என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
இந்திய சந்தையில் மார்ச் மாத விற்பனையில் டாடா அல்ட்ரோஸ் மாடலை விட டொயோட்டா கார் மாடல் முந்தியிருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலான கிளான்சா காரினை இந்தியாவில் ஜூன் 2019 இல் அறிமுகம் செய்தது. டொயோட்டா கிளான்சா ஹேட்ச்பேக் மாடல் டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்களின் கூட்டணியில் மாருதி சுசுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்டு வெளியான முதல் வாகனம் ஆகும்.

அந்த வகையில் 2020 மார்ச் மாத அடிப்படையில் டொயோட்டா கிளான்சா மொத்தம் 1533 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் டாடா அல்ட்ரோஸ் மாடல் 1147 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
மார்ச் மாத விற்பனையின் படி மாருதி சுசுகி பலேோனோ, ஹூண்டாய் ஐ20 எலைட் மற்றும் டொயோட்டா கிளான்சா உள்ளிட்டவை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன. இவற்றை தொடர்ந்து டாடா அல்ர்டோஸ் நான்காவது இடம் பிடித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்எஸ் மாடல் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் புதிய ஜிஎல்எஸ் எஸ்யுவி மாடலின் டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. புதிய ஜிஎல்எஸ் எஸ்யுவி அடுத்த இரண்டு மாதங்களில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசரின் படி புதிய பென்ஸ் ஜிஎல்எஸ் மாடலின் வெளிப்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. டீசரில் புதிய கார் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் காரின் பக்கவாட்டு பகுதியும் காட்டப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மாடல் முந்தைய மாடலை விட 77 எம்எம் நீளமும், 22 எம்எம் அகலமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது முந்தைய மாடலை விட நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. புதிய காரில் 22 அங்குல அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
புதிய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் 3.0 லிட்டர் ஆறு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 326 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஜி டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் கார் விற்பனையகங்களுக்கு வந்தடைந்தது. விரைவில் இதன் விநியோகம் துவங்கப்பட இருக்கிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டேவியா ஆர்எஸ் 245 கார் நாடு முழுக்க இயங்கி வரும் விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விரைவில் இதன் விநியோகம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் 245 மாடல் குவக்க விலை ரூ. 36 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் 242 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. கியர்பாக்ஸ் மற்றும் பேடிள் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடலில் ஆடி மாடல்களில் உள்ளதை போன்ற விர்ச்சுவல் காக்பிட் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்.எஸ். 245 மாடல்- ரேலி கிரீன், ரேஸ் புளூ, கொரிடா ரெட், மேஜிக் பிளாக் மற்றும் கேண்டி வைட் என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.
2020 ஹார்லி டேவிட்சசன் லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 2020 லோ ரைடர் எஸ் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடலின் துவக்க விலை ரூ. 14.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 2020 ஹார்லி டேவிட்சன் லோ ரைடர் எஸ் மாடல்- பரக்குடா சில்வர் மற்றும் விவிட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. தற்சமயம் விவட் பிளாக் வேரியண்ட் விலை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் பரக்குடா வேரியண்ட் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

லோ ரைடர் எஸ் மாடலில் 1868சிசி மில்வாக்கி எய்ட் 114 வி ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 161 என்எம் டார்க்கினை 3000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டது ஆகும். சஸ்பென்ஷனிற்கு முன்புறம் 43 எம்எம் யுஎஸ்டி ஃபோர்க், ட்வின் டிஸ்க் பிரேக்கிங் வழங்கப்பட்டுள்ளது.
இதன் முன்புறம் 19 இன்ச் டையர்கள் 110/90 ப்ரோஃபைலிலும், பின்புறம் 180/70 ப்ரோஃபைலில் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் எடை 308 கிலோ ஆகும்.
முன்னதாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 1200 கஸ்டம் 2020 மாடல் மற்றும் ஃபாட் பாய் என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இரு மாடல்களின் விலை ரூ. 10.77 மற்றும் ரூ. 18.25 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில், பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஜெனிவா மோட்டார் விழா, டெட்ராயிட், நியூ யார்க் மோட்டார் விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டன.
ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பீஜிங் ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் ஆட்டோ விழா ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங் ஆட்டோ விழா சீனாவிங் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற இருந்தது. விழாவில் கலந்து கொள்வோரின் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன தயாரிப்பை நிறுத்திவிட்டு முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் டாமினர் 400 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்6 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎஸ்6 டாமினர் 400 மாடலின் விலை ரூ. 1.91 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 1749 அதிகம் ஆகும்.
பிஎஸ்4 டாமினர் மாடல் ரூ. 1.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டாமினர் 400 மாடல் வைன் பிளாக் மற்றும் அரோரா கிரீன் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 39.4 பிஹெச்பி மற்றும் 35 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாமினர் 400 பிஎஸ்4 மாடலிலும் இந்த என்ஜின் இதே செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 டாமினர் மாடலிலும் ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல்லி டிஜிட்டல் பிரைமரி மற்றும் செக்கன்டரி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 13 லிட்டர் ஃபியூயல் டேன்க், ட்வின் பேரெல் எக்சாஸ்ட், டைமண்ட் கட் அலாய் வீல், 3டி லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்திய சந்தையில் பஜாஜ் டாமினர் 400 மாடல் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 1.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் பலமுறை இதன் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டன.
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹூண்டாய் ஐ20 மாடல் காரை செப்டம்பர் மாத வாக்கில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடலின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூண்டாய் ஐ20 மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 ஹேட்ச்பேக் மாடலின் முன்புறம் கேஸ்கேடிங் கிரில், மேம்பட்ட வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இவை முந்தைய மாடல்களில் இருந்ததை விட தற்சமயம் மெல்லியதாக இருக்கின்றன. இதன் பூட்-லிப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள புதிய லைட் பார் மேம்பட்ட டெயில் லைட்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று காரின் பக்கவாட்டு பகுதியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய தலைமுறை ஐ20 மாடலில் டூயல் டோன் அலாய் வீல்கள், நீட் ஃபார் ஸ்பீடு மற்றும் ஃபோர்ஸா போன்ற வீடியோ கேம் சீரிஸ்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவற்றில் உள்ள கிரீஸ் கோடுகள் காருக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது.
காரின் உள்புறம் மேம்பட்ட புதிய டேஷ்போர்டு டிசைன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நான்கு ஏர்-கான் வென்ட்களையும் இணைக்க கிடைமட்ட கோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 10.25 அங்குல அளவில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும்.
புதிய ஐ20 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இதுதவிர 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2020 அவெஞ்சர் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிஎஸ்6 ரக அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் சீரிசை வெளியிட்டுள்ளது. பஜாஜ் அவெ்டர் ஸ்டிரீட் 160 மற்றும் குரூயிஸ் 220 மாடல்கள பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கிறது.
பஜாஜ் அவெஞ்சர் ஸ்டிரீட் 160 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 93677 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 12 ஆயிரம் வரை அதிகம் ஆகும். பஜாஜ் அவெஞ்சர் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடல் விலை முந்தைய மாடலை விட ரூ. 11 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 1.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய என்ஜின் தவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 பஜாஜ் அவெஞ்சர் 160 பிஎஸ்6 மாடலில் 160சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 14.8 பிஹெச்பி மற்றும் 13.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
2020 பஜாஜ் அவெஞ்சர் குரூயிஸ் 220 பிஎஸ்6 மாடலில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இது 18.7 பிஹெச்பி பவர், 17.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இரு மாடல்களிலும் பிஎஸ்4 மாடலில் வழங்கப்பட்டு இருந்தது போன்ற வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பெரிய விண்ட்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் லெயிட் பேக் குரூயிசர் ரைடிங் பொசிஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நீண்ட ஹேன்டிள்பார்கள், முன்புற வாக்கில் ஃபுட்பெக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாத விற்பனையில் ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அசத்தி இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பிப்ரவரியில் ஹோண்டா நிறுவனம் 2,49,136 யூனிட்களை விற்பனை செய்து இருந்த நிலையில், மார்ச் மாதம் மொத்தம் 2,61,669 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 11 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மார்ச் 2019 இல் ஹோண்டா நிறுவனம் 2,22,325 யூனிட்களை விற்பனை செய்து இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் சுமார் 2,45,669 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 16,000 யூனிட்களாக இருந்தது.

ஹோண்டா நிறுவன ஆலையில் பணிகள் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், சிக்கலான காலக்கட்டத்தில் தனது வியாபார ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இதுதவிர மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவடைந்த வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஹோண்டா அறிவித்தது. மேலும் ஹோண்டா இந்தியா பவுன்டேஷன் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 11 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.
இத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் அதிக காற்றழுத்தம் கொண்ட 2000 பேக்பேக் ஸ்பிரேயர்களை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார் சன்ரூஃப் கொண்ட புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சத்தமில்லாமல் நெக்சான் XZ+ (S) வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது. புதிய நெக்சான் வேரியண்ட் விலை ரூ. 10.10 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 11.60 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை டாடா நெக்சான் மாடல் XE, XM, XZ, XZ+, XZ+ (O), XMA, XZA+ மற்றும் XZA+ (O) என மொத்தம் எட்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய XZ+ (S) வேரியண்ட் XZA+ மற்றும் XZA+ (O) மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டது.

புதிய வேரியண்ட் டாப் எண்ட் மாடலில் உள்ள பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த கார் ஐஆர்ஏ கனெக்ட்டெட் ஆப், ரிமோட் வெஹிகில் கண்ட்ரோல், லைவ் வெஹிகில் டையக்னாஸ்டிக்ஸ், வெஹிகில் லைவ் லொகேஷன், ஜியோ ஃபென்ஸ், வாலெட் மோட் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டில்ட் ஃபங்ஷன், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், மல்டி டிரைவ் மோட்கள், பின்புற ஏசி வென்ட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பிற்கு நெக்சான் XZ+ (S) மாடலின் முன்புறம் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, டிராக்ஷன் கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ஹில்ஹோல்டு அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, முன்புற ஃபாக் லேம்ப்கள், ஐசோஃபிக்ஸ், டிரைவர் சீட் பெல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ஹோண்டா பிராண்டிங்கில் வெளியாக இருக்கும் வாகனங்கள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வதேச இவி பிளாட்ஃபார்மில் உருவாக இருக்கிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் இவி பிளாட்ஃபார்ம் வாகனங்களில் அல்டியம் ரக பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதிய வாகனத்தின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்கள் ஹோண்டா நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்குகிறது. புதிய ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்கள் இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்படுகிறது.

இவற்றுக்கான பணிகள் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வட அமெரிக்க ஆலையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விற்பனை 2024 ஆம் ஆணடு துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் முதற்கட்டமாக இவை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இருநிறுவனங்கள் சார்பில் உருவாகும் எலெக்ட்ரிக் வாகனம் பற்றிய தகவல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு வாக்கில் ஹோண்டா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனங்கள் இணைந்து பேட்டரி மாட்யூல் உருவாக்கும் பணிகளை துவங்கின.
எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தின் படி, ஹோண்டா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் வாகனங்களில் ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆன்ஸ்டார் பாதுகாப்பு சேவைகளை ஒருங்கிணைக்கிறது. இதுதவிர ஜெனர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேம்பட்ட டிரைவர் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 51,754, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டர் தொடர்ந்து ஸ்கூட்டி பெப் பிளஸ் சீரிஸ், பேபிலிசியஸ் சீரிஸ் மற்றும் மேட் எடிஷன் சீரிஸ் உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது.
புதிய ஸ்கூட்டி மாடல் பற்றி டிவிஎஸ் மோட்டார்ஸ் அதிக விவரங்களை வழங்கவில்லை. புதிய பிஎஸ்6 ஸ்கூட்டரின் விலை முந்தைய மாடல்களை விட ரூ. 6400 மற்றும் ரூ. 6700 வரை அதிகம் ஆகும். இதில் சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் செயல்திறன் மற்றும் இதர விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் பிஎஸ்6 விதிகளின் கீழ் என்ஜின் செயல்திறன் அளவுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பிஎஸ்4 மாடலில் உள்ள 87.8சிசி என்ஜின் 5 பிஹெச்பி பவர், 6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய பிஎஸ்6 மாடல்களில் எல்இடி டிஆர்எல்கள், ஸ்மார்ட்போன் சார்ஜர், கிக் ஸ்டாண்ட் அலாரம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரு சக்கரங்களிலும் 110 எம்எம் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒன்பது வித்தியாசமான நிறங்களில் கிடைக்கும் டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் பிளஸ் பிஎஸ்6 மாடல்களின் துவக்க விலை ரூ. 51754 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 52954 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






