search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 டீசர்
    X
    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 டீசர்

    இணையத்தில் லீக் ஆன ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஸ்பை படங்கள்

    ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் பிஎஸ்6 மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



    2020 ஹோண்டா ஜாஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுமையாக மறைக்கப்பட்டு நிலையில் காட்சியளிக்கும் புதிய ஜாஸ் பிஎஸ்6 மாடல் நெடுஞ்சாலைகளில் சோதனை செய்யப்படுகிறது.

    ஸ்பை படங்களின் படி புதிய காரில் புகை வெளியீட்டை சோதனை செய்யும் உபகரணம் பொருத்தப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன் இந்த வாகனம் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    புதிய 2020 ஹோண்டா ஜாஸ் மாடலில் சிறிதளவு காஸ்மெடிக் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. வடிவமைப்பு மாற்றங்கள் பற்றி அதிக விவரங்கள் அறியப்படாத நிலையில், இந்த கார் சில மாற்றங்களுடன் வெளியாகும் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 ஸ்பை படம்

    புதிய ஹோண்டா ஜாஸ் மாடல் 1.2 லிட்டர் பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 90 பிஹெச்பி பவர், 110 என்எம் டார்க் மற்றும் 100 பிஹெச்பி மற்றும் 200 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

    ஹோண்டா ஜாஸ் பிஎஸ்6 மாடலில் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஃபேப்ரிக் இருக்கைகள், லெதர் ஸ்டீரிங் வீல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அடஜஸ்ட் செய்யும் வசதி, எலெக்டிரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் வழங்கப்படுகிறது. 

    பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், பவர் டோர் லாக், சைல்டு சேஃப்டி லாக், டூயல் ஏர்பேக், சீட்பெல்ட் வார்னிங் அலாரம், டிராக்ஷன் கண்ட்ரோல், என்ஜின் இம்மொபைலைசர், கிராஷ் சென்சார், பின்புறம் பார்க்கிங் கேமரா வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×