என் மலர்

  நீங்கள் தேடியது "Toyota Yaris"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மே மாத இந்திய விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
  புதுடெல்லி:

  டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் மே மாத விற்பனையில் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மே மாதம் மாட்டும் டொயோட்டா நிறுவனம் 13,940 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதில் 13,113 யூனிட்கள் இந்தியாவிலும், 827 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

  இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனம் 10,914 யூனிட்களை உள்நாட்டிலும் 1,425 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. அந்த வகையில் இந்நிறுவனம் 20% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

  "மே 2018 மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஃபார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா மாடல்களை தொடர்ந்து யாரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டொயோட்டா வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்." என டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன நிர்வாக இயக்குனர் என். ராஜா தெரிவித்தார்.  இந்தியாவில் மே மாத துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் எனும் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்தது. மே மாத இறுதி வரை மட்டும் டொயோட்டா நிறுவனம் 4000 யாரிஸ் யூனிட்களை விநியோகம் செய்துள்ளது. புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. 

  இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
  உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 

  இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டொயோட்டா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யாரிஸ் செடான் மாடல் ஒரே மாத முன்பதிவில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.
  புதுடெல்லி:

  டொயோட்டா இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த யாரிஸ் செடான் மாடல் கார் முன்பதிவு துவங்கிய ஒரே மாத காலத்தில் 5,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய செடான் மாடல் காரின் விலை கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் இதன் விற்பனை கடந்த வாரம் துவங்கியது.

  இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் மாடல் ஹோன்டா சிட்டி மற்றும் ஹீன்டாய் வெர்னா உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய காரின் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், மே மாதம் முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.

  புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
  உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.   இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

  பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

  இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் விலை ரூ.8.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டொயோட்டா நிறுவனத்தின் யாரிஸ் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  புதுடெல்லி:

  டொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடல் காரை இந்தியாவில் வெளியிட்டது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில் இதன் விநியோகம் நாட்டின் அனைத்து டொயோட்டா விற்பனையகங்களிலும் இன்று முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
  உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது. 

  இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன.   பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் டூயல் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 108 பிஹெச்பி பவர், 140 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

  டொயோட்டா யாரிஸ் மாடல் மேனுவல் வேரியன்ட் லிட்டருக்கு 17.1 கிலோமீட்டர் மற்றும் CVT வேரியன்ட் லிட்டருக்கு 17.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்டுஃபையர் ரெட், ஃபேன்டம் பிரவுன், கிரே மெட்டாலிக், சூப்பர் வைட், பியல் வைட் மற்றும் சில்வர் மெட்டாலிக் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.

  புதிய டொயோட்டா யாரிஸ் J, G, V மற்றும் VX என நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. அனைத்து ட்ரிம்களும் மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டொயோட்டா யாரிஸ் இந்திய வெளியீட்டு தேதியை டொயோட்டா இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
  புதுடெல்லி:

  டொயோட்டா இந்தியா நிறுவனம் புதிய யாரிஸ் செடான் மாடலை இந்தியாவில் மே 18-ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய யாரிஸ் மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில் இவற்றின் விநியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  புதிய டொயோட்டா யாரிஸ் செடான் வடிவமைப்பு கூர்மையாக உள்ளது. இதன் மெல்லிய ஹெட்லைட், டெயில்லைட், அகலமான கிரில் மற்றும் பின்ச் ரூஃப்லைன் உள்ளிட்டவை புதிய கொரோல்லா மற்றும் கேம்ரி மாடல்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
  உள்புற கேபின் பெரிய இன்ஸ்ட்ரூமென்டேஷன் செய்யப்பட்டுள்ளது.   இதில் அனலாக் கடிகாரங்கள், 4.2 இன்ச் MID, 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் கொண்ட டேஷ், போல்ஸ்டெர் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், மெல்லிய ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய நெக் ரெஸ்டிரெயின்ட்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

  பாதுகாப்பை பொருத்த வரை யாரிஸ் மாடலில் ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இபிஎஸ், இஎஸ்பி மற்றும் ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. டொயோட்டா யாரிஸ் மாடலில் 1.5 லிட்டர் VVT-i பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 107 பிஎஸ், 140 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.

  இந்தியாவில் டொயோட்டா யாரிஸ் செடான் பேஸ் மாடல் விலை ரூ.8.75 லட்சத்தில் துவங்கி, டாப் என்ட் மாடலின் விலை ரூ.14.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  ×