search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா சூப்பர்ப்
    X
    ஸ்கோடா சூப்பர்ப்

    ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ஸ்கோடா கார்

    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது 2020 சூப்பர்ப் செடான் மாடல் காருக்கான முன்பதிவுகளை சத்தமில்லாமல் ஆன்லைனில் துவங்கி இருக்கிறது.  2020 ஸ்கோடா சூப்பர்ப் செடான் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் ஸ்கோடா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதிய காரை வாங்க முன்பதிவு செய்ய முடியும்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 ஸ்கோடா சூப்பர்ப் கார் ஆசம்பர செடான் மாடல் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க காஸ்மெடிக் மாற்றுங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பிஎஸ்6 ரக என்ஜினும் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா சூப்பர்ப்

    2020 ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பிஎஸ்6 ரக 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய சூப்பர்ப் மாடலில் 1.8 லிட்டர் டிஎஸ்ஐ யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. புதிய என்ஜின் 190 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

    புதிய செடான் மாடலில் பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது. முந்தைய பிஎஸ்4 மாடல்களில் டீசல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×