மாடலில் ட்வின் ஏபிஎஸ் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை ஆட்டோமொபைல் செய்தி நிறுவனம் ஒன்று கண்டறிந்து தெரிவித்திருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ட்வின் ஏபிஎஸ் மாடல் விலை சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

பஜாஜ் நிறுவன வலைதளத்தில் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வேரியண்ட் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கிறது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பிஎஸ்6 மாடலில் 199.5சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 24.1 பிஹெச்பி பவர், 18.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மாடலில் டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் செட்டப், பார்ட்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி டெயில் லேம்ப்கள், டர்ன் இன்டிகேட்டர் மற்றும் இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
பிரேக்கிங்கிற்கு முன்புறம் 300 எம்எம் டிஸ்க், பின்புறம் 230 எம்எம் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இருபுறங்களிலும் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்200 மாடலில் 17 இன்ச் அலாய் வீல்களும் எம்ஆர்எஃப் நைலோக்ரிப் டையர்களும் வழங்கப்பட்டுள்ளன.
Next Story






