என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிள் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டிரையம்ப் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு மே மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் டிரையம்ப் டைகர் 800 மோட்டார்சைக்கிள்: எக்ஸ்ஆர் மற்றும் எக்ஸ்சி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
புதிய டிரையம்ப் டைரக் 900 மோட்டார்சைக்கிள் ஜிடி மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் டைகர் 900 மோட்டார்சைக்கிள் ஸ்டான்டர்டு மற்றும் ப்ரோ என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய டைகர் 900 மோட்டார்சைக்கிளில் புதிய என்ஜின் மற்றும் சிறப்பான எலெக்டிரானிக் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைம்ப் டைகர் 900 மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 ரக 888சிசி இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 94 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய டைகர் 900 மாடலில் ஐஎம்யு சார்ந்த ஏபிஎஸ் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
இந்த மோட்டார்சைக்கிளில் ரெயின், ரைடர், ரோட், ஸ்போர்ட், ஆஃப்-ரோடு மற்றும் ஆஃப்-ரோடு ப்ரோ என ஆறு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி மாட்யூல் ஸ்டான்டர்டு அம்சமாக ப்ரோ மாடல்களில் வழங்கப்படுகிறது.
டிரையம்ப் டைகர் 900 ஜிடி மாடலில் மர்சோகி சஸ்பென்ஷன் யூனிட் மற்றும் ரேலி ப்ரோ வெர்ஷனில் ஷோவா சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களிலும் பிரெம்போ ஸ்டைலிமா கேலிப்பர்கள் மற்றும் முன்புறம் இரண்டு டிஸ்க் பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் பிஎஸ்6 மாடலின் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டிரைபர் எம்பிவி மாடல் காரின் விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. தற்சமயம் ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு பேஸ் மாடல் தவிர மற்ற வேரியண்ட்களில் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் பேஸ் மாடல் விலை மாற்றமின்றி தற்சமயம் ரூ. 4.99 லட்சத்தில் கிடைக்கிறது. மட்-ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ரெனால்ட் டிரைபர் பிஎஸ்6 மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அனைத்து வேரியண்ட்களுக்கும் உயர்த்தப்பட்டது.

ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் கேயுவி100 NXT பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் பிஎஸ்6 கேயுவி100 மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 5.54 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கேயுவி100 NXT பிஎஸ்6 மாடல் கே2, கே4, கே6 மற்றும் கே8 என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியண்ட்களிலும் ஒற்றை பிஎஸ்6 ரக பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. கேயுவி100 NXT டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.16 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கேயுவி100 NXT பிஎஸ் 6 கே4 மற்றும் கே6 மாடல்களின் விலை முறையே ரூ. 6.02 லட்சம் மற்றும் ரூ. 6.23 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலில் ஆறு பேர் பயணிக்க முடியும்.
மஹிந்திரா கேயுவி100 NXT பிஎஸ்6 மாடலில் 1.2 லிட்டர் எம்ஃபால்கன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 115 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய என்ஜின் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி கிளாஸ் செடான் மாடலில் புதிய என்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் சத்தமில்லாமல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட சி200 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய என்ஜின் சி200 பிரைம் மற்றும் சி200 புரோகிரெசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 40.90 லட்சம் மற்றும் ரூ. 46.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் மோட்டார் முந்தைய 1.5 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் ஏஎம்ஜி இல்லாத மாடல் மொத்தம் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை ரூ. 4.90 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 51.25 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி200 மாடலில் 1991சிசி நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 201 பிஹெச்பி திறனை 5800 முதல் 6100 ஆர்பிஎம் செயல்திறனில் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9ஜி டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை வெறும் 7.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சமாக 239 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
புதிய மாடலில் பெட்ரோல் என்ஜின் தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இதன் தோற்றம் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனத்தின் புதிய 2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது.
2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 11.13 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவுக்கான பிஎஸ்6 மட்டுமின்றி ஐரோப்பிய புகை விதிகளுக்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய அப்டேட் தவிர மோட்டார்சைக்கிளில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மோட்டார்சைக்கிளில் 765சிசி மோட்டோ2 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 121 பிஹெச்பி பவர், 79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய மாடலில் ட்வின் ஹெட்லேம்ப் வடிவமைப்பு, மெல்லிய எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள் உள்ளிட்டவை முந்தைய மாடலை விட வித்தியாசமாக இருக்கின்றன. மேலும் ஃபியூயல் டேன்க், டெயில் பகுதி உள்ளிட்டவையும் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.
2020 டிரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆர்எஸ் மாடலின் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மாற்றப்பட்டு, புதிய லே-அவுட் வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறங்கள் மற்றும் கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை இந்த மோட்டார்சைக்கிளுக்கு புதுமையான தோற்றத்தை வழங்குகின்றன.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தைக்கு 2019-20 நிதியாண்டு வெற்றிகரமானதாக அமைந்திருக்கிறது. 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2020 நிதியாண்டில் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தை 20.6 வளர்ச்சி பெற்று இருக்கிறது.
2020 நிதியாண்டில் மட்டும் 1,52,000 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. இது 2019 நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 26 ஆயிரம் யூனிட்கள் அதிகம் ஆகும். 2019 நிதியாண்டில் 126000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில் விற்பனையாகி இருக்கும் 1,52,000 யூனிட்களில் 91 சதவீதம் ஸ்கூட்டர் மாடல்கள். மீதமுள்ள மூன்று சதவீதம் மட்டுமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் ஆகும். மேலும் இவற்றில் 90 சதவீத மாடல்கள் குறைந்த வேகத்தில் இயங்கக்கூடியவை என தெரியவந்துள்ளது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனை பற்றிய அறிக்கையை எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் ஆணையத்தின் தலைவர் சோஹிந்தர் ஜில் வெளியிட்டார்.
மேம்பட்ட புதிய என்ஜினுடன் ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான ஜீப் இந்தியாவில் காம்பஸ் பிஎஸ்6 மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 16.49 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போதைய பிஎஸ்4 மாடலை விட ரூ. 89 ஆயிரம் அதிகம் ஆகும்.
பிஎஸ்6 அப்கிரேடுகள் மட்டுமின்றி புதிய காம்பஸ் மாடலில் சில மாற்றங்களை ஜீப் நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. மேலும் ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் வேரியண்ட் நிறுத்தப்பட்டு, தற்சமயம் ஸ்போர்ட் பிளஸ் வேரியண்ட் பேஸ் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்களில் தற்சமயம் அலாய் வீல்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் விண்டோ வாஷர், வைப்பர் மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்ப்டடுள்ளன.
காரின் உள்புறம் 8.4 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், எட்டு வழிகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, டூயல் பேன் பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கின்றன.
ஜீப் காம்பஸ் பிஎஸ்6 மாடல்- 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 160 பிஹெச்பி, 250 என்எம் டார்க் மற்றும் 170 பிஹெச்பி மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகின்றன.
டாடா மோடடார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 2020 நிதியாண்டின் கடைசி காலாண்டு வாக்கில் சர்வதேச அளவில் 35 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,31,929 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.
இதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் விற்பனை 49 சதவீதம் சரிவடைந்து, மொத்தம் 72,608 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 26 சதவீதம் சரிவடைந்து 1,59,321 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.

உலகாளவிய விற்பனையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையும் அடங்கும். இந்நிறுவனம் மொத்தம் 1,26,979 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இத்துடன் செரி ஜாகுவார் லேண்ட் ரோவர் சீனாவில் 6288 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது.
ஜாகுவார் ஒட்டுமொத்த வாரனங்கள் விற்பனை 32,940 யூனிட்களாகவும், லேண்ட் ரோவர் சர்வதேச சந்தையில் 94,039 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
மார்ச் 2019 மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் 11,012 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இது 84 சதவீதம் வரை சரிவாகும். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
சுசுகி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடல் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது. சுசுகி இந்தியா வலைதளத்தில் புதிய வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடலின் டீசரும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடலின் சிறப்பம்சங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு, முந்தைய மாடலில் உள்ள அம்சங்கள், உபகரங்கள் அதிகளவு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

சுசுகி வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடலில் 645சிசி பேரலெல் ட்வின் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்4 மாடலில் இந்த என்ஜின் 71 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. பிஎஸ்6 மாடலிலும் இதே செயல்திரன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சுசுகி வி ஸ்டாம் 650 XT பிஎஸ்6 மாடலும் முந்தைய வெர்ஷன் போன்றே சாம்பியன் எல்லோ மற்றும் கிளேசியர் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இதன் விலை தற்போதைய மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பிஎஸ்4 சுசுகி வி ஸ்டாம் 650 XT மாடல் ரூ. 7.52 லட்சம், எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் எரிபொருள் தேவை 50 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
இந்திய மாநிலங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத காலத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் குறைவான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
கொரனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், எரிபொருள் தேவை சரிந்துள்ளது என சந்தை வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க 90 சதவீதம் எரிபொருள் விநியோக மையங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் (ஹெச்பி) மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை வைத்திருக்கின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் இந்திய எரிபொருள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 61 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவை, எரிபொருள் திரவம் மற்றும் கியாஸ் (எல்பிஜி) பயன்பாடு உள்ளிட்டவை சேர்த்தது ஆகும். மாநில விற்பனையாளர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் கூடுதல் எல்பிஜியை விற்பனை செய்து இருக்கின்றன.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், தற்சமயம் கட்டுப்பாடுகளுடன் சில தொழில்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் சத்தமில்லால் சான்ட்ரோ பிஎஸ்6 கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய சானட்ரோ பிஎஸ்6 கார் விலை ரூ. 4.57 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் பெட்ரோல் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் சான்ட்ரோ கார் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் 2018 ஆண்டு இறுதியில் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் துவக்க விலை ரூ. 3.89 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின் சான்ட்ரோ பேஸ் வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. தற்சமயம் பிஎஸ்6 விதிகள் அமலாகி இருப்பதால், புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சான்ட்ரோ காரின் வடிவமைப்பு டால்-பாய் தோற்றத்தில் காட்சியளிக்கிறது. முன்புறம் கேஸ்கேடிங் கிரில், குரோம் சரவுண்ட்கள், ஸ்வெப்ட்பேக் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. முன்புற கிரில், ஃபாக் லேம்ப் மற்றும் புதிய பம்ப்பர் பகுதிகளை சுற்றி கருப்பு நிற பிளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்படுகிறது.
இத்துடன் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, மிரர் லின்க், பின்புற ஏ.சி. வென்ட்கள், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், யு.எஸ்.பி. போர்ட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் எம்.ஐ.டி., பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதி, பவர் விண்டோக்கள், பின்புறம் வைப்பர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஃபோக்ஸ்வேகன் குழும நிறுவனத்தில் வாகனங்கள் விற்பனை ஒரே மாதத்தில் சுமார் 37 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தங்களது நிறுவன கார்களின் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்து இருக்கிறது. இதில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் கார்கள் விற்பனை 37.6 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பெரும்பாலான உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை மையங்கள் மூடப்பட்டு இருப்பதால் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் மார்ச் மாதத்தில் வாகனங்கள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 44.6 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இதே போன்று மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பகுதிகளிலும் வாகனங்கள் விற்பனை பெருமளவு சரிவடைந்து இருக்கிறது.
பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருவதால் விற்பனை நிலவரம் ஏப்ரல் மாதத்தில் மேலும் மோசமடையலாம் என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் 81 சதவீதம் வரை சரிவடைந்து இருப்பதால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எதிர்கால கணிப்புக்களை திரும்ப பெற்றிருக்கிறது.






