search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் டாமினர் 400
    X
    பஜாஜ் டாமினர் 400

    பஜாஜ் டாமினர் 400 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் டாமினர் 400 மோட்டார்சைக்கிளின் பிஎஸ்6 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎஸ்6 டாமினர் 400 மாடலின் விலை ரூ. 1.91 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 1749 அதிகம் ஆகும்.

    பிஎஸ்4 டாமினர் மாடல் ரூ. 1.90 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டாமினர் 400 மாடல் வைன் பிளாக் மற்றும் அரோரா கிரீன் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. 

    பஜாஜ் டாமினர் 400

    பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 39.4 பிஹெச்பி மற்றும் 35 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. டாமினர் 400 பிஎஸ்4 மாடலிலும் இந்த என்ஜின் இதே செயல்திறன் வழங்குகிறது.  இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய பிஎஸ்6 டாமினர் மாடலிலும் ஃபுல் எல்இடி லைட்டிங், ஃபுல்லி டிஜிட்டல் பிரைமரி மற்றும் செக்கன்டரி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 13 லிட்டர் ஃபியூயல் டேன்க், ட்வின் பேரெல் எக்சாஸ்ட், டைமண்ட் கட் அலாய் வீல், 3டி லோகோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    இந்திய சந்தையில் பஜாஜ் டாமினர் 400 மாடல் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 1.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. பின் பலமுறை இதன் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டன.
    Next Story
    ×