என் மலர்

  ஆட்டோமொபைல்

  பீஜிங் மோட்டார் விழா
  X
  பீஜிங் மோட்டார் விழா

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில், பீஜிங் மோட்டார் விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பல்வேறு நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஜெனிவா மோட்டார் விழா, டெட்ராயிட், நியூ யார்க் மோட்டார் விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டன. 

  ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டு இருந்த பீஜிங் ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக தற்சமயம்  அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பீஜிங் ஆட்டோ விழா ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பீஜிங் மோட்டார் விழா

  பீஜிங் ஆட்டோ விழா சீனாவிங் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற இருந்தது. விழாவில் கலந்து கொள்வோரின் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆட்டோ விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன தயாரிப்பை நிறுத்திவிட்டு முகக் கவசங்கள் மற்றும் வென்டிலேட்டர் போன்றவற்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.   
  Next Story
  ×