என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய XL5 காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் பிரீமியம் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் மாருதி XL5 எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய ஸ்பை படங்களில் மாருதி XL5 காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், முன்புற பம்ப்பரில் ட்வீக் செய்யப்பட்ட ஏர் டேம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவற்றின் அருகில் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படலாம்.

    மாருதி சுசுகி XL5 ஸ்பை படம்

    மாருதி XL5 காரிலும் 15 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. இது பார்க்க தற்போதைய வேகன்ஆர் போன்றே காட்சியளிக்கிறது. காரின் உள்புறம் தற்போதைய மாடல்களில் உள்ளதை போன்ற கேபின் வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல் ஏசி யூனிட், 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி XL5 மாடலில் பிஎஸ்6 ரக 1.2 லிட்டர் கே12பி பெட்ரோல் யூனிட் வழங்கப்படலாம். இதே என்ஜின் தற்போதைய வேகன்ஆர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 82 பிஹெச்பி பவர், 114 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீட மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம்.
    ஜாகுவார் நிறுவனத்தின் 2020 எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஜாகுவார் நிறுவனம் இந்திய சந்தையில் எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2020 எஃப் டைப் மாடல் கூப் மற்றும் கன்வெர்டிபில் மாடல்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 95.12 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

    டாப் எண்ட் மாடலான எஃப் டைப் கன்வெர்டிபில் ஆர் பி575 மாடலில் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2.42 கோடி, எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2020 ஜாகுவார் எஃப் டைப் மாடலின் முன்புறம் அதிகளவு மாற்றம் செய்யப்பட்டு மேம்பட்ட இன்டீரியர் வழங்கப்பட்டுள்ளது.

    ஜாகுவார் எஃப் டைப் ஃபேஸ்லிப்ட்

    காரின் வெளிப்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. புதிய எஃப் டைப் ஃபேஸ்லிப்ட் கார் தற்போதைய மாடலை விட நீளமாகவும், அகலமாகவும் இருக்கிறது. எனினும், இதன் அளவீடுகளில் எந்த மாற்றமும் இன்றி ஒரே அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய தலைமுறை ஸ்போர்ட்ஸ் காரில் தற்சமயம் ஜெ வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட்கள், மேம்பமட்ட கிரில் மற்றும் பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறமும் புதிய எல்இடி டெயில் லைட்கள் முன்பை விட மெல்லியதாக வழங்கப்பட்டுள்ளது. 

    2020 ஜாகுவார் எஃப் டைப் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஐ10 கிராண்ட் நியோஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது.
     


    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐ10 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.75 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பிஎஸ்6 டீசல் என்ஜின் மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா என ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலின் மூன்று வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் ஆஸ்டா வேரியண்ட் விலை ரூ. 8.04 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் வேரியண்ட் விலை ரூ.7.90 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் ஐ10 கிராண்ட் நியோஸ்

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிஎஸ்6 டீசல் மாடலில் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 74 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மேம்பட்ட என்ஜின் தவிர காரின் வடிவமைப்பு முழுக்க பிஎஸ்4 மாடலில் உள்ளது போன்றே வழங்கப்பட்டுள்ளது. இதில் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
    கனடாவை சேர்ந்த டெமோன் பேட்டரி மோட்டார்சைக்கிள் நிறுவனம் இரண்டு ஹைப்பர்ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் மாடல்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    பேட்டரியில் ஓடும் மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டெமோன் நிறுவனம் இரண்டு மாடல்களில் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இவை டெமோன் ஹைபர்ஸ்போர்ட் ஆர்க்டிக்சன் மற்றும் மிட்நைட் சன் என அழைக்கப்படுகின்றன.

    இதில் கோ-பைலட் சிஸ்டம் என்ற தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதை ஆன் செய்தால் மோட்டார்சைக்கிளை சுற்றி 360 டிகிரி கோணத்தில் அனைத்து விஷயங்களையும் ஸ்கேன் செய்து பிற வாகன ஓட்டிகளால் இந்த மோட்டார் சைக்கிளை ஓட்டுபவருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அது குறித்து எச்சரிக்கை செய்யும்.

    டெமோன் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    இதில் உள்ள ஷிப்ட் தொழில்நுட்பம் மூலம் வாகனம் ஓட்டும் நிலையை விருப்பம்போல மாற்றிக்கொள்ள முடியும். இந்த இரண்டு மாடலுமே 200 ஹெச்.பி. திறன் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இதனால் 100 கி.மீ. வேகத்தை 3 விநாடிகளில் எட்டி விட முடியும். 

    இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 322 கி.மீ. ஆகும். இதில் உள்ள பேட்டரி முழுமையாக 3 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். கனடாவைச் சேர்ந்த நிறுவனம் விரைவிலேயே சாகச பயணங்களுக்கான பேட்டரி மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
    டொயோட்டா நிறுவனம் இந்திய உற்பத்தி ஆலை பணிகளை படிப்படியாக துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகளை துவங்கியுள்ளது. பணியாளர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. 

    படிப்படியாக வாகன உற்பத்தி பணிகளை துவங்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆலையில் உள்ள தரை முழுக்க கிருமிநாசினி பீய்ச்சி அடிக்கிறது. மீண்டும் பணிகளை துவங்குவதால், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    டொயோட்டா ஆலை

    உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கப்பட்டாலும், இது முன்பை போன்று முழுவீச்சில் செயல்பட துவங்க இன்னும் சிறிதுகாலம் ஆகும் என கூறப்படுகிறது. உற்பத்தி சார்ந்த இதர பணிகளை மேற்கொள்ளும் இதர விநியோகஸ்தர்கள் உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படாததே இதற்கு காரணம் ஆகும்.

    முன்னதாக டொயோட்டா நிறுவனம் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை இந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 3 சீரிஸ் மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என்றும் இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் என்ட்ரி லெவல் செடான் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையகங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெளியானதும், பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் துவக்க விலை ரூ. 33 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம். 

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப்

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அந்நிறுவனத்தின் சர்வதேச மாடல்கள் பிரிவில் புதுவரவாகும். சர்வதேச சந்தையில் இந்த கார் 2019 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மாட்யூலர்  FAAR பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    இது பிஎம்டபிள்யூ குழுமத்தின் அங்கமான மினி பிராண்டில் இருந்து உருவானதாகும். இந்த பிளாட்ஃபார்ம் வாகனத்தில் அதிக இடவசதியை வழங்குவதோடு, உற்பத்தி செலவையும் வெகுவாக குறைக்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் - 220ஐ மற்றும் 220டி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் முறையே 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இவை முறையே 192 பிஹெச்பி மற்றும் 190 பிஹெச்பி பவர் வழங்குகின்றன. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் ஹூண்டாய் சாண்ட்ரோ கார் இந்திய சந்தையில் பேஸ் மாடலாக இருக்கிறது. புதிய கார் சான்ட்ரோ மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்வதற்கான ஆய்வினை ஹூண்டாய் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அந்நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு தலைவர் தருன் கார்க் தெரிவித்தார். 

    புதிய என்ட்ரி லெவல் மாடல் மைக்ரோ எஸ்யுவியாக இருக்கும் என்றும் இது மாருதி எஸ் பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

    ஹூண்டாயின் புதிய என்ட்ரி லெவல் மாடல் இந்திய வாடிக்கையாளர்களில் முதல் முறை கார் வாங்குவோரை கவரும் வகையில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் ஹேட்ச்பேக் பிரிவு அதிக விற்பனையை பெற்று வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, நியோஸ் மற்றும் ஐ10 கிராண்ட் உள்ளிட்டவை அதிக விற்பனையாகி இருக்கிறது.

    இதுதவிர ஹூண்டாய் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் இயான் ஹேட்ச்பேக் மாடலை விற்பனை செய்து வந்தது. எனினும், இந்த மாடலின் விற்பனை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.
    பியாஜியோ இந்தியா நிறுவனம் புதிய வெஸ்பா பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.



    பியாஜியோ இந்தியா நிறுவனம் சத்தமில்லாமல் வெஸ்பா SXL 149 மற்றும் வெஸ்பா VXL 149 ஸ்கூட்டர்களின் பிஎஸ்6 வெர்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎஸ்6 வெஸ்பா SXL 149 விலை ரூ. 1,26,650 மற்றும் வெஸ்பா VXL 149 விலை ரூ. 1,22,664 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    முன்னதாக இரு ஸ்கூட்டர் மாடல்களும் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. புதிய 149சிசி ஸ்கூட்டர்களில் 3 கேட்டலிக் கன்வெர்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அதிகப்படியான காற்று மாசு வெளியேறுவதை தடுக்கும் திறன் கொண்டிருக்கிறது.

    வெஸ்பா SXL 149 பிஎஸ்6, வெஸ்பா VXL 149 பிஎஸ்6

    இரு ஸ்கூட்டர்களும் வெஸ்பா SXL 150 மற்றும் வெஸ்பா VXL 150 மாடல்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 149சிசி, ஒற்றை சிலிண்டர், 3 வால்வ் மோட்டார் மற்றும் எஃப்1 என்ஜின் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது 10.2 பிஹெச்பி பவர், 10.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. 

    புதிய என்ஜின் தவிர பிஎஸ்6 ஸ்கூட்டர்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் புதிய பிஎஸ்6 மாடல்கள் பார்க்க பிஎஸ்4  மாடல்களை போன்றே காட்சியளிக்கிறது. இவை முழுமையான ஸ்டீல் பாடி, மெல்லிய முன்புற தோற்றம், எல்இடி ஹெட்லேம்ப், அலாய் வீல்கள், டிஜிட்டல் கன்சோல், டியூப்லெஸ் டையர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

    சஸ்பென்ஷிற்கு முன்புறம் ஒற்றை சைடுஆம் சஸ்பென்ஷனும் பின்புறம் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 200 எம்எம் வென்டிலேட் செய்யப்பட்ட டிஸ்க் பிரேக், பின்புறம் 140 எம்எம் டிரம் பிரேக், ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது. 
    தமிழக காவல்துறை அதிகாரிகளை கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்கும் பணியினை நான்கு சக்கர ரோபோக்கள் செய்து வருகின்றன.



    சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நுழைந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதற்கு மாற்று வழியை காவல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை இருக்கிறது. 

    இந்நிலையில் கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களை பாதுகாப்பு பணிகளை கவனிக்க ரோபோட் காப் எல்டி-யை பயன்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. இது காவல்துறை அதிகாரிகள் நேரடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது.

    ரோபோட் காப் எல்டி

    இந்த ரோபோட் ரிமோட் மூலம் இயக்கக்கூடியதாகும், மேலும் இது வயர்லெஸ் முறையில் அதிகபட்சமாக ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற பொருட்களால் ஆன ரோபோட் ஒரு வார காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

    மேலும் இது கண்காணிப்பு, உள்ளூர் மக்களுடன் தகவல் பரிமாற்றம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கேமரா மற்றும் இருவழி இன்டர்காம் உள்ளிட்டவை பொது அறிவிப்புகள் மட்டுமின்றி மக்கள் கூறும் தகவல்களை அதிகாரிகள் கேட்க செய்யும் வசதியை கொண்டுள்ளது. 

    ரோபோட் காப் எல்டி-யில் எல்இடி டிஸ்ப்ளே மூலம் தகவல் ஒளிபரப்ப முடியும். இதனால் போலீசார் கொரோனா பாதித்த பகுதிக்கு செல்லாமல் வெளியில் இருந்தபடி உள்ளூர்வாசிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் அடுத்த தலைமுறை ஐ20 மாடலில் புதிய கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க், புதிய ஐ20 காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிநவீன புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

    ஹூண்டாய் ஐ20

    தற்சமயம் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களில் ஹூண்டாய் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, வெர்னா, கிரெட்டா மற்றும் எலாண்ட்ரா என நான்கு மாடல்களில் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றை தொடர்ந்து புதிய டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் புளூலின்க் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் பெறும் ஆறாவது வாகனமாக இருக்கும்.
    இந்திய சந்தையில் வாகனங்களை விற்பனை செய்வது மற்றும் சர்வீஸ் முன்பதிவு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வால்வோ நிறுவனம் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது.



    ஸ்வீடன் நாட்டு கார் உற்பத்தியாளரான வால்வோ தனது வானங்களை ஆன்லைனில் விற்பனை செய்யவும், சர்வீஸ் முன்பதிவுகளை மேற்கொள்ளவும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. 

    புதிய திட்டத்தை வால்வோ நிறுவனம் வால்வோ காண்டாக்ட்லெஸ் புரோகிராம் என அழைக்கிறது. புதிய திட்டத்தில் வால்வோ வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாகனங்களை வாங்க விரும்புவோர் பயன்பெற முடியும். இதில் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சர்வீஸ் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    வால்வோ கார்

    இத்துடன் புதிய வால்வோ கார் வாங்குவோரும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான டெஸ்ட் டிரைவ் வழங்கப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ் நிதி சேவைகள் டிஜிட்டல் முறையிலும், ஆன்லைனில் ஆவனங்களை சரிபார்ப்பது என வாகனத்தை முழுமையாக ஆன்லைன் மூலமாகவே வாங்க முடியும்.

    தற்போதைய கொரோனா பாதிப்பையொட்டி வால்வோ நிறுவன விற்பனையகங்கள் முழுக்க பாதுகாப்பானதாக மாற்ற கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவதாக வால்வோ தெரிவித்துள்ளது. இத்துடன் கார்களை சுத்தம் செய்ய வால்வோ நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
    இந்திய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் சுமார் 32,000-க்கும் அதிக யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் உள்நாட்டில் பஜாஜ் ஆட்டோ ஒரு வாகனத்தையும் விற்பனை செய்யவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை முழுமையாக பாதித்து இருக்கிறது. 

    பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200

    கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க அனைத்து பணிகள் மற்றும் வியாபாரங்கள் முழுமையாக மூடப்பட்டன. இதில் வாகன உற்பத்தி, விற்பனை, சர்வீஸ் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட பணிகளும் அடங்கும். ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக நிறுவனங்கள் படிப்படியாக பணிகளை மீண்டும் துவங்கியுள்ளன.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் 32,009 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இவை ஊரடங்கு துவங்கும் முன் உற்பத்தி செய்யப்பட்டவை என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. எனினும், உள்நாட்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஒரு வாகனத்தையும் விற்பனை செய்யவில்லை.
    ×