என் மலர்
ஆட்டோமொபைல்

பெட்ரோல் பம்ப்
ஊரடங்கு காரணமாக இந்தியாவின் எரிபொருள் தேவை 50 சதவீதம் சரிவு
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் எரிபொருள் தேவை 50 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
இந்திய மாநிலங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத காலத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் குறைவான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
கொரனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், எரிபொருள் தேவை சரிந்துள்ளது என சந்தை வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க 90 சதவீதம் எரிபொருள் விநியோக மையங்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் (ஹெச்பி) மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகியவை வைத்திருக்கின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் இந்திய எரிபொருள் விற்பனை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 61 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.

நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவை, எரிபொருள் திரவம் மற்றும் கியாஸ் (எல்பிஜி) பயன்பாடு உள்ளிட்டவை சேர்த்தது ஆகும். மாநில விற்பனையாளர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாத துவக்கத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 21 சதவீதம் கூடுதல் எல்பிஜியை விற்பனை செய்து இருக்கின்றன.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், தற்சமயம் கட்டுப்பாடுகளுடன் சில தொழில்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
Next Story






