search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்
    X
    எம்ஜி ஹெக்டார் பிளஸ்

    முந்தைய திட்டத்தில் மாற்றம் இல்லை - எம்ஜி மோட்டார்ஸ்

    எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.



    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு வியாபாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பல்வேறு விற்பனையகங்கள் நிரந்தரமாக மூடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனினும், எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் மற்றும் கிளோஸ்டர் மாடல்களை திட்டப்படி வெளியிட இருப்பதாக தெரிகிறது. இந்நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் இந்த ஆண்டு மத்தியிலும் எம்ஜி கிளோஸ்டர் மாடல் பண்டிகை காலத்திலும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது.

    ஏற்கனவே இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊழியர்களை பணியில் இருந்து நீக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார்ஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    எம்ஜி குளோஸ்டர்

    எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.

    ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.

    எம்ஜி குளோஸ்டர் காரில் எம்.ஜி. பாரம்பரிய கிரில் வடிவமைப்பு, எல்இடி டிஆர்எல்கள், மெல்லிய ஹெட்லைட் யூனிட்கள், பெரிய கிளாஸ்ஹூஸ் மற்றும் ரூஃப் ரெயில்கள் காணப்படுகிறது. பின்புறம் மெல்லிய வடிவமைப்பு, டெயில் லேம்ப் யூனிட்கள், அகலமான டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் வெளியாக இருக்கும் எம்.ஜி. குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடலில் 2.0-லிட்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 218 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 480 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. 
    Next Story
    ×