என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஊரடங்கு நிறைவுற்றதும் இது நடக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் நாட்டில் ஊரடங்கு நிறைவுற்றதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று சரியான பின் உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வாகன உள்கட்டமைப்பு வசதிகள் பலமடங்கு அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2021 ஆம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பு சந்தை 41 லட்சம் யூனிட்களாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இது வருடாந்திர அடிப்படையில் 22.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் காற்று மாசு 60 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இது போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனத்தின் கரோக் எஸ்யுவி மாடலின் நிறங்கள் மற்றும் வேரியண்ட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய கரோக் எஸ்யுவி மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுகம் செய்யும் முன் புதிய கரோக் எஸ்யுவி மாடலின் நிறங்கள் மற்றும் வேரியண்ட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஒற்றை வேரியண்ட்டில் ஆறு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய கரோக் எஸ்யுவி மேஜிக் பிளாக், லாவா புளூ, பிரிலியண்ட் சில்வர், கேண்டி வைட், மேக்னடிக் பிரவுன் மற்றும் குவாட்ஸ் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

இதுதவிர ஸ்கோடா கரோக் எஸ்யுவி மாடலின் முன்பதிவு ஆன்லைனில் துவங்கியுள்ளது. புதிய ஸ்கோடா கரோக் எஸ்யுவிக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவி மற்றும் இதர மாடல்களின் முன்பதிவுகளை வாடிக்கையாளர்கள் ஸ்கோடா வலைதளத்தில் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் ஸ்கோடா கரோக் எஸ்யுவி ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் இந்தியா நிறுவனம் ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளத்தை துவங்கியுள்ளது.
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல் (எஃப்சிஏ) நிறுவனம் தனது ஜீப் மாடல்களை ஆன்லைனில் விற்பனை செய்ய புதிய தளத்தை துவங்கி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் புக் மை ஜீப் எனும் தளத்திற்கு சென்று வாங்க விரும்பும் எஸ்யுவி மாடலை மூன்றே வழிமுறைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.
தற்சமயம் நாடுமுழுக்க கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், புதிய ஆன்லைன் தளத்தை எஃப்சிஏ நிறுவனம் துவங்கி உள்ளது. இந்த தளத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நேரடியாக விற்பனையகம் செல்லாமல் புதிய வாகனத்தை தேர்வு செய்ய முடியும்.

ஜீப் இந்தியா வலைதளத்தில் இணைக்கப்பட்டுள்ள புக் மை ஜீப் தளம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் ஜீப் மாடலின் சரியான வேரியண்ட், பவர்டிரெயின் ஆப்ஷன், நிறம் மற்றும் இதர விவரங்களை தேர்வு செய்யலாம். வாகனம் கான்ஃபிகர் செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
ஆன்லைன் முன்பதிவு நிறைவுற்றதும் புக் மை ஜீப் தளம் வாடிக்கையாளருக்கென பிரத்யேக ஐடியை உருவாக்கி, அதனை வாடிக்கையாளர் வசிக்கும் விற்பனையாளருடன் இணைத்து விடும். பின் விற்பனை மைய அதிகாரி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு டெஸ்ட் டிரைவ் ஏற்பாடு செய்யப்படும்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 91 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ராயல் என்ஃபீல்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 91 யூனிட்கள் விர்பனையை பதிவு செய்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திலும் ராயல் என்ஃபீல்டு இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இந்தியா மற்றும் லண்டனில் இயங்கி வந்த உற்பத்தி பணிகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதவிர அந்நிறுவன அலுவலகங்கள் மற்றும் விற்பனை மையங்களும் மூடப்பட்டு இருக்கின்றன. ஏர்கஸ் மாசம் முழுக்க சென்னையை சுற்றியுள்ள ராயல் என்ஃபீல்டு உற்பத்தி மையங்களும் மூடப்பட்டுள்ளன.

தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சரியான முடிவுகளை எட்டும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக மார்ச் மாத உற்பத்தியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 33 சதவீதம் வளர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
2019 மார்ச் மாதத்தில் 2397 வாகனங்களை மட்டும் ஏற்றுமதி செய்திருந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 3184 யூனிட் வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது.
டொயோட்டா நிறுவனத்தின் மேம்பட்ட யாரிஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டொயோடா நிறுவனம் வாடகைக் கார் உபயோகிப்பாளருக்கென மேம்படுத்தப்பட்ட யாரிஸ் மாடலை வாடகைக் கார் பிரிவினருக்கானதாக அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக வேகக் கட்டுப்பாடு செயல்பாட்டை கொண்ட கருவி பொருத்திப்படுகிறது.
டொயோட்டா யாரிஸ் செடான மாடல் மொத்தம் 7 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8.76 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப், பவர் அட்ஜெஸ்டபிள் மிரர், அட்ஜெஸ்டபிள் டிரைவர் சீட், ரிமோட் லாக்கிங், பவர் விண்டோ, பின் இருக்கை பயணிகள் கைகளை வைக்க வசதியான ஆர்ம் ரெஸ்ட் மற்றும் 3 ஏர் பேக்குகளைக் கொண்டிருக்கிறது.

இது 107 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் சி.என்.ஜி.யில் இயங்கும் மாடலும் கிடைக்கிறது. வாடகைக் கார் உரிமையாளர்களுக்கென சில சுலப நிதி சலுகைத் திட்டங்களையும் இந்நிறுவனம் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டொயோடா மாடல்களில் முன்னர் டீசல் மாடல் கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இது சந்தையில் பெரும் வரவேற்பை பெறவில்லை. தற்போது பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. மாடல்களில் தயாரிக்கப்பட்டுள்ளது விற்பனையை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்களை பராமரிக்க எளிய வழிகளை தொடர்ந்து பார்ப்போம்.
ஊரடங்கினால் 35 நாட்களுக்கும் மேலாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் தொடங்கி கனரக வாகனங்கள் வரை 80 சதவீத வாகனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இருப்பிடத்தை விட்டு நகரவில்லை. பெரும்பாலான வாகனங்கள் தொடர்ந்து ஓடாமல் இருப்பதால் பழுது ஏற்படுமோ என வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எந்த ஒரு வாகனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை பராமரிக்கவும் வேண்டும். அப்போது தான் வாகனங்களில் பழுது ஏற்படாது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் (இருசக்க வாகனங்கள், கார், லாரி, வேன் உள்பட) 35 நாட்களுக்கும் மேலாக நின்ற இடத்திலேயே இருக்கின்றன.
ஒரே இடத்தில் நீண்டநாளாக நிறுத்தி வைத்துள்ள வாகனத்தில் எலி, பாம்பு போன்ற உயிரினங்கள் நிரந்தரமாக வசிக்க தொடங்கும். அப்போது அவை வண்டியில் இருக்கும் ஒயர்கள், சிறிய உலோக குழாய்களை சேதப்படுத்திவிடும். இதனால் திடீரென வாகனத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்.

என்ஜின் ஆயில், பெட்ரோல்-டீசல் போன்றவை உறைந்து போகும். இதனாலும் வாகனத்தின் முக்கியமான பாகங்கள் சேதமடையும். சிறு சிறு குழாய்களில் ஆயில் தேங்கி நின்று அடைப்புகளை ஏற்படுத்தும். பல நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனத்தின் டயர்கள் வெடிக்கும் அபாயம் உண்டு.
குறைந்தபட்சமாக டயர்களில் இருக்கும் காற்று வெளியேறிவிடும். வாகனங்களை நீண்டநாள் இயக்கவில்லை என்றால் பேட்டரி காலியாகிவிடும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் தினமும் வீட்டில் இருக்கும் இருசக்கர வாகனத்தையோ, கார், லாரி, வேன் போன்ற கனரக வாகனங்களையோ ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் என்ஜினை இயக்க வேண்டும்.
பின் வண்டி நிற்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் நகர்த்த வேண்டும். அதாவது வண்டி நின்ற இடத்தில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி தூரமாவது நகர்த்திவிட்டு பின், மீண்டும் இருந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்திவிடலாம். இவ்வாறு செய்வதால் பெட்ரோல்-டீசல் உறையாது.
ஆயில் தன் நிலையில் இருந்து மாறாது. பேட்டரி சார்ஜ் ஆகிக் கொள்ளும். டயர்கள் வீக்கம் அடைந்து வெடிக்கும் நிலையை அடையாது. மொத்தத்தில் வண்டி எப்போதும் தொடர்ச்சியான இயக்கத்துக்கு தயாராக இருக்கும்.
ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது 2020 சூப்பர்ப் செடான் மாடல் காருக்கான முன்பதிவுகளை சத்தமில்லாமல் ஆன்லைனில் துவங்கி இருக்கிறது. 2020 ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஸ்கோடா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய காரை வாங்க முன்பதிவு செய்ய முடியும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் ஆசம்பர செடான் மாடல் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க காஸ்மெடிக் மாற்றுங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிஎஸ்6 ரக என்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சூப்பர்ப் மாடலில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. புதிய என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செடான் மாடலில் பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 மாடல்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா கார் முன்பதிவில் 20 ஆயிரம் யூனிட்களை கடந்து இருக்கிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமுறை கிரெட்டா காரை வாங்க இந்தியாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருக்கின்றனர். இரண்டாம் தலைமுறை கிரெட்டா காரை வாங்க 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்பே புதிய ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்க 18 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து தற்சமயம் கிரெட்டா முன்பதிவு 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. ஊரடங்கு காலக்கட்டத்திலும் கிரெட்டா காருக்கு இத்தனை வரவேற்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என ஹூண்டாய் மோட்டார் நிறுவன விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய தலைமுறை கிரெட்டா காருக்கான விநியோகம் துவங்கும் என ஹூண்டாய் நிறுவனம் உறுதியளித்து இருக்கிறது. கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் விநியோகம் துவங்கும் என தருன் கார்க் தெரிவித்து இருக்கிறார். இதுவரை இந்தியா முழுக்க பல்வேறு விற்பனையாளர்களுக்கு 6703 கிரெட்டா யூனிட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் 2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில சந்தைகளில் இதே மோட்டார்சைக்கிள் எம்எஸ்எக்ஸ் 125 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.
முந்தைய மோட்டார்சைக்கிளுடன் ஒப்பிடும் போது புதிய 2020 குரோம் மாடல் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இரு மாடல்களின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொளஅளப்படவில்லை. புதிய 2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிள் இன்கிரெடிபில் கிரீன், ஹாலோவீன் ஆரஞ்சு, புளூ ரேஸ்ப்பெரி மற்றும் செர்ரி ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

புதிய நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 ஹோண்டா குரோம் மாடலில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.65 பிஹெச்பி பவர், 10.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
குரோம் மோட்டார்சைக்கிளின் முன்புறம் 31 எம்எம் அப்சைடுடவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் இது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்துடன் 2020 குரோம் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், ஆப்ஷனல் ஏபிஎஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன்புறம் 220 எம்எம் டிஸ்க், பின்புறம் 190 எம்எம் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
நிசான் நிறுவனத்தின் புதிய 2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
நிசான் இந்தியா நிறுவனம் தனது 2020 கிக்ஸ் எஸ்யுவி காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடலை நிசான் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது. தற்சமயம் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருப்பதால் நிசான் நிறுவனம் புதிய 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடலை விரைவில் வெளியிடலாம்.

2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிக செயல்திறன் வழங்கும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிக்ஸ் எஸ்யுவி மாடலில் நிசான் நிறுவனம் புதிய ஹெச்ஆர்13 டிடிடி 1.3 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. இது 153 பிஹெச்பி பவர், 254 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும்.
புதிய ஹெச்ஆர்13 டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆர்35 ஜிடி-ஆர் மாடலில் உள்ளதை போன்ற சிலிண்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிசன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது என்ஜின் செயல்திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடலில் எக்ஸ் டிரானிக் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது அதிக மைலேஜ் வழங்க வழி செய்வதோடு, குறைந்த நேரத்தில் அதிவேகமாக பயணிக்க வழிசெய்யும்.
டேட்சன் நிறுவனத்தின் புதிய 2020 ரெடி கோ ஹேட்ச்பேக் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
டேட்சன் நிறுவனம் தனது புதிய 2020 ரெடி கோ மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. புதிய 2020 டேட்சன் ரெடி கோ மாடல் இந்தியாவில் ஊரடங்கு நிறைவுற்றதும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
2020 டேட்சன் ரெடி கோ மாடலின் வெளிப்புறம் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிகளவு மாற்றங்கள் செய்யப்படுகிறது. இதில் புதிய ஹெட்லேம்ப்கள் முன்பை விட அதிக கூர்மையாக இருக்கிறது. இத்துடன் முன்புற கிரில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர L வடிம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், முற்றிலும் புதிய பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
காரின் பக்கவாட்டில் 2020 டேட்சன் ரெடி கோ மாடலில் புதிய வீல்கள், பக்கவாட்டு இன்டிகேட்டர்களின் மேல் டேட்சன் பேட்ஜ் காணப்படுகிறது. தற்சமயம் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் காரின் பின்புற தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இடம்பெறவில்லை. எனினும், பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

2020 ரெடி கோ மாடலின் உள்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இவற்றில் புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இருக்கைகள் மற்றும் இதர உபகரணங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ரெடி கோ மாடல் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறையும் கொண்டிருக்காது என கூறப்படுகிறது. அந்த வகையில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலெர்ட் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 13.20 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் துவங்கும் என கூறப்படுகிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் W5, W7, W9 மற்றும் W11(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் W11(O) வேரியண்ட் விலை ரூ. 17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது.
இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.






