என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பன்ச் மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.


    டாடா நிறுவனத்தின் புதிய மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் பன்ச் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. விற்பனையகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் பன்ச் மாடல் டூயல் டோன் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

    டாடா பன்ச் மாடல் இம்பேக்ட் 2.0 டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டூயல் டோன் பம்ப்பர் உள்ளது. இதன் கீழ்புறத்தில் பாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஹெட்லேம்ப்கள் சற்றே கீழ்புறத்தில் காணப்படுகிறது. ஹெட்லேம்ப்களின் மேல்புறத்தில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் உள்ளன.

     டாடா பன்ச்

    தற்போதைய தகவல்களின்படி டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. ஆப்ஷன் வழங்கப்படலாம்.
    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இம்மாதம் கார்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் புதிய ரெனால்ட் கார் வாங்குவோருக்கு வழங்கப்படுகின்றன. சிறப்பு சலுகைகளுடன் ஆறு மாதங்களுக்கு மாத தவணை விடுமுறை வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ரெனால்ட் ரீலிவ் (R.E.Li.V.E) ஸ்கிராபேஜ் திட்டத்தின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை ரெனால்ட் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஸ்கிராப் செய்து அதற்கு சிறந்த மதிப்பீட்டை பெற முடியும். இதை புதிய கார் வாங்கும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் மாடல்களுக்கு பொருந்தும்.

    ரெனால்ட் க்விட்

    தள்ளுபடி ரூ. 10 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம்
    கார்ப்பரேட் போனஸ் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டிரைபர் 2020 & 2021

    2020 மாடல் தள்ளுபடி ரூ. 25 ஆயிரம்
    எக்சேன்ஜ் பலன் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    2021 மாடல் தள்ளுபடி ரூ. 15 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 10 ஆயிரம்

    ரெனால்ட் டஸ்டர்

    ரெனால்ட் டஸ்டர் 

    தள்ளுபடி ரூ. 20 ஆயிரம்
    எக்சேன்ஜ் போனஸ் ரூ. 30 ஆயிரம்
    கார்ப்பரேட் பலன் ரூ. 30 ஆயிரம்

    ரெனால்ட் கைகர் லாயல்டி பலன் ரூ. 90 ஆயிரம்
    யமஹா நிறுவனத்தின் புதிய மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    யமஹா இந்தியா நிறுவனம் நாளை (செப்டம்பர் 21) இந்தியாவில் புதிய யமஹா ஆர்15 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், மற்றொரு வாகனத்திற்கான டீசரை யமஹா இந்தியா வெளியிட்டு உள்ளது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், புதிய வாகனம் இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் முதல் மேக்சி ஸ்கூட்டர் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் ஆர்15 மாடலில் உள்ளதை போன்றே 155சிசி என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

     யமஹா டீசர்

    இந்த என்ஜின் திறன் ஆர்15 மாடலை விட குறைவாக டியூனிங் செய்யப்பட்டு இருந்தாலும், இந்திய சந்தையில் இது சக்திவாய்ந்த ஸ்கூட்டராகவே இருக்கும். சர்வதேச சந்தையில் யமஹா விற்பனை செய்து வரும் மேக்சி ஸ்கூட்டர்களில் புல் எல்.இ.டி. லைட்டிங், கீலெஸ் இக்னிஷன், ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அந்த வகையில், இவற்றில் சில அம்சங்கள் புதிய ஸ்கூட்டரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யமஹா மேக்சி ஸ்கூட்டரில் எல்.இ.டி. லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
    ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆன்லைன் விற்பனை தளம் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படுகிறது. தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய முடியும்.

    ஓலா எலெக்ட்ரிக் வலைதளத்தில் முன்பதிவு நடைபெறுகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 ஆகும். ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    மேலும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவங்கிய இரு தினங்களில் ரூ. 1100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள  யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன. விற்பனையில் அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு மாடல்களும் முறையே ரூ.2999 மற்றும் ரூ. 3199 மாத தவணையில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 99,999 மற்றும் ரூ. 1,29,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. டைகுன் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில், டைகுன் மாடல் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த தகவலை வோக்ஸ்வேகன் குழும நிர்வாக குழு உறுப்பினர் கிளாஸ் செல்மர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கான உற்பத்தி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

     வோக்ஸ்வேகன் டைகுன்

    ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம்  டைகுன் யூனிட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் எம்.கியூ.பி.-ஏ.ஒ.-ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. டைகுன் மாடல் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட 1 லிட்டர் டி.எஸ்.ஐ. மற்றும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி கோல்டு எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய சபாரி கோல்டு எடிஷன் விலை ரூ. 21.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. ஸ்பெஷல் எடிஷன் எஸ்.யு.வி. மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வேரியண்ட்கள், இரண்டு பிரத்யேக நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய சபாரி கோல்டு எடிஷனிற்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த மாடலின் வினியோகம் துவங்க இருக்கிறது. சபாரி கோல்டு எடிஷன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23.17 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

     டாடா சபாரி

    டாடா சபாரி மாடலில் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் விரைவில் இந்த என்ஜினுடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 130 பி.ஹெச்.பி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் கான்செப்ட் வடிவில் ஆட்டோ எக்ஸ்போ 2020 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

    எக்ஸ்.யு.வி.300 ஸ்போர்ட்ஸ் மாடல் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலையில், இந்த என்ஜின் எக்ஸ்.யு.வி.300 ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 130 பி.ஹெச்.பி. திறன், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    தற்போதைய எக்ஸ்.யு.வி.300 மாடல் - டபிள்யூ4, டபிள்யூ6, டபிள்யூ8 மற்றும் டபிள்யூ8 ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 130 பி.ஹெச்.பி. என்ஜின் டாப் எண்ட் மாடல்களில் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து தனது டியோ மாடலின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆக்டிவா மற்றும் டியோ மாடல்களின் ஸ்பெஷல் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் இவை விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

    ஹோண்டா ஆக்டிவா 6ஜி இரண்டு புது வேரியண்ட்களிலும், டியோ ஸ்கூட்டர் நான்கு புதிய வேரியண்ட்களிலும் கிடைக்கும் என தெரிகிறது. இரு மாடல்களிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. ஆக்டிவா மாடலில் இந்த என்ஜின் 7.68 பி.ஹெச்.பி. திறன், 8.79 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     ஹோண்டா டியோ

    டியோ மாடலில் இந்த என்ஜின் 7.65 பி.ஹெச்.பி. திறன், 9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. ஆக்டிவா மாடல் ஆக்டிவா 6ஜி மற்றும் ஆக்டிவா 6ஜி எல்.இ.டி. வேரியண்ட்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய பன்ச் மாடலுக்கான முன்பதிவை சில விற்பனையாளர்கள் துவங்கி இருக்கின்றனர்.

    புதிய டாடா பன்ச் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா பன்ச் மாடலுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு இதுவரை துவங்கவில்லை. வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

     டாடா பன்ச்

    டாடா பன்ச் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டு உருவாகி வருகிறது. இவற்றில் சில அம்சங்கள் இந்த பிரிவு மாடல்களில் இதுவரை வழங்கப்படாதவைகளாக இருக்கும் என தெரிகிறது. புதிய டாடா கார் நவம்பர் 4 ஆம் தேதிக்கு முன் அறிமுகமாகும் என தெரிகிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் சி3 காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் புதிய சி3 மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாடல் 2022, முதல் அரையாண்டு வாக்கில் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 

    புதிய சிட்ரோயன் சி3 90 சவீத உற்பத்தி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சி3 மாடலின் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம். சிட்ரோயன் சி3 மொத்தத்தில் மூன்று கார்களை கொண்டிருக்கிறது. 

     சிட்ரோயன் சி3

    இவை பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதில் ஒரு மாடல் எலெக்ட்ரிக் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிட்ரோயன் சி3 மாடல் ஐஸ் வைட், பிளாட்டினம் கிரே, ஆர்டென்ஸ் கிரே மற்றும் செஸ்டி ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.
    கியா இந்தியா நிறுவனத்தின் 2021 கார்னிவல் மாடல் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் 2021 கார்னிவல் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கார்னிவல் மாடலின் துவக்க விலை ரூ. 24.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த எம்.பி.வி. மாடல் முந்தைய வேரியண்டை விட பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கிறது. 

    2021 கியா கார்னிவல் விலை விவரம்

    பிரீமியம் 7 சீட்டர் ரூ. 24.95 லட்சம்
    பிரீமியம் 8 சீட்டர் ரூ. 25.15 லட்சம்
    பிரெஸ்டிஜ் 7 சீட்டர் ரூ. 29.49 லட்சம்
    பிரெஸ்டிஜ் 8 சீட்டர் ரூ. 29.95 லட்சம்
    லிமோசின் 7 சீட்டர் ரூ. 31.99 லட்சம்
    லிமோசின் பிளஸ் 7 சீட்டர் ரூ. 33.99 லட்சம்

     2021 கியா கார்னிவல்

    புதிய கார்னிவல் மாடலில் கியா இந்தியா புது கார்ப்பரேட் லோகோ கொண்டிருக்கிறது. கார்னிவல் லிமோசின் மாடலில் லெதர் இருக்கைகள், 8 இன்ச் இன்போடெயின்மெண்ட் , ஓ.டி.ஏ. மேப் அப்டேட்கள், யு.வி.ஓ. சப்போர்ட், இ.சி.எம். மிரர், 10.1 இன்ச் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன.

    2021 கியா கார்னிவல் மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 பி.ஹெச்.பி. திறன், 440 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மீண்டும் மாற்றுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விலை ரூ. 3 ஆயிரம் வரை உயர்கிறது.

    ஆகஸ்ட் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் வாகனங்கள் விற்பனை 22 சதவீதம் சரிவடைந்தது. முன்னதாக பல்வேறு முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களது வாகனங்களின் விலையை அதிகரித்து வருகின்றன. உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதை நிறுவனங்கள் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கின்றன.

     ஹீரோ ஸ்கூட்டர்

    தற்போது வாகனங்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், பண்டிகை காலக்கட்டத்தில் இதே நிலை மேலும் அதிகரிக்கும். எனினும், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட தட்டுப்பாடு இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் இருக்காது என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
    ×