என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டை ஒத்திவைத்து இருக்கிறது. ஹீரோ எலெக்கட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் ஏஇ-47 எனும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட திட்டமிட்டிருந்தது.
எனினும், இதன் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல் தெரிவித்திருக்கிறார்.
ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 மோட்டார்சைக்கிள் முன்னதாக நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வின் போது இந்த மோட்டார்சைக்கிள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியி அதிக வாய்ப்புகள் இருப்பதாக நவீன் முஞ்சல் தெரிவித்திருந்தார்.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இதன் வெளியீட்டை அடுத்த ஆண்டு வரையாவது ஒத்திவைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இப்போதைய காலக்கட்டத்தில் மோட்டார்சைக்கிளை வெளியிட்டு விற்பனை செய்வது சரியான முடிவாக இருக்காது என ஹீரோ எலெக்ட்ரிக் கருதுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய ஹீரோ எலெக்ட்ரிக் ஏஇ-47 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்டிரீட் 750 லிமிட்டெட் எடிஷன் மாடலை வாங்குவோருக்கு அசத்தல் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்டிரீட் 750 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் வாங்குவோருக்கு ரூ. 72 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் 750 லிமிட்டெட் எடிஷன் பிஎஸ்6 மாடலின் விலை ரூ. 5.47 லட்சம் ஆகும். எனினும், தேர்வு செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ விற்பனையகங்களில் இந்த மோட்டார்சைக்கிள் ரூ. 4.75 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லிமிட்டெட் எடிஷன் ஸ்டிரீட் 750 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்ய்பட்டது. அறிமுகமான போது இந்த மாடலின் விலை பிஎஸ்4 மாடலை விட ரூ. 13 ஆயிரம் வரை அதிகம் ஆகும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டது.

ஹார்லி டேவிட்சன் ஸ்டிரீட் 750 லிமிட்டெட் எடிஷன் மாடல் மொத்தமே 300 யூனிட்கள் தான் உருவாக்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பிரத்யேக நிறம் மற்றும் பெட்ரோல் டேன்க் மீது புதிய ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைதவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ஹார்லி டேவிட்சன் ஸ்டிரீட் 750 மாடலில் பிஎஸ்6 ரக 749சிசி, வி ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 60 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறவனத்தின் புதிய ஆக்டேவியா காரின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க அதிகப்படியான வியாபாரங்கள் முடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற துறைகளை போன்றே ஆட்டோமொபைல் துறையும் கடும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது.
உலகளாவிய நெருக்கடி காரணமாக பெரும்பாலான வாகனங்கள் வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையில் ஸ்கோடா தனது புதிய ஆக்டேவியா மாடலின் வெளியீட்டை தள்ளிவைக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா மாடல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் இயக்குனர் சேக் ஹொலிஸ், கொரோனா பாதிப்பு காரணமாக எங்களது திட்டங்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆக்டேவியா மாடல் 2021 ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் என தெரிவித்து இருக்கிறார்.

இந்திய சந்தைக்கான ஸ்கோடா ஆக்டேவியா மாடலில் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படலாம். இது 148 பிஹெச்பி, 250 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும்.
புதிய ஆக்டேவியா மாடலின் உள்புறம் முற்றிலும் புதிய கேபின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் இரண்டு ஸ்போக் கொண்ட அலாய் வீல், புதிய கண்ட்ரோல் பட்டன், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்டிரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இவி மாடல் எலெக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டிற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதுவரை டாடா மோட்டார்ஸ், எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் பெரும்பான்மை நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க துவங்கி இருக்கின்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது நெக்சான் இவி மாடலை அறிமுகம் செய்தது. விற்பனையை பொருத்தவரை டாடா நிறுவனம் இதுவரை 198 நெக்சான் இவி மாடல்களையும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் 116 இசட் எஸ் இவி யூனிட்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்து இருக்கின்றன. ஹூண்டாய் கோனா இவி விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
நெக்சான இவி மாடலின் துவக்க விலை ரூ. 13.99 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டாடா நெக்சான் இவி மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமான மூன்றே மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் ஆக்டிவா 6ஜி மாடல்களின் துவக்க விலை ரூ. 64,464 என மாற்றப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா 6ஜி பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் வெளியிடப்பட்டது.
ஆக்டிவா 6ஜி மாடலில் ஹோண்டாவின் PGM-Fi எனும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்பம் முன்னதாக ஆக்டிவா 125 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை அதிகப்படுத்துவதோடு, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் ஏ.சி.ஜி. ஸ்டார்ட்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்ட, பாஸ் ஸ்விட்ச், வெளிப்புற ஃபியூயல் ஃபில்லர் கேப், முன்புறம் 12 இன்ச் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் 3-ஸ்டெப் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலில் 109சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்: பிளாக், டேசில் எல்லோ மெட்டாலிக், பியல் பிரெஷியஸ் வைட், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், பியல் ஸ்பார்ட்டன் ரெட் மற்றும் க்ளிட்டர் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.
தற்சமயம் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 64,464 மற்றும் ரூ. 65,964 என மாற்றப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கவாசகி நிறுவன வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவன வாகனங்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிக்கப்படுவதாக கவாசகி இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நிறைவு பெற்ற வாடிக்கையாளர்கள் இந்த சேவை நீட்டிப்பு மூலம் பயன்பெற்று கொள்ளலாம் என கவாசகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வாரண்டி மற்றும் சர்வீஸ் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பஜாஜ் ஆட்டோ, கேடிஎம், யமஹா, டிவிஎஸ் மற்றும் ஹோண்டா என பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் நீட்டிப்பதாக அறிவித்து இருந்தன. இந்த பட்டியலில் கவாசகி நிறுவனமும் இணைந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பணிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஐ10 கிராண்ட் நியாஸ் சிஎன்ஜி வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.63 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சின்ஜி வெர்ஷன் நடுத்தர மாடலான மேக்னா மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை புதிய சிஎன்ஜி சார்ந்த கிராண்ட் ஐ10 நியாஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியாஸ் மாடல் சிஎன்ஜி வேரியண்ட்களில் பெட்ரோல், டீசல் மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டீரிங் மவுன்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் சிஎன்ஜி மாடலில் 1.2 லிட்டர் பிஎஸ்6 ரக கப்பா என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 66 பிஹெச்பி பவர், 95 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சிஎன்ஜி என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் மாடல் கார்களில் மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடல்களில் சத்தமில்லாமல் புதிய 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்கி இருக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பில்ட் இன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் ப்ளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ்-இன் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலில் விரைவில் 1.2 என்ஜினுக்கு மாற்றாக பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மாருதி சுசுகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
தற்போதைய பெட்ரோல் என்ஜினை போன்றே புதிய என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் 2020 மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில் புதிய மாடலில் மேம்பட்ட பம்ப்பர்கள், ஃபாக் லேம்ப்கள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 125 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய பஜாஜ் பல்சர் 125 பிஎஸ்6 விலை ரூ. 6997, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் சீரிஸ் மாடல்களில் என்ட்ரி லெவல் மாடலான பல்சர் 125 டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பேஸ் மாடலான டிரம் வேரியண்ட் விலை ரூ. 6300விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. டாப் எண்ட் டிஸ்க் மாடல் விலை ரூ. 7500 அதிகரிக்கப்பட்டு ரூ. 74118 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 125 நியான் மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய பிஎஸ்6 என்ஜின் 12 பிஹெச்பி பவர், 11 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 அப்டேட் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இது முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களுடன் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் எடை 140 கிலோ ஆகும். இது பல்சர் சீரிஸ் மாடல்களில் அதிக எடை கொண்ட மாடல் ஆகும்.
புதிய 2020 பஜாஜ் பல்சர் 125 நியான் பிஎஸ்6 மாடல் நியான் புளூ, சோலார் ரெட் மற்றும் பிளாட்டினம் சிலவர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் பயணிகள் வாகன உற்பத்தி சுமார் 38 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு வெளியாகும் முன்பிருந்தே பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாகன உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து வந்தன.
எனினும், ஊரடங்கு உத்தரவு வெளியானது முதல் ஒட்டுமொத்த துறையும் முற்றிலுமாக முடங்கியது. ஊரடங்கு காரணமாக நாட்டில் ஒட்டுமொத்த வாகன உற்பத்தி 33.61 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. மார்ச் 2020 மாதத்தில் 14,47, 345 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கின்றன. 2019 மார்ச் மாதத்தில் மொத்தம் 21,80,203 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது.

பயணிகள் வாகன உற்பத்தியை பொருத்தவரை இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2,07,196 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. 2019 மார்ச் மாதத்தில் 3,34,948 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் பயணிகள் வாகன உற்பத்தி38 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி பயன்பாட்டு வாகனங்கள் உற்பத்தி 19.24 சதவீதமும், வணிக வாகனங்கள் உற்பத்தி 82.88 சதவீதமும், இருசக்கர வாகனங்கள் உற்பத்தி 28.81 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தி 50.39 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது.
நாடு முழுக்க வாகன விற்பனையகங்கள் மூடியே கிடப்பதால், வாகனங்கள் விற்பனையும் சரிவை சந்தித்து இருக்கின்றன. மார்ச் 2020 மாதத்தில் ஒட்டுமொத்தமாக வாகனங்கள் விற்பனை 44.95 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி300 புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எக்ஸ்யுவி300 காம்பேக்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பின் 2019 ஆண்டு இறுதியில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டது. அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யுவியை பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் அப்டேட் செய்துள்ளது.
புதிய பிஎஸ்6 டீசல் மாடல்களின் விலை பிஎஸ்4 மாடலை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காரில் என்ஜின் தவிர தோற்றத்தில் வேறு எந்த அப்டேட்டும் செய்யப்படவில்லை.

இந்திய சந்தையில் மஹிந்திரா பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 8.69 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யுவி 300 பிஎஸ்6 டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114.5 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 என்ஜின் 117 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
எக்ஸ்யுவி300 பிஎஸ்6 டீசல் மாடலில் சன்ரூஃப், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், குரூயிஸ் கண்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், கீலெஸ் என்ட்ரி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எம்ஜி ஹெக்டார் பிளஸ் காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இவை ஏப்ரல் 14 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. பின் பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கு உத்தரவை மே 3 வரை நீட்டித்து இருக்கிறார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாகனங்களை சமீபத்தில் அறிமுகம் செய்து இருந்தன. கடும் சூழ்நிலையிலும், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

முன்னதாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்து இருந்தது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ்- ஆறு பேர் இருக்கை மற்றும் ஏழு பேர் இருக்கை என இருவிதங்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் ட்வீக் செய்யப்பட்டு புதிய குரோம் கிரில், புதிய தோற்றம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் ஹெக்டார் பிளஸ் மாடலில் எல்இடி டெயில் லைட்கள் மற்றும் புதிய பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளன.
ஹெக்டார் பிளஸ் மாடலில் 170 பிஹெச்பி பவர் வழங்கும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் யூனிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீடு டிசிடி வழங்கப்படுகிறது.






