என் மலர்
ஆட்டோமொபைல்

ஹூண்டாய் ஐ20
அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்படும் என தகவல்
ஹூண்டாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐ20 காரில் இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐ20 ஹேட்ச்பேக் கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் அடுத்த தலைமுறை ஐ20 மாடலில் புதிய கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க், புதிய ஐ20 காரில் ஹூண்டாய் நிறுவனத்தின் அதிநவீன புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதை தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தற்சமயம் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் வெர்னா மாடல்களில் ஹூண்டாய் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ, வெர்னா, கிரெட்டா மற்றும் எலாண்ட்ரா என நான்கு மாடல்களில் புளூலின்க் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை தொடர்ந்து புதிய டக்சன் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் புளூலின்க் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்த தலைமுறை ஐ20 மாடல் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் பெறும் ஆறாவது வாகனமாக இருக்கும்.
Next Story






