search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6
    X
    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் ரேடியான் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் துவக்க விலை ரூ. 58,992 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பிஎஸ்4 மாடலின் விலையை விட ரூ. 8600 வரை அதிகம் ஆகும். 

    புதிய மோட்டார்சைக்கிளில் 109.7சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட என்ஜின் தவிர ரேடியான் பிஎஸ்6 மாடல்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6

    பிஎஸ்6 என்ஜின் காரணமாக மோட்டார்சைக்கிள் எடை நான்கு கிலோ வரை அதிகரித்து இருக்கிறது. இதன் டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் வேரியண்ட்களின் எடை முறையே 116 கிலோ மற்றும் 118 கிலோவாக இருக்கிறது. புதிய மாடல் முந்தைய மாடலை விட 15 சதவீதம் வரை கூடுதல் மைலேஜ் வழங்கும் என டிவிஎஸ் மோட்டார் கம்பெனி தெரிவித்துள்ளது.

    டிவிஎஸ் ரேடியான் பிஎஸ்6 மாடல்களில் சின்க்ரோனைஸ்டு பிரேக்கிங் தொழில்நுட்பம், யுஎஸ்பி சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட், சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரேடியான் பிஎஸ்6 மாடல் ஸ்டான்டர்டு மற்றும் கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஸ்டான்டர்டு மாடல் ஆறு வெவ்வேறு நிறங்களிலும், கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் ஆஃப் தி இயர் எடிஷன் மாடல் பிரத்யேகமாக பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×