search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6
    X
    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 அறிமுகம்

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் பிஎஸ்6 எக்ஸ்யுவி500 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்பட்ட மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் துவக்க விலை ரூ. 13.20 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட நிலையில், இதன் விநியோகம் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் துவங்கும் என கூறப்படுகிறது.  புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் W5, W7, W9 மற்றும் W11(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 13.20 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் W11(O) வேரியண்ட் விலை ரூ. 17.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
    Next Story
    ×