என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டைகுன் மாடல் துவக்க விலை ரூ. 10.49 லட்சம் ஆகும். இதன் ஜிடி லைன் மாடல் துவக்க விலை ரூ. 14.99 லட்சம் ஆகும். புதிய டைகுன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய டைகுன் மாடல் இந்தியர்களுக்காக இந்தியாவில் உருவாக்கப்பட்டது என வோக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது. இந்த மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வோக்ஸ்வேகன் குஷக் காரின் பிளாட்பார்மிலேயே உருவாகி இருக்கிறது. 

     வோக்ஸ்வேகன் டைகுன்

    டைகுன் மாடலில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட், சக்திவாய்ந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்படுகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்.யு.வி. மட்டும் இந்திய விற்பனையில் குறிப்பிட்ட யூனிட்களை பதிவு செய்தது.

    லம்போர்கினி நிறுவனம் இந்திய விற்பனையில் 300 யூனிட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் லம்போர்கினி தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டாவது லம்போர்கினி தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

    லம்போர்கினி தின கொண்டாட்டங்கள் வார இறுதி நாட்களில் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றது. இதில் 50-க்கும் அதிக வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு லம்போர்கினி கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இத்துடன் பூனே, ஹம்பி மற்றும் டெல்லியில் பிரத்யேக விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டது.

     லம்போர்கினி கார்

    இத்தாலி நாட்டு சூப்பர் கார் உற்பத்தியாளரான லம்போர்கினி உருஸ் கேப்சியூல், ஹரிகேன் எஸ்.டி.ஒ., ஹரிகேன் இவோ ஆர்.டபிள்யூ.டி. ஸ்பைடர் மற்றும் உருஸ் கிராபைட் கேப்சியூல் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது. விற்பனையான 300 யூனிட்களில் 100 யூனிட்கள் உருஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி. டீசர் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி. மாடலை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் மேக்சி ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக யமஹா நிறுவனம் தனது ஏரோக்ஸ் 155 மேக்சி ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

     பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி.

    புதிய பி.எம்.டபிள்யூ. மேக்சி ஸ்கூட்டர் ஆல்-எல்.இ.டி. ஹெட்லேம்ப், பெரிய விண்ட்-ஸ்கிரீன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் டிரிபில் பிளாக், ஆல்பைன் வைட் மற்றும் கலிஸ்டோ கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபிள்யூ. சி 400 ஜி.டி. மாடலில் 350 சிசி, சிங்கில் சிலிண்டர், வாட்டர் கூல்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 பி.ஹெச்.பி. திறன், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தி துவங்கி இருக்கிறது.


    போர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் இகோஸ்போர்ட் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் இகோஸ்போர்ட் மாடல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. 

    இந்த ஆண்டு இறுதிக்குள் போர்டு நிறுவனம் சுமார் 30 ஆயிரம் இகோஸ்போர்ட் மாடல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை ஆலை பணியாளர்கள் யூனியனை சேர்ந்தவர், செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். 

     போர்டு இகோஸ்போர்ட்

    அப்போது, 'சென்னை ஆலையில் திட்டமிட்டப்படி உற்பத்தி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் செயல்படும் ஆலைகளை மூட முடிவு செய்திருக்கும் மூத்த அதிகாரிகளை சந்திக்க யூனியன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,' என அவர் தெரிவித்தார்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ரோஸ் மாடல்களின் சி.என்.ஜி. வேரியண்ட் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய சி.என்.ஜி. மாடல்கள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் அல்ட்ரோஸ் சி.என்.ஜி. மாடல் சோதனை செ்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா கார்

    இதில் சி.என்.ஜி. கிட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களில் சி.என்.ஜி. கிட் வழங்கப்படாது என தெரிகிறது.
    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இ டிரான் ஜிடி எஸ் மற்றும் ஆர்.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    ஆடி நிறுவனம் இ டிரான் ஜிடி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் கார் துவக்க விலை ரூ. 1.80 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஆடி இ டிரான் ஜிடி எஸ் மற்றும் ஆர்.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆடி இ டிரான் ஜிடி ஆர்.எஸ். மாடல் விலை ரூ. 2.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    ஆடி இ டிரான் ஜிடி மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை 469 பி.ஹெச்.பி. திறன், 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதன் ஆர்.எஸ். மாடல் 590 பி.ஹெச்.பி. திறன், 830 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     ஆடி இ டிரான் ஜிடி

    ஆடி இ டிரான் எஸ் மற்றும் ஆர்.எஸ். மாடல்கள் முழு சார்ஜ் செய்தால் முறையே 500 கிலோமீட்டர் மற்றும் 481 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. 

    யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் 155 மேக்சி ஸ்கூட்டர் ஆர்15 மாடலில் உள்ள என்ஜின் கொண்டிருக்கிறது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஏரோக்ஸ் 155 மேக்சி ஸ்கூட்டரை நேற்று அறிமுகம் செய்தது. இந்த மாடல் அப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்.160 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. புதிய ஏரோக்ஸ் 155 ஒற்றை வேரியண்ட் மற்றும் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அதன்படி யமஹா ஏரோக்ஸ் 155 ரேசிங் புளூ, கிரே வெர்மிலான் மற்றும் மோட்டோ ஜிபி நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1,29,000, ரூ. 1,29,000 மற்றும் ரூ. 1,30,500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மோட்டோ ஜிபி நிறம் குறைந்த எண்ணிக்கையிலேயே கிடைக்கிறது. 

     யமஹா ஏரோக்ஸ் 155

    புதிய யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் எல்.இ.டி. ஹெட்லைட்கள், எல்.இ.டி. பொசிஷன் லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட், ப்ளூடூத் சாந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், சைடு ஸ்டாண்டு கட்-ஆப் மற்றும் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளன.

    டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மான்ஸ்டர் சீரிஸ் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    இத்தாலி நாட்டு சூப்பர்பைக் உற்பத்தியாளரான டுகாட்டி, இந்தியாவில் தனது மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் பிளஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய மான்ஸ்டர் மற்றும் மான்ஸ்டர் பிளஸ் மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

    இந்தியாவில் டுகாட்டி மான்ஸ்டர் மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய மான்ஸ்டர் சீரிஸ் டிஜிட்டல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. அறிமுக நிகழ்வை தொடர்ந்து புதிய சூப்பர்பைக் மாடல்களின் வினியோகம் விரைவில் துவங்குகிறது.

     டுகாட்டி மான்ஸ்டர்

    டுகாட்டி மான்ஸடர் மாடல்களில் 937சிசி எல்-ட்வின் டெஸ்டாஸ்டிரெட்டா 11 டிகிரி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 111 ஹெச்.பி. திறன், 93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், டுகாட்டி குயிக் ஷிப்ட் அப் / டவுன் குவிக் ஷிப்டர் வழங்கப்படுகிறது.

    ஆசியாவின் முதல் பறக்கும் கார் கான்செப்ட் மாடலை மத்திய வான்வழி போக்குவரத்து துறை மந்திரி ஆய்வு செய்தார்.


    இந்தியாவில் விரைவில் பறக்கும் கார்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிர் ஆதித்யா சிந்தியா விணாடா ஏரோமொபிலிட்டி நிறுவன குழுவை சந்தித்து பறக்கும் கார் கான்செப்ட் மாடலை சோதனை செய்தார்.

    இது ஆசியாவின் முதல் ஹைப்ரிட் பறக்கும் கார் என்ற பெருமையை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கான்செப்ட் உண்மையாகும் பட்சத்தில் பறக்கும் காரை போக்குவரத்து மற்றும் பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தலாம் என சிந்தியா தெரிவித்தார். 

     பறக்கும் கார்

    மேலும் பறக்கும் கார்களை அவசர கால மருந்துகளை கொண்டு செல்லவும் பயன்படுத்தலாம். முழுமையாக தயாராகும் பட்சத்தில் இந்த ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வி.டி.ஓ.எல். வாகனம் இரண்டு பேரை சுமந்து செல்லும் என விணாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பறக்கும் காரில் கோ-ஆக்சியல் குவாட்-ரோட்டார் சிஸ்டம் உள்ளது.

    இத்துடன் எட்டு பி.எல்.டி.சி. மோட்டார்கள் மற்றும் எட்டு பிட்ச் ப்ரோபெல்லார்கள் உள்ளன. மோட்டார்களை இயக்க இந்த வாகனத்தில் பயோ-பியூவல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பறக்கும் காரில் அதிகபட்சம் 1300 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும். இந்த கார் தொடர்ச்சியாக 60 நிமிடங்களுக்கு மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ, ஸ்கார்பியோ மற்றும் மராசோ மாடல்கள் விலையை மாற்றியது.


    மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. புதிய விலை இம்மாதமே அமலாகிறது. 2021 ஆண்டில் மட்டும் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை நான்காவது முறையாக உயர்த்தி இருக்கிறது.

    விலை உயர்வின் படி மஹிந்திரா மராசோ எம்.பி.வி. மாடல் பேஸ் வேரியண்ட் ரூ. 12 ஆயிரமும், எம் பிளஸ் வேரியண்ட் ரூ. 13 ஆயிரமும், டாப் எண்ட் மாடலான எம்ஜி பிளஸ் வேரியண்ட் ரூ. 14 ஆயிரமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

     மஹிந்திரா பொலிரோ நியோ

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பொலிரோ நியோ மாடலின் என்10 மற்றும் என்10 ஒ வேரியண்ட்கள் விலை ரூ. 30 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்.யு.வி. மாடல் விலை ரூ. 18 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 22 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் 155சிசி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது.


    யமஹா நிறுவனத்தின் தி கால் ஆப் தி புளூ திட்டத்தின் கீழ் புதிய ஆர்15 வி4 மற்றும் யமஹா ஏரோக்ஸ் 155 மேக்சி ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய பிளாக்‌ஷிப் ஆர்15 மாடல் அந்நிறுனத்தின் புதிய ஆர்7 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

    புதிய ஆர்15 வி4 முற்றிலும் புது வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் வி4 ஆர்15 முதன் முதலில் இந்திய சந்தையில் அறிமுகாகி இருக்கிறது. இந்தியாவில் ஆர்15 மாடல் ஆர்15 வி4 மற்றும் ஆர்15 எம்  வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

      யமஹா ஆர்15 வி4

    புதிய ஆர்15 எம் மாடலில் எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் மீட்டர் ஆர்1 மாடலில் உள்ளதை போன்றே இருக்கிறது. இதன் காக்பிட் தோற்றத்தில் எம்1 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஆர்15 சீரிஸ் மாடல்களில் 155 சிசி எல்.சி. 4வி எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.

     யமஹா ஏரோக்ஸ் 155

    யமஹா ஏரோக்ஸ் 155 மாடலில் வெளிப்புறம் பியூவல் டேன்க் பில்லர், எல்.சி.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 140 எம்எம் அகலமான அலாய் வீல், யு.எஸ்.பி. சார்ஜர், 155 சிசி எல்.சி. 4வி எஸ்.ஓ.ஹெச்.சி. என்ஜின் மற்றும் ஏ.பி.எஸ்., ஆட்டோமேடிக் ஸ்டார்ட், ஸ்டாப் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     புதிய யமஹா ரே இசட்.ஆர். 125 எப்.ஐ.

    இவற்றுடன் ஹைப்ரிட் அசிஸ்ட் தொழில்நுட்பம் கொண்ட புதிய யமஹா ரே இசட்ஆர், ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி மாடல்கள் மற்றும் மோட்டோ ஜிபி லிமிடெட் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 

    விலை விவரம்:

    யமஹா ஆர்15 வி4 ரேசிங் புளூ ரூ. 1,72,800
    யமஹா ஆர்15 எம் ரேசிங் புளூ ரூ. 1,77,800 
    யமஹா ஆர்15 வி4 மெட்டாலிக் ரெட் ரூ. 1,67,800 
    யமஹா ஆர்15 வி4 டார்க் நைட் ரூ. 1,68,800 
    யமஹா ஏரோக்ஸ் 155 ரூ. 1,29,000

    யமஹா மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிஷன் மாடல்கள்

    யமஹா எப்.இசட். 25 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1,36,800
    யமஹா எம்.டி. 15 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1,48,900
    யமஹா ஆர்15 வி4 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1,79,800
    யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1,30,500
    யமஹா ரே இசட்.ஆர்.125 எப்.ஐ. மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 81,330

    புதிய யமஹா ஸ்டிரீட் ரேலி 125 எப்.ஐ. ரூ. 83,830
    புதிய யமஹா ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. டி.எக்ஸ். ரூ. 80,830
    புதிய யமஹா ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. எஸ்.டி.டி. டிஸ்க் ரூ. 79,830
    புதிய யமஹா ரே இசட்.ஆர். 125 எப்.ஐ. எஸ்.டி.டி. டிரம் ரூ. 76,830

    வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.


    டெல்லியின் சுபாஷ் நகர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு மாடலை உருவாக்கி அசத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டு பைக் முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியதாக தனியார் பள்ளி மாணவரான ராஜன் தெரிவித்தார். பெட்ரோல் திறன் கொண்ட ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் திறன் வழங்க ரூ. 45 ஆயிரம் செலவானது என அவர் தெரிவித்தார்.

     ராஜன்

    'பள்ளி தொடர்ந்து மூடப்பட்டு இருந்ததால், அருகாமையில் உள்ள இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் மோட்டார்சைக்கிளின் தொழில்நுட்ப விவரங்களை அறிந்து கொண்டேன். பின் பெற்றோரிடம் கேட்டு, பழைய மோட்டார்சைக்கிள் மற்றும் இதர பொருட்களை வாங்கினேன். இதற்கு மொத்தத்தில் ரூ. 45 ஆயிரம் செலவானது.' 

    'ஒரு மாதத்தில் இந்த மோட்டார்சைக்கிளுக்கு தேவையான பொருட்களை வாங்கினேன். பின் மூன்று நாட்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்தேன்,' என ராஜன் தெரிவித்தார். இந்த எலெக்ட்ரிக் ராயல் என்பீல்டை வீட்டில் உள்ள 48 வோல்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்துவிட முடியும்.

    ×