என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் கிராஸ் பிஎஸ்6 மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது புதிய எஸ் கிராஸ் பிஎஸ்6 பெட்ரோல் மாடலை நாட்டில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக புதிய கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் மாருதி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

    இதுதவிர மாருதி நிறுவனம் புதிய எஸ் கிராஸ் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைத்திருந்தது. இதில் காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் அம்பலமானது.

    மாருதி சுசுகி எஸ் கிராஸ்

    அதன்படி புதிய எஸ் கிராஸ் மாடலில் சுசுகியின் 1.5 லிட்டர் SHVS மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் எர்டிகா, சியாஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பிஹெச்பி பவர், 13.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புதிய பிஎஸ்6 மாடலில் மாருதி நிறுவனம் ஆப்ஷனல் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய என்ஜினில் ஐடில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பிரேக் எனர்ஜி ரீ-ஜெனரேஷன் சிஸ்டம், டார்க் அசிஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் முந்தைய மாடல்களை விட புதிய மாடலில் மேம்பட்ட செயல்திறன் மற்றும் மைலேஜ் கிடைக்கிறது. புதிய பிஎஸ்6 ரக என்ஜின் தவிர காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லேம்ப்கள் மற்றும் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
    ஹோண்டா நிறுவனத்தின் பிஎஸ்6 கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    ஹோண்டா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத கட்டணத்தில் மூன்று ஆண்டுகளுக்கு கார் பராமரிப்பு சேவையும் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் ஹோண்டா ஃபிரம் ஹோம் எனும் ஆன்லைன் விற்பனை மையம் மூலமாக சலுகைகளை பெற முடியும். கொரோனா பாதிப்பையொட்டி ஹோண்டா நிறுவனம் இந்த தளத்தினை துவங்கியது. ஹோண்டா நிறுவன பிஎஸ்6 மாடல்களுக்கு மே மாதம் 31 ஆம் தேதி வரை சலுகைகள், தள்ளுபடி மற்றும் பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. 

    ஹோண்டா சிட்டி

    ஹோண்டா சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகள் ஹோண்டா அமேஸ் மற்றும் சிட்டி போன்ற செடான் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை தேர்வு செய்யப்பட்ட மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப மாறுபடும்.

    புதிய சலுகையின் படி ஹோண்டா சிட்டி மாடலின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களில் அந்த வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த தகவலினை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சைமன் வார்புர்டன் தெரிவித்திருந்தார். அந்த வரிசையில் தற்சமயம் ரோட்ஸ்டர், ஷெர்பா மற்றும் ஹண்ட்டர் உள்ளிட்ட மாடல்கள் உருவாக்கப்படுகின்றன.

    எனினும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் Meteor 350 எனும் மாடலை அடுத்ததாக வெளியிட இருக்கிறது. இது ராயல் எஃபீல்டு தண்டர்பேர்டு 350 எக்ஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய Meteor 350 இந்திய சந்தை மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

    புதிய மாடல்கள் தவிர ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கனெக்ட்டெட் தொழில்நுட்பத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் ராயல் என்ஃபீல்டு எதிர்கால மாடல்களில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என தெரிகிறது.

    ராயல் என்ஃபீல்டு புல்லட் 350

    இந்த அம்சம் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இரண்டு அல்லது மூன்று மாடல்களில் நிச்சயம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. 

    ஏற்கனவே டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது வாகனங்களில் இதேபோன்ற தொழில்நுட்பத்தை வழங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் புதிய தொழில்நுட்பத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
    ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் மாடலின் புதிய வேரியண்ட் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் எஸ்யுவி  மாடலை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தியாவில் அறிமுகமானது முதல் இந்த எஸ்யுவி அதிக பிரபலம் அடைந்து வருகிறது. தற்சமயம் இந்த எஸ்யுவி ஐந்து பேர் பயணிக்கக்கூடிய வகையில் கிடைக்கிறது. 

    இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் காம்பஸ் எஸ்யுவி மாடலின் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது மூன்று அடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    ஜீப் காம்பஸ்

    இத்துடன் 4 மீட்டர் அளவுக்குள் எஸ்யுவி மாடல் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் வடிவமைப்பு பார்க்க காம்பஸ் ஃபேஸ்லிப்ட் மாடலை போன்று காட்சியளிக்கும் என தெரிகிறது. 

    புதிய காரில் மேம்பட்ட கிரில், ஹெட்லேம்ப்கள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. ஏழு பேர் பயணிக்கக்கூடிய ஜீப் காம்பஸ் மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்திய சந்தையில் அறிமுகமானதும் இந்த எஸ்யுவி மாடல் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஹூண்டாய் டக்சன், ஸ்கோடா கோடியாக் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் முதற்கட்ட டீசர்களை அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டுள்ளது. புதிய ஸ்கோடா என்யாக் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் ஆகும். இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MEB எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது.

    ஸ்கோடா வெளியிட்டுள்ள முதற்கட்ட புகைப்படங்களில் ப்ரோடோடைப் வாகனம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா என்யாக மாடல் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக உருவாகியுள்ளது. இது ஐடி 4 எலெக்ட்ரிக் மாடலை தழுவிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    ஸ்கோடா என்யாக் டீசர்

    அளவீடுகளில் ஸ்கோடா என்யாக் எலெக்ட்ரிக் கார் 4648 எம்எம் நீளமாகவும் 1877 எம்எம் அகலமாகவும், 1618 எம்எம் உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2765 எம்எம் அளவிலும் பூட்-ஸ்பேஸ் 585 லிட்டர்களாகும். 

    ஸ்கோடா என்யாக் பேஸ் மாடலில் 55kWh யூனிட் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 146 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 340 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். மிட் ரேஞ்ச் மாடலில் 62kWh யூனிட் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 177 பிஹெச்பி செயல்திறனும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 390 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். 

    டாப் எண்ட் மாடலில் 82kWh யூனிட் பேட்டரி வழங்கப்படுகிறது. இது 201 பிஹெச்பி பவர் வழங்கும் என்றம் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் என கூறப்படுகிறது. மேலும் இத்துடன் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகிறது. 
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய 8 சீரிஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப்- 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் விலை ரூ. 1.30 கோடி என்றும் 840ஐ கிரான் கூப் எம் ஸ்போர்ட் எடிஷன் விலை ரூ. 1.55 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனம் டாப் எண்ட் எம்8 கூப் மாடலையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 2.15 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மற்றும் எம்8 கூப் மாடல்கள் அந்நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய 8 சீரிஸ் பிஎம்டபிள்யூ நிறுவனததின் அதிநவீன ஃபிளாக்ஷிப் கூப் மாடல் ஆகும். 

    பிஎம்டபிள்யூ 8 சீரிஸ்

    புதிய பிஎம்டபிள்யூ 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் 5 மீட்டர் நீளமாகவும், 2 மீட்டர் அகலமாகவும் இருக்கிறது. இரு புதிய மால்களிலும் கம்பீர ஸ்டைலிங் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கின்றன. இத்துடன் அதிக அம்சங்கள் மற்றும் எலெக்டிரானிக் வசதிகளும் இரு கார்களில் வழங்கப்பட்டுள்ளன.

    பிஎம்டபிள்யூ 840ஐ கிரான் கூப் மற்றும் 840ஐ எம் ஸ்போர்ட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ எம்8 கூப் மாடலில் 4.4 லிட்டர் வி8 டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 600 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஹூண்டாய் நிறுவனம் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்கியது. முதல் நாளில் இந்நிறுவனம் மொத்தம் 200 கார்களை உற்பத்தி செய்திருக்கிறது.

    கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த ஆலையில் நடைபெற்று வந்த பணிகள் மார்ச் 23 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், உற்பத்தி பணிகளை ஹூண்டாய் மீண்டும் துவங்கியுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 200 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் ஐ20

    மாநில மற்றும் மத்திய அரசுகள் வெளியிட்ட வழிமுறைகளின்படி ஆலை பணிகளின் போது சமூக இடைவெளி 100 சதவீதம் பின்பற்றப்பட்டதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கி இருப்பதால், ஹூண்டாய் நிறுவனம் இந்த மாதத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் யூனிட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் நாடு முழுக்க 255 விற்பனையகங்களில் பணிகளை மீண்டும் துவங்கியது. இதுதவிர இரண்டே நாட்களில் 170 யூனிட்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 
    ஹோண்டா நிறுவனத்தின் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் விலை வெளியான மூன்று மாதங்களில் மாற்றப்பட்டுள்ளது.



    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் டியோ பிஎஸ்6 ஸ்கூட்டர் மாடலின் விலையை மாற்றியுள்ளது. எனினும், டியோ பிஎஸ்6 இரு வேரியண்ட்களின் விலையில் ரூ. 552 உயர்த்தப்பட்டுள்ளது.

    ஹோண்டா டியோ எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் புதிய விலை முறையே ரூ. 60,542
     மற்றும் ரூ. 63,892 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டியோ பிஎஸ்6 இந்தியாவில் வெளியான மூன்றே மாதங்களில் இதன் விலை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹோண்டா டியோ பிஎஸ்6

    முன்னதாக ஹோண்டா டியோ பிஎஸ்6 மாடல்கள் அதன் பிஎஸ்4 மாடல்களை விட ரூ. 5476 மற்றும் ரூ. 7099 வரை விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது ட்ரிப் மீட்டர், கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கிறது. மேலும் இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தார் மாடலின் புதிய ஸ்பை வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    ஸ்பை வீடியோவில் உள்ள மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் மாடல் டியுவி300 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. 2020 மஹிந்திரா தார் ஆட்டோ எக்ஸ்போ விழாவிலேயே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

    மஹிந்திரா தார்

    புதிய தார் மால் தற்போதைய மாடலை விட நீளமாகவும், உயரமாகவும் இருக்கிறது. 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஆஃப் ரோடு எஸ்யுவி நீண்ட செங்குத்தான கிரில், புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் மேம்பட்ட பம்ப்பர்களை கொண்டிருக்கிறது.

    2020 மஹிந்திரா தார் எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. இத்துடன் கன் மெட்டல் ஷேட் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் பார்க்க ஒரே மாதிரி காட்சியளித்தாலும், அளவில் பெரியதாக தெரிகிறது. இதில் வழக்கமான வடிவமைப்பு அம்சங்கள், 7 ஸ்லாட் கிரில், வட்ட வடிவம் ஹெட்லேம்ப்களை கொண்டிருக்கிறது. பின்புறம் புதிய எல்.இ.டி. டெயில் லேம்ப்களை கொண்டிருக்கிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஹோண்டா நிறுவனம் 4 மீட்டர் அளவுக்குள் புதிய எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் இசட்ஆர் வி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி இந்திய சந்தையில் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சர்வதேச சந்தையில் புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன் வெளியீடு தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    ஹோண்டா சிஆர் வி

    இந்தியாவில் ஹோண்டா இசட்ஆர் வி மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய ஹோண்டா இசட்ஆர் வி மாடலில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்படலாம்.

    இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இத்துடன் இந்த கார் 1.2 லிட்டர் iVTEC மற்றும் 1.5 லிட்டர் iVTEC பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் iVTEC டீசல் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நிசான் நிறுவனத்தின் புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    நிசான் நிறுவனம் இந்தியாவில் புதிய கிக்ஸ் பிஎஸ்6 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய எஸ்யுவி மாடலில் பல்வேறு அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் நிசான் கிக்ஸ் பிஎஸ்6 மாடல் நான்கு வேரியண்ட்கள் மற்றும் இரு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய கிக்ஸ் பிஎஸ்6 கார் ஸ்டாண்டர்டு வாரண்டி பேக்கேஜுடன் வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகள் வாரண்டி அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டியை வழங்குகிறது. கூடுதலாக வாரண்டியை ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளும் வசதி வழங்க்படுகிறது.

    நிசான் கிக்ஸ்

    என்ஜினை பொருத்தவரை புதிய கிக்ஸ் எஸ்யுவி என்ட்ரி லெவல் மற்றும் மிட்-ரேஞ்ச் மாடல்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. டர்போ பெட்ரோல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பிரீமியம் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. 

    புதிய கிக்ஸ் பிஎஸ்6 மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 
    நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவன வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய டிவிஎஸ் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.



    இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் திகழும் தமிழக நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தை வாங்கியது. 

    122 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனத்தை வாங்கியதன் மூலம் இந்நிறுவனத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை செய்ய டிவிஎஸ் முடிவு செய்துள்ளது. நார்டன் நிறுவன தயாரிப்புகளுக்கு 21 நாடுகளில் 76 விற்பனை நிலையங்கள் உள்ளன.

    நார்டன் மோட்டார்சைக்கிள்

    சர்வதேச அளவில் பாரம்பரியமிக்க பிராண்டாகத் திகழும் நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவன தயாரிப்புகளில் கமாண்டோ, டோமினேட்டர், வி 4ஆர்ஆர் ஆகிய மாடல்கள் மிகவும் பிரபலமானவை. 

    இவை அனைத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதோடு, இத்தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலப்படுத்தவும் டிவிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    ×